தமிழ்நாடு அரசின் பெருமைக்குரிய ஓர் அங்கமான
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
அருமையானதொரு பணியை முன்னெடுத்திருக்கிறது
“தமிழாயிரம்” எனும் தலைப்பில்
ஆயிரம் காணொலிகளைத் தயாரித்து
உலகத் தமிழரிடம்
வழங்குவது என்பதே அது!
36 நிமிடத்தில் முடியும்
காணொலி காணவும் கேட்கவும்
படத்தின் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக:
https://youtu.be/qGkGEAGytjs?
இனி அவர்கள்
தந்திருக்கும் குறிப்பு இதோ:
-------------------------------------------
"உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும்
தமிழ் உயர்கல்விக் கான உலகளாவிய புதுமைத் திட்டம்
(தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை)
International Innovative Learning Programe
for Tamil (IILPT)
இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல்
நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள்,
பழங்குடியினவியல், காப்பியம், தொல்லியல் எனத்
தமிழியல் வகைமைகளுள்
பாட வல்லுநர்களைக் கொண்டு
எளிய நடையில் காணொலிகள் அமையும்.
உலகலாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கான
தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும்,
உலகளாவிய தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், உயர்கல்வி
பயிலும் மாணவர்கள், போட்டித் தேர்வர்கள்,
ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும்
பயனுள்ளதாகவும் அமையும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
"தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ்,
திருக்குறளுக்குக் காலந்தோறும் எழுதப்பட்ட
உரைகளைக் கடந்து நிற்கும்
அதன் மெய்யான பொருளையும்
சமூக உண்மையையும் எடுத்துரைக்கிறார்
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்.
தமிழார்வலர்கள், மாணவர்கள் மற்றும்
ஆய்வாளர்கள் திருக்குறளைப் புதிய கோணத்தில்
அணுக உதவும் சிறப்பான உரை"
-----------------------------------
இதன் முதல் காணொலியாக
நமது மதிப்பிற்குரிய
முனைவர் வீ.அரசு அவர்களின் உரை
முதல்நாள் வெளியானது.
தொடர்ந்து இரண்டாவதாக
இதோ நமது உரை!
தொடர்ந்து பார்த்து
உ.த.ஆ.நி.வலையொளியில்
இணைந்து தொடர்ந்து
வாருங்கள் நண்பர்களே!
---------------------
அறிஞர்கள் - படைப்பாளிகளின்
உரைவரிசையில்
நமது புலவர் கும.திருப்பதி,
முனைவர் மகா.சுந்தர்,
எழுத்தாளர் அண்டனூர் சுரா.
உள்ளிட்ட நம் நண்பர்கள் பலரின்
உரைகளும் வருகின்றன.
(எனது மற்றோர் உரையும் உண்டு!
திட்டமிட்டபடி பிறகு வரும்)
----------------------------------
நிறுவனத்தின் திட்ட முதன்மையர்
முனைவர் நா.சுலோசனா அவர்கள்
எடுத்த விடா முயற்சியின் வெற்றியிது!
ஒளிப்பதிவு முதல் படத்தொகுப்பு மற்றும்
தேவையான படங்களைச் சேர்க்கும் பணியை
மிக நேர்த்தியாகச் செய்திருக்கும்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நண்பர்கள்
திருமிகு ஈரம், திருமிகு சபரி
உள்ளிட்ட பலரும்
மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
அவர்களுக்கு எனது
அன்பும்
நன்றியும்
------------------------------------
கேட்டவுடன் பார்த்தவுடன்
பிடித்திருந்தால் கருத்திடுங்கள்.
நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே!
------------------------------
அருமை💐💐💐
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதமிழ் பற்றி ஆயிரம் காணொளிகளைத் தங்களைப் போல் இப்படி தகைசால் பெருமக்களின் உரையால் தொகுப்பது என்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான முயற்சி ஐயா! இப்படி ஒரு பெருமுயற்சிக்குக் காரணராய்த் திகழும் முனைவர் நா.சுலோசனா அவர்களுக்கும் குழுவின் இன்ன பிறருக்கும் தமிழ்கூறு நல்லுலகம் சார்பில் சிறியேனின் நன்றி! இந்த வரிசையில் தேமொழி, ஆர்.பாலகிருஷ்ணன், திருவள்ளுவன் இலக்குவனார், சுபாசிணி ஆகியோரும் பேசினால் நன்றாக இருக்குமே!
பதிலளிநீக்குதிருக்குறள் மதிப்புமிக்கது என்பது உணரப்படுவதாலேயே உணர்ந்த எல்லோராலும் கவரப்படுகின்றது.அறிதோறும் அறியாமையும், அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது என்ற குறள்களுக்கேற்ப ஆயிரம் உரை வந்தாலும் மூலத்தை அறிய முயன்றுதான் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஉரைகளை மீறி நிற்கும் உண்மைக் குறள்
என்ற தலைப்பே திருக்குறளின் உண்மை.
கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு ம் ஆர்வலர்களை ஊக்கப்படுத்துவதற்கும் எனது நன்றி.
ப.சந்திரமோகன்@சென்னை
9444323659
மிகவும் அருமை ஐயா
பதிலளிநீக்குமிகவும் அரிய செய்திகள் தாங்கிய உரை. மு. வ. உரை எளிமையும் சிறப்பும் உடையது எனத் தெரியும். இத்தனை பிரதிகள் விற்பனையானது என்பது வியப்பு.
பதிலளிநீக்குவள்ளுவமாலையின் குறைகள் யாரும் இதுவரை சொல்லாதது. ஏனெனில், இது போன்ற பழைமை சார்ந்தவற்றை விமர்சிக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் இங்கு ஊறிப் போயுள்ளது. வ. உ. சி பற்றிய செய்திகளும் அருமை.
பரிமேலழகர் உரையின் ஒரு சார்பு திரிபுக் கருத்துக்களை கண்டிப்பதோடு, அவரின் உரை சால்பின்
பெருமையையும் உரைத்தது சிறப்பு.
சாலமன் பாப்பையா உரை பற்றிய செய்திகள் சிறிது நீண்டு விட்டதாக நினைக்கிறேன். இது எனது கருத்தே.
திருக்குறள் போலவே
செறிவான, விரிவான உரை.
கும. திருப்பதி
பதிலளிநீக்குஅய்யா மிகவும் அருமையான தகவல்கள். .,you tube காணொலியில் பதிவிட்டுள்ளேன்.அகரம் முதல் அனைத்தையும் விளக்கமாக தெளிவான உரையில் அளித்தமை மேற்கோள்கள் பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியது.தகவல் திரட்டியமை உரிய இடம் கூறி விளக்கியமை அற்புதம்.தொடரட்டும் தங்கள் தமிழ்ப் பணிவணக்கங்களுடன் முனைவர் சரளா புருசோத்தமன், பெங்களூரு10
பதிலளிநீக்கு