எனது நூலுக்கு 262பேர் விமர்சனம்! வியப்பு கலந்த மகிழ்ச்சி!


“அக்குபங்சர்” மருத்துவர்களின்
தமுஎகச “அறம்”  குழுவினர்,
எழுத்தாளர் அ.உமர் ஃபாரூக் தலைமையில்
மதுரை, திருச்சி, காரைக்குடி, திருமயம் மற்றும்
புதுக்கோட்டை- பெருங்களுர் நண்பர்களும்
என் வீட்டுக்கு வந்த நெகிழ்வான தருணம்!


வணக்கம்.
வலைப்பக்க நண்பர்களைச் சந்தித்து
மாதங்கள் பல உருண்டோடி விட்டன.

(இடையில் நமது திருச்சி நண்பர் தமிழ்இளங்கோ,
மதுரை சீனா அய்யா இருவரையும் இழந்தது பெரும் சோகம்!)

இப்போது 
ஒரு மகிழ்ச்சியான செய்தியை
நண்பர்களுடன் பகிர விரும்பியே
வலைப்பக்கம் என்னை 
இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது.

எனது
“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!”
உள்ளிட்ட கல்விச்சிந்தனைக் கட்டுரைகளை,
முதலில் இந்த வலைப்பக்கத்தில்தான் எழுதினேன்
அதற்குக் கிடைத்த ஆரவாரமான ஆதரவே
தொடர்ந்து என்னை எழுத வைத்தது.
அதற்காக வலை வாசகர்களுக்குத்தான்
எனது முதல் நன்றி!

ஒரே ஆண்டில் முதற்பதிப்பு மொத்தமும் விற்றுத்தீர,
நான்கு விருதுகளும் இந்நூலுக்குக் கிடைத்தன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2015-2020)
இதன் அடுத்தடுத்த ஐந்து பதிப்புகளும் விற்றுத் தீர,
இப்போது புத்தக விழா நடக்கும் இடங்களில் இருந்து அழைத்து 
இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் 
என்ற கேள்விகள் தொடர்கின்றன. 
இவற்றோடு வந்திருக்கும்
புதிய பெருமையையும்
வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே
இந்தப் பதிவு.
---------------------------------------------------------
நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கில் உள்ள
“அக்குபங்சர்” மருத்துவ நண்பர்கள்
கம்பம் திரு உமர் பாரூக் அவர்கள் தலைமையில்
“மருந்தில்லா மருத்துவம்” பற்றி
மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறார்கள்.

இவர்களில்
கலை,இலக்கியம் – கல்வி – சமூகப் பணியில் 
ஆர்வமுடைய சுமார் ஆயிரம்பேர் சேர்ந்து
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
வழிகாட்டுதலில்
உருவாக்கியுள்ள அமைப்பே 
“அறம்” 

இவர்களது பதிவை
இனி நீங்களே பாருங்கள்!

முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே -நூலின் 
300பிரதிகளைக் காசுதந்து வாங்கிப் படித்துவிட்டு 
262பேர் விமரிசனம் எழுதி இருக்கிறார்கள்!

அந்தத் தொகுப்பையே 
ஒரு நூலாக்கி, 
என்வீட்டில் கொண்டுவந்து தந்து,
எனது கருத்தையும் 
பதிவு செய்திருக்கிறார்கள்!

 எனக்கே இது இன்ப அதிர்ச்சிதான்!

எழுத்தாளனுக்கு

இதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய செயல் 

 வெறென்ன இருக்க முடியும்?

நீங்களும் 
“அகவிழி”யில் சென்று பாருங்கள்!
நட்பு வலையில் FOLLOWER ஆகித் தொடருங்கள்!
இப்போது, இணைப்பைச் சொடுக்குங்கள்!



நமது இந்த “வளரும் கவிதை” வலைப்பக்கத்திலும்
பின்தொடர்வோர் -Follower - பட்டியலில்
உங்கள் மின்னஞ்சல் தந்து இணைந்து
தொடர் பதிவுகளைக் காண 
அன்புடன் அழைக்கிறேன்
-------------------------------------  
ஐந்தாம் பதிப்பு விவரம் மற்றும்
நூல் கிடைக்குமிடம் -
(அடுத்த -ஆறாம்- பதிப்பு விரைவில்!)
வணக்கம்
-------------------------------------  



-------------------------------------------------- 


31 கருத்துகள்:

  1. சிறப்பிற்கு ஒரு சிறப்பு செய்துள்ளார்கள்... மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா

    உங்களுடைய ஏற்புரை காணொளியை எங்கள் தமுஎகச-அறம் குழுவில் பார்த்தேன். உங்களுடைய வலைப்பதிவு இணைப்பையும் உமர் தோழர் பதிவு செய்தமையால் அதன் வழியாக உங்கள் வலைப்பூ பகுதியிலும் இணையும் வாய்ப்பு பெற்றேன். உங்களுடைய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதியவர்களில் ஒருவனாக உங்களின் ஏற்புரை பெருமை சேர்க்கும் வகையில் இருந்தது. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா

    நாங்கள், உங்கள் புத்தகத்தை படிக்கும் போது கிடைத்த அனுபவங்களை, ஒவ்வொருவரும் தங்கள் எழுத்துக்கள் மூலம் தெரிவித்தோம். எல்லோரின் விமர்சனங்களையும் படித்து விட்டு உங்கள் ஏற்புரை கேட்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தோம்.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. புதிதாக எழுதும் என் போன்ற சிறு பிள்ளையின் கிறுக்கல்களை கூட ஏற்று மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து தங்களின் ஆசிரிய மனதை வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்கள் ஏற்பும்,வாழ்த்துகளும் எங்களை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டும்.

