நடத்தினால் எதையும் பெரிதாகவே நடத்திப் பழகியவர்
கவிஞர்
தங்கம் மூர்த்தி
அவர் தலைவராக இருக்கும்
புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பாக,
கடந்த ஆண்டு நடத்திய
புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த
‘பேக்கரி மகராஜ்” சீனு சின்னப்பா அவர்களின்
நினைவைப் போற்றும் வகையில்
அவரது அன்புமகன்
திருமிகு அருண்சின்னப்பா அவர்கள்
தனது
தந்தையார் பெயரில் வழங்கும்
ரூபாய் ஒருலட்சம் மதிப்பிலான
இலக்கிய விருதுகளை வழங்க
விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.
விருதுபெற்ற அனைவரையும்
வாசலிலேயே மாலையிட்டு வரவேற்று
மேடையில் அமரவைத்து
மரியாதை மிகுந்த விருதுகளை வழங்கியது
இன்னும் நினைவில் இருக்கிறது.
இதோ இரண்டாமாண்டு
விருதுகள் அறிவிப்பு வந்துவிட்டது.
விருதுகள் அறிவிப்பு இதோ-
கடந்த ஆண்டு நடந்த
விழா நிகழ்வுப் பதிவுகளைப் பார்த்தால் புரியும்
---------------------------------------------------------------
இதோ 2024 நிகழ்வுப் பதிவுகள்:
அப்புறம் என்ன?
படைப்பாளிகளைக் கொண்டாடும்
விருதுவழங்கும் விழாவில் பங்கேற்க
இப்போதே உங்கள் நூல்களை அனுப்புங்கள்
இதை உங்கள் நண்பர்களுக்கும்
தெரிவித்து அவர்களையும்
பங்கேற்கச் செய்யுங்கள்
வாழ்த்துகள்
-------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக