ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு! புதுக்கோட்டைக்கு வருக!

தமிழ்க் கவிஞர்களுக்கோர் நற்செய்தி!

கவிக்கோட்டையாம் புதுக்கோட்டை அழைக்கிறது! 

ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு!

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்,

இனிய நந்தவனம் இதழ் மற்றும்

உலகத் தமிழ் ஐக்கூ கவிஞர்கள் மன்றம்

இணைந்து நடத்துகின்றன.


மாநாட்டிற்கு  

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவரும்

விரல்விட்டு எண்ணத்தக்க

மிகச்சிறந்த கவிஞருமான

அருமைச் சகோதரர்

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

தலைமை வகிக்கிறார்கள்


சிறப்புத் தகவல்கள்:

 

நாள்: மே 17, 2026 ஞாயிற்றுக்கிழமை முழுநாளும்

இடம்: மகராஜ் மகால், புதுக்கோட்டை,

சிறப்பு: இது ஐந்தாவது தமிழ் ஐக்கூ உலக மாநாடு ஆகும்.

பங்கேற்பாளர்கள்: உலகத் தமிழ் ஐக்கூ கவிஞர்கள்

ஏற்கெனவே 2022 தொடங்கி 2025 முடிய

முதல் மாநாடு திருச்சியிலும்,

இரண்டாவது மாநாடு அந்தமானிலும்,

மூன்றாவது மாநாடு மதுரையிலும் 

நான்காவது மாநாடு இலங்கையிலும், 

நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஐந்தாவது மாநாடு புதுக்கோட்டையில்!


இதோ 

முன்னோட்டத் தகவல் 

அழைப்பிதழ்

 







---------------------------------------------  

முகநூலில் தொடர 

https://www.facebook.com/thangam.moorthy.3/

மற்றும் 


https://www.facebook.com/haiku.mumu/


மேலும்


https://www.facebook.com/groups/HSWTP100/posts/33870859352557999/


--------------------------------------------------------

இப்போது, ஐக்கூக் கவிதையின் முன்னோடியாகத் திகழும் –

கவிஞர் மு.முருகேஷ் அவர்கள்,

புதுக்கோட்டையில் இருந்தபோது

முதன்முதலாக வெளியிட்ட –

விரல் நுனியில் வானம்” அய்க்கூ நூலுக்கு

நான் எழுதிய முன்னுரை படிக்க-

https://valarumkavithai.blogspot.com/2013/09/blog-post_29.html

(இந்த முன்னுரை, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின்

தமிழ் ஆய்வு மாணவர்க்கான பாடநூலில்

இடம்பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது)

-    மேலும் -

தமிழ் – ஆங்கிலம் – இந்தி 

 மூன்று மொழிகளில் வெளிவந்த,

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 

மலர்க ஐக்கூ” 

மும்மொழி நூலை முன்வைத்து

கணையாழிஇலக்கியத் திங்கள் இதழில்

நான் எழுதிய மதிப்புரை

https://valarumkavithai.blogspot.com/2020/12/blog-post_14.html

வாய்ப்பிருப்போர் படித்துப் பார்க்கலாம்

------------------------------------------------------------

அனைவரும்

கவிதைக் கோட்டையாகத் திகழும்

புதுக்கோட்டைக்கு

வருக வருக என

அன்போடு அழைக்கிறோம்

-------------------------------------

முன்னோட்ட அழைப்பிதழ் பார்த்துப்

பதிவு செய்யுங்கள்,

-------------------------------------

நூல் வெளியிடத் தயாராகுங்கள்

-------------------------------------

தொகுப்பில் இடம்பெற ஐக்கூ அனுப்புங்கள்

-------------------------------------

மாநாட்டுக்குத் தவிராது வருக கவிஞர்களே!

(தவறாது வருக என்பது, தவறான தொடர். 

தவிராது -தவிர்க்காது எனப் பொருள் தரும் 

சரியான சொல்தான்)

----------------------------------------- 

வணக்கம்

-நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

------------------------------------- 

3 கருத்துகள்:

  1. புதுக்கோட்டையை தொடர்ந்து புத்தம், புதிதாகவே வைத்துள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. ஆகா! ஐக்கூ என்கிற ஒரு கவிவடிவத்துக்கு மட்டுமே உலக விழா எடுக்குமளவுக்குத் தமிழ்க் கவியுலகம் பரந்து விரிந்திருக்கிறது என்பதை அறிய நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது ஐயா! ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கிறது எனும்பொழுது நான் கொள்ளும் இந்தப் பெருமிதம் மிகையில்லை என்றும் படிப்போர் உணர்வர். பெருமண்டமான விழா! மிக்க மகிழ்ச்சி!! இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் புதுகைக் கவிக்குயில்களெல்லாம் ஐக்கூவெனக் கூவும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மாநாடு சிறக்க வாழ்த்துகள் தோழர்

    பதிலளிநீக்கு