ஸ்டெர்லைட் வந்த கதையும்.. மக்கள் வீதிக்கு வந்த கதையும்!


இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது.  அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை.

பெரியார் சிலை உடைப்பு எதிர்ப்பு - படை நடைப் பாட்டு


எச்சிலையே!  
எச் சிலையை   
நீ உடைத்தாய் தெரியுமா?
     ----நா.முத்துநிலவன்----
தலையை எடுத்த தறுதலையே!
      தாழ்ந்து கிடந்த தலைமுறை
தலையெ டுக்கச் செய்தவரின்  
      தலையை எடுப்ப தாரடா?!
சிலையைஉடைத்து போட்டுவிட்டால்
      சிந்தை உடைந்து போகுமோ?!
அலையை உடைக்கப் பார்க்கிறாய்
      அறிவில் லாத மூடனே!
    

“வீதி-50” விழாவை நோக்கி…


“புத்தக மாலை”யுடன் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்ட ஃபிரான்சு இதழாசிரியர், கவிஞர் தமிழ்நெஞ்சம் அமின். அருகில் வீதி முன்னோடி பாவலர் பொன்.க., தங்கம் மூர்த்தி, பீர்முகமதுவுடன் வீதி நண்பர்கள்

சங்க காலம் முதல் தமிழ் இலக்கியத்துடன் இரண்டறக் கலந்து பயணம் செய்யும் மண் புதுக்கோட்டை மண்!
ஏராளமான இலக்கியப் படைப்பாளிகளை தொடர்ந்து தந்து கொண்டே யிருக்கும் பூமி. அதன் நீட்சியாக வீதி எனும் இலக்கிய கலைஇலக்கிய அமைப்பு கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

நமக்குச் சோறுபோடும் விவசாயிகள் இப்போது பாடமும் நடத்துகிறார்கள்


மும்பை மக்களுக்கு எல்லா மொழிகளிலும் பிடிக்காத வார்த்தை, ‘போராட்டம்’. இந்தியாவின் பிஸியான பிசினஸ் தலைநகரம் எந்தத் தொந்தரவையும் விரும்புவதில்லை. 
அதிலும், திங்கள்கிழமை காலை என்பது டென்ஷன் நேரம். குறிப்பாக, மார்ச் 12 அன்று பள்ளி மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வேறு. மும்பையின் புறநகர் மைதானம் ஒன்றில் முகாமிட்டுத் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் 50 ஆயிரம் பேர், அந்தத் திங்கள்கிழமையில்தான் ஆர்ப்பரித்து நகருக்குள் நுழைந்து சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். 

தமுஎகச 2017-கலை-இலக்கிய விருதுகள் ரூ.50,000 பெறவருக!



2017 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள் /குறுந்தகடுகள் வரவேற்கபடுகின்றன

2017
ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள்/தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும்.

ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள் 2018 ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால்/கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்: 
அனுப்ப வேண்டிய முகவரி -

நா.முத்துநிலவன் நேர்காணல்



“தமிழ்நெஞ்சம்”

ஃபிரான்சில் வெளிவரும் அச்சு மற்றும் இணைய இதழ்.
இதில் எனது நேர்காணலை எடுத்து வெளியிட்ட
இதழின் இணையாசரியரும், புதுச்சேரியின் புகழ்மிகு பெண்ணியச் செயற்பாட்டாளருமான முனைவர் செல்வக்குமாரி அவர்களுக்கும்,
இதழாசிரியர் திருமிகு தமிழ்நெஞ்சன் அவர்களுக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

உலகத் தாய்மொழி தினவிழா



பழமை மட்டுமல்ல தமிழின் பெருமை!
தொடர்ச்சியான பயன்பாடே உண்மையான பெருமை!
கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-மார்ச்-1.     
     பழம்பெருமை மட்டுமல்ல தமிழின் பெருமை! மூவாயிரம் ஆண்டுக் காலத் தொடர்ச்சியான பயன்பாட்டுப் பெருமையே தமிழின் உண்மையான பெருமைஎன்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.

சிரியாவும் ஸ்ரீதேவியும்

சிரியாவில்
குழந்தைகள்மேல்
குண்டுபொழியும்
விமானங்களை விடவும்
ஸ்ரீதேவியின்
பிணத்தைக் கொண்டுவரும்
விமானத்துக்கே
முக்கியத்துவம் தரும்
மீடியாக்கள்!
நாம் என்ன 
தீவிரவாதிகளா?
இல்லை,
வளர்ந்துவரும் 
தீவிர வியாதிகள்!
-----------------------------------------

வலைப்பதிவர்களுக்கு வருமானம் வரப்போகிறது!



தமிழ் இணைய எழுத்தாளர்களுக்கு கூகுள் ஆட்சென்ஸ்வருமானம் தருமா?

தமிழ் வலைப்பதிவர்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறதுகூகுள்நிறுவனம். ஆட்சென்ஸ்’ (AdSense) விளம்பர சேவையின் ஆதரவு பெற்ற மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இடம்பெறுவதாக கூகுள் அறிவித்திருக்கிறது. இது இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் வருவாய் ஈட்டுவதற்கான வழியாக அமைந்திருக்கிறது.

இணையத்தில் நமது நூல் பற்றி!




இணையத்தில்

நமது 

“முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!”
(இரண்டாம் பதிப்பு)

புத்தக அறிமுகம், விமர்சனம்!


நன்றி –

(1)  திரு வீரகடம்ப கோபு, திண்டுக்கல்  
இணைப்பு- 


நன்றி –

(2) தோழர் துரை.சண்முகம் - “வினவு” தளம் 
இணைப்பு-

---------------------------------------- 

அடுத்து

“மேன்மை” பதிப்பக வெளியீடுகளாக

வரவிருக்கும்
நமது இரண்டு நூல்களும் வெளிவர,
சற்றே தாமதமாகிறது!
அவற்றில்தான்
நமது நண்பர்கள் எழுதிய பின்னூட்டங்களே
முன்னுரையாக இடம்பெறுகின்றன!
வந்ததும் தெரிவிப்பேன்!
நன்றி!