கவிதையின் கதை
திருச்சி வானொலி – எனது உரைப் பதிவு
இன்று 21-03-2025 உலகக் கவிதை நாள்
இதையொட்டி, இன்று காலை திருச்சி வானொலியில் ஒலிபரப்பான
எனது 26நிமிட உரை ஒலிப்பதிவு இது –
நான் எழுதிவரும் ‘கவிதையின் கதை’ பெரு நூலின் சுருக்கம் இது
கடந்த கரோனாக் காலத்தில்-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
புதுக்கோட்டை மாவட்டக் குழு நடத்திய
இணைய நிகழ்வில் இதை முதன் முறையாகப் பேசினேன்.
பிறகு –
தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றத்தின்
மாநிலக் குழு நடத்திய மாநிலம் தழுவிய
இணைய நிகழ்வில் பேசினேன்
2023இல் –
நியு-யார்க் தமிழ்ச் சங்கத்தின்
இலக்கியக் குழுத் தலைவராக இருந்த
நண்பர் ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் அவர்கள்
கேட்டுக் கொண்டபடி ஃபெட்நா – 23 சிறப்பு மலரில்
கட்டுரைச் சுருக்கமாக எழுதினேன்.
அதன் விளைவாக –
கடந்த ஃபெட்நா – 2024 நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டு கடந்த சூலை-4,2024ஆம் தேதி முதல் 15நாள்கள் –
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக
சான் ஆண்டோனியோ (டெக்சஸ்), அட்லாண்டா,
நியு-இங்கிலாந்து (போஸ்டன்),மற்றும்
நியு-யார்க் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன்.
(இதுபற்றித் தனியாக விரிவாக எழுத வேண்டும்.
தலைவர் பாலா.சுவாமிநாதன், செயலர் கிங்ஸ்லி,
செயற்குழுவினர் சகோ.ரம்யா, பிரதிபா பிரேம்
மற்றும் அட்லாண்டாவிற்கு என்னை அழைத்துச் சென்ற
தங்கை கிரேஸ்பிரதிபா,
பாஸ்டன் தம்பி அருண்-தமிழ்ச்செல்வி
நியுயார்க் தமிழ்ச்சங்க நிருவாகிகள்
இனிய நண்பர் ஆல்ஃபி
உள்ளி்ட்ட பலருக்கும்
நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இதுபற்றி விரிவாக எழுத வேண்டும்)
----------------------------------------
இவ்வளவுக்கும் காரணம் இந்த ‘கவிதையின் கதை”தான்!
மற்றும் நான் பேசிய இணைய உரைகள்தாம்!
இதோ – இப்போது திருச்சி வானொலியின் காற்றலை வழியாக –
கேளுங்கள் கேட்டு விட்டுப் பேசுங்கள் –
இந்த இணைப்பைச் சொடுக்கிக் கேளுங்கள்
இதற்கு நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்லவேண்டும் –
ஒருவர் திருச்சி வானொலி நிகழ்ச்சி அமைப்பாளரும்
தொடர் வாசிப்பாளரும் என் இனிய நண்பருமான
திருமிகு அடைக்கலராஜ்
என்னோடு அவ்வப்போது பேசி வானொலியில்
எதையாவது பேச வைக்கும் பேரன்பிற்கு...
மற்றவர் –நான் என் போக்கில் சுமார் 50 நிமிடம் பேசிய
உரையின் சாரம் குறையாமல், மையம் நகராமல்,
தொடர்ச்சி அறாமல், 28 நிமிடத்திற்கு
அழகாகத் தொகுத்து விட்ட திருச்சி வானொலி நிலையத்
தொகுப்பாளரும், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின்
பேத்தியும் ஆன அன்புச் சகோதரி தனலட்சுமி
அவர்களின் பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது
-----------------------------------------------------
இதையே பெருநூலாக -கிட்டத்தட்ட 800-900 பக்கங்களில்-
கவிதையின் கதை என்னும் தலைப்பிலேயே
எழுதி வருகிறேன். பார்க்கலாம் விரைவில்...
-----------------------------------------------
சிறப்பு ஐயா
பதிலளிநீக்குஅருமை👍👍
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா