நிறுத்தக் குறிகளைத் தின்னும் புதிய மொழி!
துணையெழுத்துகள்
அனைத்து மொழிகளும் அ எழுத்தையே
முதன்மையாக உடையன. வாயைத் திறந்ததும் வரும் எழுத்து என்பதுதான் காரணம்.
அ,இ,உ,எ,ஒ என்பன உயிரெழுத்தில் முதன்மை எழுத்துகள். ஆ,ஈ,ஊ,ஏ,ஓ, என்பன
–முதன்மை எழுத்து நீள்வதால் வரும்- நெடில் எழுத்துகள். ஐ,ஔ, என்பவற்றைக் கூர்ந்து
பார்த்தால் இவை கூட்டெழுத்து என்பதும் புரியும்.
எழுத்துகளின் வரிவடிவம் மாறி மாறி
வந்துள்ளதால், இக்காலத் துணையெழுத்துகளின் பெயரைத் தெரிந்து கொள்வது அவசியம்
:
அம்மா – இதில் அ எழுத்து முதன்மை வடிவம். ம் மெய்யெழுத்து. மா எழுத்தில் ம முதன்மை வடிவம், அடுத்துள்ள கால் துணையெழுத்து.
துணைக்கால் – கா,சா
கொம்புக்கால் – கௌ,சௌ
பிறைச்சுழி – ஆ
ஒற்றைக்
கொம்பு – கெ, தெ
இரட்டைக்
கொம்பு – பே, வே
இணைக்கொம்பு –
பை, வை
வளை கீற்று -
கூ,
சாய்வுக்
கீற்று – ஏ
இறங்கு கீற்று
– பு,சு
இறக்கு கீற்று கீழ் விலங்குச் சுழி – சூ,பூ
கீழ் விலங்கு
– மு,கு
கீழ் விலங்குச் சுழி – மூ,ரூ
மேல்விலங்கு –
கி,தி
மேல் விலங்குச் சுழி – கீ,சீ
மடக்கு ஏறு
கீற்றுக் கால் – நூ,னூ,றூ
முதலான எழுத்துகளைக் கொண்டு, கண்டு தெளிக.
நிறுத்தக் குறிகள்
எழுத்தைப் புரிந்துகொள்ள துணையெழுத்துப் போல, தொடரைப் புரிந்து கொள்ள
நிறுத்தக் குறிகளை அறிவதும் அவசியம். இதற்கு, பல்வேறு நடைகளைக் கொண்ட
கட்டுரை, கவிதை, சிறுகதைகளைப் படித்துப் பார்த்துத் தெளிவதே சரியான வழி. மற்றபடி
நிறுத்தக் குறிகளைப் பற்றிக் கவலை கொண்டு, சொல்லவரும் சிந்தனையில் தடம்
மாறிவிடவும், தேவையற்ற இடங்களில் போட்டுக் குழப்பி விடவும் கூடாது.
நிறுத்தக் குறிகள் (Punctuation Marks) ஆங்கில வழி வரவு என்பதால் ஆங்கில
வழக்குடன் சேர்த்துப் புரிந்து, பயன்படுத்துவது எளிது – இவை ஏராளமாக
உள்ளன. முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம் : இதில் சந்தேகம் வந்தால் நம்
ஜி.எஸ்.எஸ்.அய்யாவிடம் கேட்டு அறிவோம்.
Comma ( , ) கால் புள்ளி
- மொழி, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்கள்.
Semicolon ( ; ) அரைப்
புள்ளி - அறிஞர் தான்; சமூகப் பொறுப்பில்லையே!
Colon ( : ) முக்கால் புள்ளி /
வரலாற்றுக் குறி – பின்வருமாறு:
Full Stop ( . ) முற்றுப்புள்ளி.
முடிந்தது.
Excalamation ( ! ) உணர்ச்சிக்
குறி - அடடா, என்ன சிந்தனை! (பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டுவதால்,
ஆச்சரிய/வியப்புக் குறி என்பது தவறு)
ஆங்கிலத்தில் Teachers’ என்றால்
‘ஆசிரியர் பலரின்’ என்பது பொருள். Teacher’s எனில் ‘ஆசிரியர் ஒருவரின்’ என்று
பொருள். I am என்பதை I’m என்று எழுதுவது போல, ஒற்றை மேற்கோள் குறி
இட்டு, சரி’ம்மா எனில், “சரி அம்மா“ என்பதன் சுருக்கமாகப் புதியன புகுந்துள்ளது.
தமிழில் மட்டுமல்ல, உலகத்தின் பற்பல மொழிகளின் நிறுத்தக் குறிகளை
படக்குறிகள் (இமோஜி) எனும் புதிய மொழி தின்று வருகிறது! வலுத்தது நிலைக்கும்!
தமிழுக்கு வலிமை சேர்ப்பது நம் காலக் கடன்.
-----------------------------------------------
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
பதிலளிநீக்குசிறப்பு தோழர். நல்ல விளக்கம். இளைஞர்கள் இதனை உள்வாங்க வேண்டும்.
