தமிழுக்கு விளம்பர வருவாய்! (Google AdSense for Tamil 2019) ஒரு நல்ல செய்தி!தமிழில் வலைப்பக்கம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு,
என் அன்பின் வணக்கம். இதோ ஒரு நல்ல செய்தி!


“மெல்லத்தமிழ் இனி வளரும்” என்றும் “இணையத்தமிழால் இணைவோம்” எனவும் முழங்கி, நாம் புதுக்கோட்டையில் நடத்திய –
“உலகத் தமிழ் வலைப்பதிவர் திருவிழா-2015”ஐ நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். (அதன் பிறகுதான் யாரும் நடத்தலயே!)

இப்போது மெல்ல அல்ல, வேகமாகவே தமிழ் வளரப்போகிறது!
நமது நெடுநாள் கோரிக்கையான “தமிழ் ஆட்சென்ஸ்” தமிழுக்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாகத் தமக்கு வந்த மின்னஞ்சல் செய்தியை நண்பர் இ.பு.ஞானப்பிரகாசம் நமக்குத் தெரிவித்தார்.இதனைப் பலருக்கும் கொண்டு செல்லவேண்டியது நம் கடமை.

சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்வோர்க்கு ஏதும் நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் எனக்கு வரும் தகவல்களை வலைப்பக்கத்தில் பகிர்வேன் என உறுதியளிக்கிறேன்.

நன்றி வணக்கம்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்-
கணினித் தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை
செல்பேசி எண்- 94431 93293

பி.கு.-(1)  
கடந்த 2015ஆம் ஆண்டு இணையத் தமிழால் இணைவோம்”  னும் முழக்கத்துடன் புதுக்கோட்டையில் நாம் நடத்திய உலகத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாச் சுட்டி- (புதிய நண்பர்களுக்காக)

(2) இதனை நம் நண்பர்கள் தமது சுட்டுரை, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் புலனம் வழியாக உலகத் தமிழர் அனைவரும் அறியக் கொண்டு சென்று உதவ வேண்டுகிறேன்.அதற்கு, நமது இந்த வலைப்பக்கப் பதிவைப் பகிர்ந்தாலே போதும். அப்படிச் செய்யும் நண்பர்களுக்கு எனது முன்கூட்டிய நன்றியும் வணக்கமும்.

9 கருத்துகள்:

 1. நல்ல தகவல். மேலும் செய்திகள் அறியக் காத்திருப்புடன்....

  பதிலளிநீக்கு
 2. ஐயா! மிக்க மகிழ்ச்சி! என் பெயரையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி! தாங்கள் கூறியது போல் நானும் இது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல செய்தி
  கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருக்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு

 4. சென்ற வருடம் முதலே இது நடக்கிறது. http://tech.neechalkaran.com/2018/03/google-for.html

  பதிலளிநீக்கு
 5. நல்ல காலம் பொறக்குது தமிழுக்கு நல்ல காலம் பொறக்குது

  பதிலளிநீக்கு