கவிதையின் கதை- எனது வானொலி உரைப் பதிவு கேளுங்கள்

கவிதையின் கதை 

திருச்சி வானொலி  எனது உரைப் பதிவு

இன்று 21-03-2025 உலகக் கவிதை நாள்

Kavithaiyin Kathai - My speech on Radio

இதையொட்டிஇன்று காலை திருச்சி வானொலியில் ஒலிபரப்பான 

எனது 26நிமிட உரை ஒலிப்பதிவு இது 

நான் எழுதிவரும் கவிதையின் கதை பெரு நூலின் சுருக்கம் இது

கடந்த கரோனாக் காலத்தில்-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 

புதுக்கோட்டை மாவட்டக் குழு நடத்திய 

இணைய நிகழ்வில் இதை முதன் முறையாகப் பேசினேன்.

பிறகு 

தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றத்தின் 

மாநிலக் குழு நடத்திய மாநிலம் தழுவிய 

இணைய நிகழ்வில் பேசினேன்

2023இல் 

நியு-யார்க் தமிழ்ச் சங்கத்தின் 

இலக்கியக் குழுத் தலைவராக இருந்த 

நண்பர் ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் அவர்கள் 

கேட்டுக் கொண்டபடி ஃபெட்நா  23 சிறப்பு மலரில் 

கட்டுரைச் சுருக்கமாக எழுதினேன்.

அதன் விளைவாக 

கடந்த ஃபெட்நா  2024 நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக 

அழைக்கப்பட்டு கடந்த சூலை-4,2024ஆம் தேதி முதல் 15நாள்கள் 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக 

சான் ஆண்டோனியோ (டெக்சஸ்)அட்லாண்டா

நியு-இங்கிலாந்து (போஸ்டன்),மற்றும் 

நியு-யார்க் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன்.

(இதுபற்றித் தனியாக விரிவாக எழுத வேண்டும். 

தலைவர் பாலா.சுவாமிநாதன், செயலர் கிங்ஸ்லி, 

செயற்குழுவினர் சகோ.ரம்யா, பிரதிபா பிரேம் 

மற்றும் அட்லாண்டாவிற்கு என்னை அழைத்துச் சென்ற 

தங்கை கிரேஸ்பிரதிபா, 

பாஸ்டன் தம்பி அருண்-தமிழ்ச்செல்வி 

நியுயார்க் தமிழ்ச்சங்க நிருவாகிகள்

இனிய நண்பர் ஆல்ஃபி 

உள்ளி்ட்ட பலருக்கும்

நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

இதுபற்றி விரிவாக எழுத வேண்டும்)

----------------------------------------

இவ்வளவுக்கும் காரணம் இந்த கவிதையின் கதைதான்! 

மற்றும் நான் பேசிய இணைய உரைகள்தாம்!

இதோ  இப்போது திருச்சி வானொலியின் காற்றலை வழியாக 

கேளுங்கள் கேட்டு விட்டுப் பேசுங்கள் 

இந்த இணைப்பைச் சொடுக்கிக் கேளுங்கள்


இதற்கு நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்லவேண்டும் 

ஒருவர் திருச்சி வானொலி நிகழ்ச்சி அமைப்பாளரும் 

தொடர் வாசிப்பாளரும் என் இனிய நண்பருமான 

திருமிகு அடைக்கலராஜ் 

என்னோடு அவ்வப்போது பேசி வானொலியில்

எதையாவது பேச வைக்கும் பேரன்பிற்கு...

மற்றவர் நான் என் போக்கில் சுமார் 50 நிமிடம் பேசிய 

உரையின் சாரம் குறையாமல்மையம் நகராமல்

தொடர்ச்சி அறாமல், 28 நிமிடத்திற்கு 

அழகாகத் தொகுத்து விட்ட திருச்சி வானொலி நிலையத்

 தொகுப்பாளரும், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் 

பேத்தியும் ஆன அன்புச் சகோதரி தனலட்சுமி 

அவர்களின் பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது

----------------------------------------------------- 

இதையே பெருநூலாக -கிட்டத்தட்ட 800-900 பக்கங்களில்

கவிதையின் கதை என்னும் தலைப்பிலேயே 

எழுதி வருகிறேன். பார்க்கலாம் விரைவில்...

