புதுக்கோட்டையில் “கக்கூஸ்” ஆவணப்படம் திரையிடல்

இயக்குநர் திவ்யாவுடன் கலந்துரையாட வருக நண்பர்களே!
என்னை அதிர்ச்சியடையச் செய்த ஆவணப்படம் என்று ஏற்கெனவே எனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். குறுகிய காலத்தில் எனது “அதிகமாகப் பார்க்கப்பட்ட பதிவுகள்” பத்தில் எட்டாம் இடம் வந்திருப்பது, எனது செல்வாக்கால் அல்ல, படத்தின் வீச்சு அத்தகையது! பார்க்க – http://valarumkavithai.blogspot.com/2017/02/blog-post_28.html

இந்தப் படத்தை, வரும் 15-04-2017 சனிக்கிழமை மாலை 6மணிக்கு, புதுக்கோட்டை- உசிலங்குளம் “கந்தர்வன் நூலக அரங்”கில் திரையிடுகிறோம்.
அதோடு இயக்குநர் திவ்யாவுடன் ஒரு கலந்துரையாடலும் உண்டு!


படத்தில் இடம்பெறும் எழுச்சிப்பாடலை எழுதியவர் நம்ம புதுக்கோட்டைக் கவிஞர் இரா.தனிக்கொடி என்பதால் அவரையும் கௌரவிக்கவுள்ளோம்!

வரும்போது, ரூ.100 தந்து, படத்தின் காணொலித் தகட்டை (அதாங்க டி.வி.டி!) வாங்கி, படக்குழுவினரின் அரிய முயற்சிக்கு உதவவும் வேண்டுகிறேன். இது கட்டாயமில்லை, வந்து பார்ப்பதே முக்கியம்! அனுமதி இலவசம்தான்!

அனைவரும் வருக நண்பர்களே! முக்கியமாக, மக்களிடையே பல்வேறு துறைகளில் சமூகப் பொறுப்புடன் பணியாற்றிவரும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!  அனைவரும் வருக! படக்காட்சி இலவசம்!வாய்ப்புள்ள  நண்பர்கள், 

“கக்கூஸ்” ஆவணப்படம் திரையிடல்
http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_10.html  

எனும்இந்த இணைப்பை,
தமது முகநூல்,  சுட்டுரை,  ஜி+ முதலான
சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
உதவ வேண்டுகிறேன். நன்றி

13 கருத்துகள்:

 1. நல்ல முயற்சி அய்யா...முகநூலில் பகிர்ந்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
 2. கழிவுகளை கையாள்வது குறித்து எவரும் யோசிப்பதே இல்லை

  பதிலளிநீக்கு
 3. நல்ல முயற்சி
  நிகழ்வு சிறப்புற
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. மதுரையில் நடைபெறுவதாக இருந்து கலெக்டர் உத்தரவின் பேரில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. உங்கள் ஊரில் நட்ன்கு நடக்க வாழ்த்துகள். எங்க ஊர் கலெக்டர் இப்படி ... உங்க ஊர் கலெக்டர் எப்படியோ?

  பதிலளிநீக்கு
 5. தவறாமல் கலந்து கொள்கிறேன். காணொளி தகட்டையும் வாங்கி மகிழ்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. மிக நல்ல முயற்சி! நான் வர இல்லாவிட்டாலும் பதிவைப் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு முயற்சிக்குக் கைகொடுக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டும், நன்றியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலந்துகொள்கிறேன் தோழர் விழா சிறக்க விரும்புகிறேன்

   நீக்கு
 8. நிகழ்ச்சி பற்றிய அறிக்கை வெளியிடுங்கள் தோழர்.

  பதிலளிநீக்கு