போராடும் விவசாயிகளுக்கு ஒரு புதிய யோசனை! (கவிதை)


குடியரசுத் தலைவரைச் சந்தித்து
எலிக்கறி தின்று குட்டிக்கரணம் போட்டு

 “மோடி”யால் சாட்டையடி பட்டு

 உருண்டுபுரண்டு

 பாடைகட்டி அழுதுபுரண்டு

தூக்குக் கயிறு மாட்டி

தம்மைத் தாமே நிர்வாணப் படுத்திக்கொண்டு 
பிச்சையெடுத்து 

பெண்வேடமிட்டு
எலிக்கறி தின்று

பைத்தியக்கார வேடம் போட்டு

மண்சோறு தின்று
மண்டையோடு ஏந்தி..

வளையல் உடைத்து (விதவைக்கோலம்)

வேப்பிலை கட்டி
வகைவகையாகப் போராடியும்
வராத பிரதமரை வர வைக்க
ஒரு யோசனை!சாமியார் வேடம் 
போட்டுப் பாருங்கள்!
சட்டென்று
ஒடிவந்து
சந்திப்பார்
மோடி!
 --------------------------------------------------------- 

7 கருத்துகள்:

 1. இது நல்ல யோசனை அப்பா.
  அடுத்த வேளைக்கு உணவு வேண்டும் என்றால் மோடிக்கு இவர்களின் போராட்டம் புரியும் அப்பா.

  பதிலளிநீக்கு
 2. கவிதை அருமை...
  வலிகள் அழுகை...

  பதிலளிநீக்கு
 3. கவிஞரின் பொருத்தமான வரிகளும்,presence of mindம் அற்புதம்.பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஹாஹா! ஆனால் இதுவும் வேலைக்காகாது ஐயா! எல்லா சாமியார்களையும் பார்க்க வந்து விட மாட்டார் மோடியார். பணக்கார, நிறைய மேல்மட்டத் தொடர்புகள் உடைய, கார்ப்பரேட் சாமியார்களை மட்டுமே பார்க்க வருவார்! :-)

  பதிலளிநீக்கு