-----------------------------------------------

7 கருத்துகள்:

  1. சிறப்பு ஐயா

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாசனி, மார்ச் 22, 2025

    அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  3. தங்கள் 'கவிதையின் கதை' நூல் நான் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் படைப்புகளுள் ஒன்று. மற்றவர்கள் இதைப் பற்றிய தங்கள் உரையை மலரில் படித்திருக்கலாம், நிகழ்வுரையில் கேட்டிருக்கலாம், இதோ வானொலியிலும் கேட்கலாம். ஆனால் தனிச்சிறப்புரையாக எனக்காக மட்டுமே இதை நீங்கள் பொழிந்து கேட்டவன் எனும் பெருமை எனக்குண்டு! இதோ இப்பொழுது இதையும் கேட்டுவிட்டுச் சொல்வேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  4. ஐயா!... ஐயா!... ஐயா!... இதற்கு நான் என்னவெனக் கருத்து எழுத!!! மூவாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவியுலகப் பெருவரலாற்றை முப்பது மணித்துளிகளில் விவரித்த இருபதாம் நூற்றாண்டு வள்ளுவப் பெருந்தகையே! உணர்ச்சிப் பெருக்கால் என் கண்கள் கலங்குகின்றன. அழுது விடாமல் என்னை நானே கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது.

    முந்தைய கருத்திலேயே சொன்னது போல, இதே 'கவிதையின் கதை' பற்றி நீங்கள் பேசியதை ஏற்கெனவே கேட்டு நான் மலைத்ததுண்டுதான். ஆனால் இப்பொழுது இவ்வளவு விரிவாக, அதுவும் மெட்டோடு கேட்கும்பொழுது உடலும் உள்ளமும் சிலிர்த்து அடங்குகின்றன.

    இந்த இரண்டாவது கருத்தில், "அருள் கூர்ந்து விரைவில் இதைப் புத்தகமாக வெளியிடுங்கள்" என்று சொல்லத்தான் நினைத்திருந்தேன். ஆனால் உரையின் கடைசி மணித்துளிகள் அது கூடப் போதுமா எனத் திகைக்க வைக்கின்றன. கம்பராமாயணம் தொடங்கி சர்தேசிய கீதம் வரையில் இத்தனை ஆண்டுக் காலக் கவிதை உருவத்துக்கிடையே காணப்படும் மெட்டுத் தொடர்ச்சியைக் கேட்டதும் நான் விக்கித்துப் போனேன்! புதிய திரைப்பாடல்களின் மெட்டைப் பழைய பாடல்களோடு ஒப்பிட்டு "இது அங்கிருந்து சுட்டது, அது இங்கிருந்து சுட்டது" எனக் கண்டுபிடித்துச் சொல்வதற்கே பல்லாயிரம் பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டுப் பழகியிருக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க இதை எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள், இதைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் எந்த அளவுக்கு இத்தனை இலக்கியங்களையும் வரிக்கு வரி நீங்கள் மனப்பாடமாய்த் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் திகைத்துத் திக்குமுக்காடுகிறேன்! அதுவும் ஒருபுறமிருக்க, இதையே நூலாக வெளியிட்டாலும் இந்த விதயத்தை எப்படி அதில் காட்டுவது! தத்தகாரச் சந்தம் குறிப்பிட்டுக் காட்டலாம்தான். ஆனால் அது வெறும் தகவலாக மட்டும்தான் இருக்குமே தவிர இப்படிக் கேட்கும்பொழுது ஏற்படும் வியப்பும் மலைப்புமான உணர்ச்சியை அது தராது என நினைக்கிறேன்.

    இங்கு நான் சொன்னது கொஞ்சம்தான். இன்னும் இன்னும் இதைப் பற்றிப் பேச பாராட்ட அவ்வளவு இருக்கிறது. தமிழர்கள் மட்டுமில்லை உலகிலுள்ள அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இவை! நீங்கள் இதைப் புத்தகமாக எழுத, பின்னர் ஆங்கிலத்திலும் அதை மொழிபெயர்த்து உலகெங்கும் பரப்ப வேண்டும் ஐயா!

    வாழ்க நீர் எம்மான்!!!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாசனி, மார்ச் 22, 2025

    புதுக்கோட்டையின் பெருமைமிகு அடையாளம்.

    பதிலளிநீக்கு