பதிலளிநீக்குதுணை எழுத்துகள் மற்றும் நிறுத்தக்குறிகள் குறித்த கட்டுரை மிகச்சிறப்பு. தமிழ் இனிது சிறப்புங்க ஐயா
பதிலளிநீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குதுணைக் காலை தாண்டி இவ்வளவு உள்ளதா! நன்றி ஐயா
பதிலளிநீக்குபோலிக்காலும் துணைக்காலும்
பதிலளிநீக்குகா,சா போன்ற துணைக்கால் சரியாக,சரியான பயன்பாட்டில் உள்ளன. ஆனால் ர தான் பல இடங்களில் துணைக்கால் போல இடப்படுகிறது. குறிப்பாக துணைக்கால் அடுத்து வரும் ரகரம்.
தங்களின் அடுத்த கட்டுரையில் இதை குறித்த விளக்கத்தையும் விளக்கிடுக அய்யா🙏
😍😍ஆகா! மிரள வைத்து விட்டீர்கள் ஐயா! காலெழுத்து, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு ஆகியவை மட்டும்தான் தெரியும். இப்படி ஒவ்வொரு குறியீட்டுக்கும் பெயர் உண்டு என்பது தகவலாகக் கூட இதுவரை தெரியாது. மிக அரிய செய்தி! அருமையாகத் தொகுத்துத் தந்தீர்கள்! மிக்க நன்றி!🙏🏽
பதிலளிநீக்குதாங்கள் கூறுவது போல் நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தக் கற்பது மிகவும் முக்கியமானது. பலர் மனம் போன போக்கில் நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துகிறார்கள். இது சொற்றொடரின் பொருளையே சமயத்தில் மாற்றி விடும். பெரும்பாலும் தேவையில்லாமல் நிறுத்தக்குறிகளை அதிகம் பயன்படுத்துவது வாசகரின் ஆற்றொழுக்கான வாசிப்புக்கு இடையூறு ஏற்படுத்தும்.
தமிழில் நிறுத்தக்குறிகள் ஆங்கில வரவு என்பதால் ஆங்கிலத்தைப் பின்பற்றியே தமிழிலும் அவற்றைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தவிர்க்கும், பயன்பாட்டை எளிதாக்கும். தாங்கள் கூறியது முற்றிலும் சரியான வழிகாட்டல். அதே நேரம் ஆங்கிலம் அளவுக்குத் தமிழுக்கு நிறுத்தக்குறிகள் தேவைப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் சொற்றொடரின் முதல் சொல்லை அடுத்துக் காற்புள்ளி வைப்பது வழக்கம். காரணம், அங்கே கொஞ்சம் நிறுத்திப் படிக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் தமிழில் எல்லா இடங்களிலும் இது தேவைப்படுவதில்லை. ஏனெனில் ஆங்கிலத்தைப் போலன்றித் தமிழில் பெயரெச்சம், வினையெச்சம் போன்றவற்றின் பயன்பாடு அதிகம் இருப்பதால் அந்த இடங்களில் நாம் இயல்பாகவே நிறுத்தித்தான் படிப்போம்.
"எனவே அவனுக்குத் தேர்வு எளிதாக இருந்தது."
"ஆதலால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல்."
"இதனால்தான் நான் அன்றைக்கே இந்த விளையாட்டெல்லாம் வேண்டா என்றேன்."
மேற்கண்ட சொற்றொடர்களில் முதல் சொற்களை அடுத்துக் காற்புள்ளி இல்லை. ஆனால் பொதுவாகவே நாம் இந்த இடங்களில் நிறுத்தித்தான் படிப்போம் என்பதால் அது தேவையில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட இடங்களில் கட்டாயம் காற்புள்ளி வைக்கிறார்கள்.
உணர்ச்சிக்குறியை வியப்புக்குறி எனச் சொல்லக்கூடாது என்ற உங்கள் அறிவுரை எனக்கே சொன்னது போல் இருந்தது. இனி அப்படிச் சொல்ல மாட்டேன்!
"சரி அம்மா" என்பதைச் "சரி’ம்மா" என எழுதுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது! நல்ல முயற்சிதான். இப்படிச் சுருக்கி எழுத நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துவது தமிழுக்கு இளமைப் பொலிவூட்டும்! தொடங்கி வைத்தவருக்குப் பாராட்டுக்கள்!
படக்குறிகள் சேர்த்து எழுதுவதும் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் நம் பிள்ளைகள் படக்குறிகளையே சார்ந்திருப்பதுதான் கவலையளிக்கிறது. தமிழுக்கு வலிமை சேர்ப்போம், தங்களைப் போன்ற அறிஞர்களின் உதவியோடு!😊❤💪🏽🤝🏽👍🏽
சிரப்புங்க ஐயா... இன்றளவும் பலர் நிறுத்தக் குறிகள் உள்ளது
பதிலளிநீக்குநிறுத்தக்குறிகள், துணை எழுத்துகள் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. நன்றி ஐயா.
பதிலளிநீக்கு