எனது வானொலி உரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது வானொலி உரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“நம்மொழி செம்மொழி” - எனது வானொலி உரை கேட்க வருக!

வரும் 06-06ஆம் தேதி

சனிக்கிழமை, 

நம்மொழியாம் தமிழ்மொழி

செம்மொழி என 

(இந்தியாவின் முதல் செம்மொழியாக)

அறிவிக்கப்பட்ட நாள்!

இந்தியாவில் இதுவரை 11 மொழிகள் 

செம்மொழிகளாக 

(Classical Languages) 

இந்திய அரசினால்

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன!

அவை யாவை?

தமிழ் (2004)

சமஸ்கிருதம் (2005)

தெலுங்கு (2008)

கன்னடம் (2008)

மலையாளம் (2013)

ஒடியா (2014)

மராத்தியம் (2024)

வங்காளம் (2024)

பாலி (2024)

பிராகிருதம் (2024)

அசாமியம் (2024)

---------------------------------------------------


உலக அளவில் ஒரு மொழியை

செம்மொழி 

என்பதற்கான தகுதிகள் என்னென்ன?

உலக, இந்திய செம்மொழிகள் யாவை?

இந்த வரலாறுகளையெல்லாம்

நாம் அறிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக இன்றைய “ஜென்-ஸிக்கள்”

அறிந்து கொள்ள வேண்டும்

இவற்றைக் குறிப்பாகவும்,

தமிழின் செம்மொழிநூல்களாக 

அறிவிக்கப்பட்டுள்ள

41 பழந்தமிழ் நூல்கள் யாவை?

எனும் பட்டியலோடு

அவற்றின் சாரம் பற்றியும்

நான் பேசியுள்ள

நம்மொழி செம்மொழிஎன்னும் 13நிமிட உரை

வரும் 06-06-2026 சனிக்கிழமை

காலை 08-02 மணிக்கு (செய்திக்குப் பிறகு)

திருச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது.

இதனை

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நகரங்களான 

சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி

மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வானொலி நிலையங்கள்

அதே நேரம், பகிர்ந்து ஒலிபரப்ப உள்ளன.

--------------------------------------

இதே உரை,

திருச்சி வானவில் பண்பலை நிலையத்தில்

ஒலிபரப்பாகும் நேரம்:

நண்பகல் 01-30

(அது இல்லன்னா இது! 

என்னும் நண்பர்களும்

எனது உரையை மீண்டும் கேட்க விரும்பும் 

அன்பர்களும்

(அப்படி யாரும் இருக்கீங்க?!)

கேட்டுக்கலாம்!)

-------------------------------------- 

நம் நண்பர்களைக் கேட்டு மகிழவும்

தம் நண்பர்களுக்குப் பகிர்ந்து மகிழவும்

அன்புடன் வேண்டுகிறேன்

உங்கள் நண்பன்

நா.முத்துநிலவன்

நா.முத்துநிலவன்

நா.முத்துநிலவன்

(அட இது எதிரொலிங்க...! 

வானொலியல்லவா?!?!?!)

புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293

---------------------------------------------------- 

நன்றி:

அகில இந்திய வானொலி நிலையம்

திருச்சிராப்பள்ளி

மற்றும்

சென்னை, மதுரை, கோவை, நெல்லை,

புதுச்சேரி வானொலி நிலையங்கள்,

திருச்சி வானவில் பண்பலை

--------------------------------------------------- 

கவிதையின் கதை- எனது வானொலி உரைப் பதிவு கேளுங்கள்

கவிதையின் கதை 

திருச்சி வானொலி  எனது உரைப் பதிவு

இன்று 21-03-2025 உலகக் கவிதை நாள்

Kavithaiyin Kathai - My speech on Radio

இதையொட்டிஇன்று காலை திருச்சி வானொலியில் ஒலிபரப்பான 

எனது 26நிமிட உரை ஒலிப்பதிவு இது 

நான் எழுதிவரும் கவிதையின் கதை பெரு நூலின் சுருக்கம் இது

கடந்த கரோனாக் காலத்தில்-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 

புதுக்கோட்டை மாவட்டக் குழு நடத்திய 

இணைய நிகழ்வில் இதை முதன் முறையாகப் பேசினேன்.

பிறகு 

தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றத்தின் 

மாநிலக் குழு நடத்திய மாநிலம் தழுவிய 

இணைய நிகழ்வில் பேசினேன்

2023இல் 

நியு-யார்க் தமிழ்ச் சங்கத்தின் 

இலக்கியக் குழுத் தலைவராக இருந்த 

நண்பர் ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் அவர்கள் 

கேட்டுக் கொண்டபடி ஃபெட்நா  23 சிறப்பு மலரில் 

கட்டுரைச் சுருக்கமாக எழுதினேன்.