    பதிலளிநீக்கு
  5. ஐயா தங்களது ஏற்புரையை காண கண்டேன் அதில் நீங்கள் உணர்ச்சிபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் எங்களுக்கு அளித்த உத்வேகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பேரின்ப அதிர்ச்சி[உண்மையான பேரின்பம்] எங்களுக்கும்தான்.

    மகிழ்ச்சி நண்பரே.

    பதிலளிநீக்கு
  7. எங்கள் அனைவரது விமர்சனங்களையும் படித்து அதற்கு ஏற்புரை வழங்கியதே என்னைப் போன்ற புத்தகம் படிக்கும் பழக்கத்தை புதிதாக ஆரம்பித்தவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.

    முதல் மதிப்பெண் வாங்க வேண்டாம் மகளே... கண்டிப்பாக இன்றைய காலகட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். புத்தகம் என்று கூறுவதை விட வழி காட்டி எனக் கூறலாம்.

    நன்றி தோழர்... இது போன்று பல படைப்புகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
  8. அணிந்துரையே தனி நூலாக! அருமை! ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ நூலின் மேலும் ஒரு சாதனை!

    பதிலளிநீக்கு
  9. ஐயா! என் வலைப்பூவைத் தாங்கள் தங்கள் நட்பு வலைகள் பட்டியலில் சேர்த்திருப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள்!! மிகவும் மகிழ்வான நிகழ்வு. சிறப்பும் கூட! மேலும் மேலும் தங்கள் படைப்புகள் வெளிவந்து சிறப்பு பெறவேண்டும் அதற்கும் வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  11. ஆஹா.... 262 பேர் விமர்சனம் .மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. மகிழ்ச்சி அண்ணா!! :-)
    உங்களுக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் தான் அண்ணா. செயல்படுத்திய அறம் குழு நண்பர்களுக்கு நன்றிகள். வாழ்த்துகள் அண்ணா :-)
    உங்கள் ஏற்புரையும் கேட்டேன். ஒவ்வொருவருக்கும் விரிவாகச் சொல்லி நன்றி கூறியிருப்பது நெகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. உங்களின் எழுத்துக்கும் பேச்சுக்கும் கிடைக்கும் தொடர் வெற்றிகளில் இது ஒன்று ஐயா. மிகவும் பெருமையாக உள்ளது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் ...மிக சிறப்பான நிகழ்வு ..

    பதிலளிநீக்கு
  15. படைப்புக்கள் சிறப்பாக இருந்தால் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பது உண்மை. உங்கள் எழுத்துக்கும் பேச்சுக்கும் கிடைத்த வெற்றி சார். சந்தோசமாக இருந்தது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. அந்த நூல் பெறப்போகும் இடத்துக்கு இது Just Trailer தான் அண்ணா.கல்வி நூல்களின் வரிசையில் தனக்கான தனி இடம் எப்போது தக்கவைத்துக் கொள்ளும் தகுதி உடையது.ஆசிரியர்கள் தவற விடக்கூடாத அறநூல் என்று அன்றும் சொன்னேன், இன்றும் சொல்வேன்.அறம் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகளும்,பாராட்டிகளும்.அண்ணணுக்கு ஒரு பூங்கொத்து பார்சல்💐

    பதிலளிநீக்கு
  17. அருமை. வாழ்த்துக்கள். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  18. Your hard work and service deserve this appreciation. Iam so proud of you.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள் ஐயா! தகுதி உள்ளது வென்றே தீரும். அற்புதமான பாடம் அல்லவா அக் கட்டுைரை!

    பதிலளிநீக்கு
  20. சிறப்பு. வாழ்த்துகள் அப்பா. தங்களின் இந்நூல் எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு விடையைத் தேட உதவியது. பல இடங்களில் இந்நூலை நானும் குறிப்பிட்டு வருகிறேன் அப்பா. வாழ்த்துகளும் பாராட்டுகளும் அன்பு தந்தையே..

    பதிலளிநீக்கு
  21. மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  22. மகிழ்ச்சியும் பேரன்பும் தோழர்

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் அய்யா
    ஒவ்வொரு செயலும்/கருத்துகளை பிரதிபலிக்கும் என்பது உண்மை தான். ஆனால் அதுவே பல செயல் வினைகளை உண்டு மெனில் அதன் ஆளுமையைப் புரிந்து கொள்ளமுடிகிறது. தங்கள் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே நூல் பேர குழந்தையைப் பெற்றுத் தந்துள்ளது என்பது பெருக்கிக்
    க்ளூனி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. மிக்க மகிழ்ச்சி அண்ணா!.இந்நூல் தொடர்ந்து பல பதிப்புகளைக் காண வேண்டும் .வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு