நெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்!

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை ஆரத்தழுவி வரவேற்கிறேன்... 
ஆனால்  
சாக்லேட், பிஸ்கட்ஷாம்பு, சோப்பு, ஆயில், தின்பண்டங்கள் போன்றவை அடைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிளாஸ்டிக் உறைகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இது மட்டும் ஏன்?
இவற்றை பயன்படுத்திவிட்டுதின்ற இடத்திலேயே தூக்கி எறிந்துவிடுகிறோம்.  இவை அளவில் சிறியதாக இருந்தாலும் மண்ணுக்குள்ளும் நீர்நிலைகளுக்குள்ளும் பல யுகங்களில் அழியாமால் இருந்து பூமியை நஞ்சாக்கிவிடும். சாக்கடைகளையும் வீட்டுக் கழிவுநீர்க் குழாய்களையும் அடைத்துக்கொள்ளும்....   

துவும்  மறுசுழற்சிக்குப் பயன்படாத, ஒருமுறைமட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கியெறிகிற பிளாஸ்டிக் பொருட்களே ஆகும்.   
ஆனால் பாலிதின் பைகளை, பிளாஸ்டிக் பைகளை தடைசெய்துள்ள தமிழக அரசு, உயர்நீதிமன்றம் ஆலோசனை சொல்லியும் ஏன் இந்தகைய பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கவில்லை? என்பது “மில்லியன் டாலர் கேள்வி”!!!

ஏனென்றால் ----
இத்தகைய சாக்லேட், பிஸ்கட், ஷாம்பு, சோப்பு, ஆயில் போன்ற நுகர்பொருட்கள் எல்லாம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் கார்ப்பரேட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள்... ... 
இந்த கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எந்த சிறு நகர்வையும் மத்திய .  மாநில அரசுகள் எடுக்காது .  ஏனேனில் இவை கார்ப்பரேட் ஆதரவு அரசுகள்....

அதேபோல்வால்மார்ட்பிக் பாஸ்கட், பிக் பஜார், ரிலையன்ஸ், கார்டன் பிரஸ் போன்ற பெரும் டிபார்ட்மெண்ட் மால்களிலும்  பழமுதிர், கண்ணன் போன்ற  உள்ளூர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும்  மளிகைப் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இவையும் மறுசுழற்சிக்குப் பயன்படாத ஒருமுறைமட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கியெறிகிற பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும்.   

நன்றி - புதுக்கோட்டை நகராட்சி
  
பெரும் டிபார்ப்ட்மெண்ட் மால்கள் மற்றும் உள்ளூர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் அனைத்திலும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் உறைகளில்தான் இன்னும் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன! 
 இவையும் மறுசுழற்சிக்குப் பயன்படாத ஒருமுறைமட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கியெறிகிற பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும்.    இவையும் சுற்றுச்சூழலுக்கு பெரும் அழிவை ஏற்படுத்துபவை...  இதற்கும் தமிழக அரசு தடை விதிக்கவில்லை.  ஏன்... 

அமேஸான், வால்மார்ட்பிக் பாஸ்கட், பிக் பஜார், ரிலையன்ஸ், கார்டன் பிரஸ் போன்ற பெரும் டிபார்ட்மெண்ட் மால்கள் அனைத்தும் பன்னாட்டு அல்லது உள்நாட்டு பெரும் கார்ப்பரேட்டு நிறுவனங்கள்...  பழமுதிர், கண்ணன் போன்றவை உள்ளூர் பெருமுதலாளிகள்...  அவர்களுக்கு விசுவாசமாக இருக்கிற அரசு எப்படி அவர்களுக்கு எதிராக தடைவிதிக்கும்?

எனவே தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் தடை என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் முழுமையானது அல்ல. உண்மையானதும் அல்ல.  ஓரு சார்பானது மற்றும் மோசடியானது.

எனவே  --
தமிழக அரசு,  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது போல்,  பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்குடிநீர், குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட  பிளாஸ்டிக் பாட்டிகள்  உட்பட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்.  அப்போதுதான் பிளாஸ்டிக்கின் பாதிப்பிலிருந்து நமது மண்ணை காப்பாற்ற முடியும்.... 
ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் பற்றியும் யோசித்து செயல்படுத்தி அவர்களையும் காக்க வேண்டும்!                           
தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்துவோம்......
 
வெகுசில மாற்றங்களுடன்… 
நன்றி –
வழக்கறிஞரும் கோவை மாவட்ட - தமுஎகச - நிர்வாகிகளில் ஒருவருமான தோழர் மு.ஆனந்தன் பதிவு 02-01-2019
---------------------------------------------------------------------------- 
காணொலிப் பதிவுக்கு நன்றி - திருச்சி நண்பர் தமிழ்இளங்கோ



6 கருத்துகள்:

  1. இதிலும் இப்படியொரு சிக்கலோ? கார்ப்பரேட் விசுவாசத்திற்கு எல்லையே கிடையாது போலுள்ளது ஐயா.

    பதிலளிநீக்கு
  2. எல்லாருக்குமே தோன்றும் சந்தேகமே இது..

    மாற்றம் மெல்லமெல்ல வரும்ன்னு சொல்றாங்க. பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு

  3. தமிழக அரசே அம்மா குடிநீர் விற்பது பிளாஸ்டிக் குப்பிகளில். ரயில்நீரும் அப்படியே.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான். தின்பண்டங்கள் முதல் குடிநீர் வரை அனைத்திலும் நெகிழி பயன்படுத்தப்படுகிறது. பிறகு எப்படி பிளாஸ்டிக் ஒழிப்பு என்று பேசலாம்.?

    கார்ப்பரேட் மீது சிறிது குற்றம் என்றாலும் மீதி முழு குற்றமும் நுகராவோராகிய நம் மீது தான். விளம்பரத்தில் வரும் அனைத்துமே நல்லவை என்று நினைத்து உடனே கடைகளுக்கு சென்று வாங்கி விடுகிறார். நாம் யோசிப்பதில் நல்ல பொருட்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்று. ஆனாலும் கார்ப்பரேட் நமது மூளைக்குள் சென்று நமது கற்பனையும் எண்ணங்களையும் தூண்டி விடும் அளவில் கேள்வி கேட்காத நிலையில் தள்ளிவிடுகிறது. இதற்கு காரணம் வாங்கி பழகிய நாம் கொடுத்து பழகிய கார்ப்பரேட்.

    விளம்பரத்தில் காட்டியது மாறி இல்லை என்றால் உடனே கடைக்காரர்களிடம் சண்டை. இதில் எப்படி யார் யாரிடம் தடை விதிக்க வாதாட போகிறார்கள்.?

    நாம் அனைவருமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கார்ப்பரேட் நிறுவனங்களின் நுகர்வோராக செயல்படுகிறோம்.

    மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். பிளாஸ்டிக் அடைக்கப்பட்டு வரும் எதையும் வாங்காமல் இருந்தால் நிச்சயம் மாற்றம் உண்டாகும்.. சரக்குகள் தேங்கினால் நட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான்.

    நன்றி. தோழர் ஆனந்தன் ஐயாவுக்கு வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் அப்பா.

    பதிலளிநீக்கு