அதன் விளைவாக 

கடந்த ஃபெட்நா  2024 நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக 

அழைக்கப்பட்டு கடந்த சூலை-4,2024ஆம் தேதி முதல் 15நாள்கள் 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக 

சான் ஆண்டோனியோ (டெக்சஸ்)அட்லாண்டா

நியு-இங்கிலாந்து (போஸ்டன்),மற்றும் 

நியு-யார்க் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன்.

(இதுபற்றித் தனியாக விரிவாக எழுத வேண்டும். 

தலைவர் பாலா.சுவாமிநாதன், செயலர் கிங்ஸ்லி, 

செயற்குழுவினர் சகோ.ரம்யா, பிரதிபா பிரேம் 

மற்றும் அட்லாண்டாவிற்கு என்னை அழைத்துச் சென்ற 

தங்கை கிரேஸ்பிரதிபா, 

பாஸ்டன் தம்பி அருண்-தமிழ்ச்செல்வி 

நியுயார்க் தமிழ்ச்சங்க நிருவாகிகள்

இனிய நண்பர் ஆல்ஃபி 

உள்ளி்ட்ட பலருக்கும்

நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

இதுபற்றி விரிவாக எழுத வேண்டும்)

----------------------------------------

இவ்வளவுக்கும் காரணம் இந்த கவிதையின் கதைதான்! 

மற்றும் நான் பேசிய இணைய உரைகள்தாம்!

இதோ  இப்போது திருச்சி வானொலியின் காற்றலை வழியாக 

கேளுங்கள் கேட்டு விட்டுப் பேசுங்கள் 

இந்த இணைப்பைச் சொடுக்கிக் கேளுங்கள்


இதற்கு நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்லவேண்டும் 

ஒருவர் திருச்சி வானொலி நிகழ்ச்சி அமைப்பாளரும் 

தொடர் வாசிப்பாளரும் என் இனிய நண்பருமான 

திருமிகு அடைக்கலராஜ் 

என்னோடு அவ்வப்போது பேசி வானொலியில்

எதையாவது பேச வைக்கும் பேரன்பிற்கு...

மற்றவர் நான் என் போக்கில் சுமார் 50 நிமிடம் பேசிய 

உரையின் சாரம் குறையாமல்மையம் நகராமல்

தொடர்ச்சி அறாமல், 28 நிமிடத்திற்கு 

அழகாகத் தொகுத்து விட்ட திருச்சி வானொலி நிலையத்

 தொகுப்பாளரும், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் 

பேத்தியும் ஆன அன்புச் சகோதரி தனலட்சுமி 

அவர்களின் பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது

----------------------------------------------------- 

இதையே பெருநூலாக -கிட்டத்தட்ட 800-900 பக்கங்களில்

கவிதையின் கதை என்னும் தலைப்பிலேயே 

எழுதி வருகிறேன். பார்க்கலாம் விரைவில்...

-----------------------------------------------

வானொலியில் "எனைத்தானும் நல்லவை கேட்க" எனது சிற்றுரை – கேட்டு மகிழுங்கள்

                                     நாளை செவ்வாய் தொடங்குகிறது.

04-03-2025-செவ்வாய்

11-03-2025-செவ்வாய்

18-03-2025- செவ்வாய்

25-03-2025- செவ்வாய்

என நான்கு வாரங்களுக்கு

(இந்த மார்ச்சு மாதம் முழுவதும்)

“எனைத்தானும் நல்லவை கேட்க”

காலை மணி 6-10 முதல் 6-15 வரை

5-நிமிட உரை தந்திருக்கிறேன்!

காலை மணி 6-10 முதல் 6-15 வரை

தமிழ்நாட்டின் அனைத்து வானொலிகள்

மற்றும் அவற்றின் பண்பலைகளில் நீங்கள்

கேட்டு மகிழலாம்.

(திருச்சி, சென்னை, மதுரை, கோவை

புதுச்சேரி, காரைக்கால், நெல்லை

தூத்துக்குடி, நாகர்கோவில்)

(என்ன ஒன்னு...?

அந்த நேரத்துல

எழுந்திருக்கணும்!

அம்புட்டுதேங்!

😜😜😍😂😁

------------------------------------------

         இன்று -02-03-2025- ஒலிபரப்பான 
உரை இணைப்பு 
-----------இதே பதிவில்-------
இந்த இடத்திலேயே
விரைவில் பதிவிடுவேன்.
-----------------------------------------