தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

சனி, 24 ஆகஸ்ட், 2013

தலைவா படத் தலைப்பில் TIME TO LEAD என்னாச்சு?

தலைவா ப டம் வருவதற்கு முன்பே பெரிய அலப்பறை... !இது, இப்போதெல்லாம் பெரியபெரிய நடிகர்கள் நடிக்கும் (பெரிய பேனர்) படங்களுக்கு ஒரு விளம்பர உத்தியோ என்று சந்தேகம் வருகிறது....
அம்மாவை உரசும் வசனங்கள்
இருப்பதாகச் சொல்லியோ
வேறு என்ன காரணம் சொல்லியோ
வெடிகுண்டு மிரட்டல்....
காவல்துறை கைவிரிப்பு....
அம்மாவை சந்திகக முயற்சி....
முயற்சி தோல்வி....
உண்ணாவிரத அறிவிப்பு....
அனுமதி மறுப்பு....
தயாரிப்பாளர் கண்ணீர்....
தயாரிப்பாளர் மயங்கி விழுந்து
மருத்துவ மனையில் அனுமதி....

எல்லாம் அடுத்தடுத்து,
விஜய் படங்களில் சுரத்தில்லாமலே வரும் கடைசி (க்ளைமேக்ஸ்) காட்சிகள் போலவே அரங்கேறின...

கடைசியில் எதிர்பார்த்தது போலவே படம் வெளிவந்து, எதிர்பார்த்தது போலவே ஒண்ணுமிலலாத கதை, உதார் நடிப்பு... படம் வழக்கம் போலவே ஊத்திக்கிச்சாச்சு!

ஒன்றை எத்தனைபேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை-முந்திய --மே மாதம் முதல் வந்து அலப்பறை பண்ணிக்கொண்டிருந்த-- விளம்பரங்களில் 
தலைவா என்று  எழுதப்பட்ட தலைப்பு (டைட்டில்) எழுத்தின் அடியில்  TIME TO LEAD னு பெரிசாவே இருந்துச்சு!... 
இப்ப படம கந்தலாகி காயலான் கடைபோகாமலே கருவாடாகி (ஆகஸ்ட்கடைசியில்) வெளிவந்தபோது 
அந்த வரிகளைக் காணோமே?!?!? 

வரிக்குறைப்பின் காரணம் என்னவோ ?!?!?!  

என்னாச்சு ன்னு
யோசிச்சா
உங்களுக்கே
விடை தெரியும்.

சரிங்ணா...
புரியுதாங்ணா...
அடப்போங்ணா...
முந்தி இருந்த மாதிரி
இப்ப டைம் சரியில்லிங்ணா...
அவ்ளோதாங்ணா...

நாலுபடம் நடிச்சதுமே 
நாற்காலிக்கு ஆசைப்படாதீங்ணா..

இந்த விஷயத்தில் நான் அம்மாவைப் பாராட்டுகிறேன். 

7 கருத்துகள்:

 1. வணக்கம் அய்யா, படத்திற்கான விளம்பரமாகத் தான் எனக்கும் தோன்றுகிறது.அரசை விமர்சனம் செய்வது போல் எந்த வசனமும் படத்தில் இடம் பெறவில்லையே? இடம் பெறவில்லையா அல்லது நீக்கப்பட்டதா என்பது அவர்களுக்கே வெளிச்சம். எப்படியோ ரசிகர்களைத் திரையரங்கிற்கு வரவழைத்து விட்டார்கள். இறுதியில் time to lead டைட்டிலை இழந்தது தான் மிச்சம்.

  பதிலளிநீக்கு
 2. வரிக்குறைப்பு கிடைக்காததால் TIME TO LEAD என்ற வரியை குறைத்து விட்டார்களா?

  பதிலளிநீக்கு
 3. /// நாலுபடம் நடிச்சதுமே
  நாற்காலிக்கு ஆசைப்படாதீங்ணா.. ///

  பேராசை...!

  பதிலளிநீக்கு
 4. நண்பர்கள் அ.பாண்டியன், கரந்தை ஜெயக்குமார், முரளிதரன், கவியாழி கண்ணதாசன், திண்டுக்கல் தனபாலன் ஆகிய என் இனிய நண்பர்களின் கருததுகளுக்கு நன்றி. இவர்களின் கருத்துகள் என் கருத்துகளாகவே படுகின்றன என்பதுதான் எனக்கு மகிழ்ச்சி... நன்றி நண்பர்களே

  பதிலளிநீக்கு
 5. படத்தில் பணம் வாங்கிக்கொண்டு நடிப்பவர்களுக்கு நம் இளைஞர்கள் பாலாபிசேகம் செய்கிறார்களே அய்யா. அதனால் தான் அவர்களுக்கு ஆசை வருகிறது. கட்சி ஆரம்பித்தால் தனக்கும் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற ஆசை இவர்களுக்கும் இருக்கிறதே . நாட்டுப்பற்றையும் பக்தியையும் மொழியையும் வளர்த்த நம் நாடகத்தமிழ் தான் இன்று இப்படி ஆகிவிட்டது. வருத்தபடுவதை தவிர வேறு என்ன செய்வது?

  பதிலளிநீக்கு