சன் டி.வி., விஜய் டி.வி.யை சரித்திரம் மன்னிக்காது!

கலர் டிரஸ் போட்டுக் கலக்கும்
கவர்ச்சிப் பேய்!
     (எப்புடீ?)

 படிப்பவர்களை 
வெறும் பார்ப்பவர்களாக மாற்றியது 
தொலைக்காட்சி!
அது குழந்தைளைப் பாதிப்பதைப் பற்றி 
விளக்க வேண்டியதில்லை.
விஞ்ஞான சாதனங்களை அறிவு வளர்ச்சிக்கே பயன்படுத்த அரசுகள் நினைத்தால் முடியும்! நமது அரசுகள் எந்தக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை! ஆனால் தலைமுறைகள் நாசமாகப் போவது பற்றிய கவலை உள்ளவர்கள் யாவரும் இதுபற்றி யோசிக்க வேண்டும்! 

ஆனால், மனச்சாட்சியே இல்லாத ஊடக முதலாளிகள் தான் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் “இது உண்மையா?” என்றுகூட மக்கள் குறிப்பாக இளம்பிள்ளைகள் சந்தேகம்கூடப் படமுடியாதபடி பேய்ப் படங்களை இப்போது எடுத்துத் தள்ளுகிறார்கள்… 
இது நியாயம் தானா?

பொழுதெல்லாம் பொழுதுபோக்கா?
“வானத்தில் வேர்விட்டு,
வீட்டுக்குள் பூப்பூக்கும்
விஞ்ஞானச் செடி” –என்றொரு கவிதையைத் தொலைக்காட்சியைப் பற்றிப் படித்தபோது நான் உண்மையிலேயே மகிழ்ந்துதான் போனேன். உண்மை என்னவெனில், 
“எங்கெங்கோ எடுத்த பிச்சையை 
நம்தட்டில் போடும் 
பிச்சைப்பாத்திரமா
தொலைக்காட்சி?” என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது?

நாள்முழுவதும், பாடல் உரைக்காட்சி (டாக் ஷோ!) முழுக்க முழுக்க சினிமா (on cinema, of cinema, by cinema & For cinema) என்றிருப்பது சமூக நோயல்லவா? இதற்கு மாற்று என்ன? மருந்தில்லாத நோயா இது?

நகைச்சுவைப்பேய் போய் கவர்ச்சிப் பேய் காலமிது?
அட பேய்கள் என்றால் வெள்ளைச் சீருடை என்பது கூட மாறிவிட்டதே! அதுசரி… நாமெல்லாம் வேட்டி, சேலையிலிருந்து பேண்ட், சுடிதாருக்கு மாறிய பிறகு, பேய்கள் அதே பழைய வெள்ளைச் சீருடையில்தான் இருக்கணுமா என்ன? அவையும் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறிட்ச்சுங்கோவ்!
ஆமா… இப்ப எல்லாம் வண்ண வண்ண உடைகளில் மட்டுமல்ல, வளைந்த இடுப்பும் எடுப்பான உடற்கட்டுமாக வந்து கலக்குகின்றன! வாலிபப் பேய்கள்! ஆமா… பாருங்களேன்.. 
கவர்ச்சியில் கலக்கும் பேய்கள்!

அச்சுறுத்தும் பேய்கள்!

ஆளை மிரட்டும் பேய்கள்!

யாகத்தில் கட்டுப்படும் பேய்கள்!

பாவப்பட்ட பேய்கள் (?பாவம்ல!)

நாகமே  பேயாக..பெண்ணாக(?)

அம்மன் கண்ட்ரோலில் பேய்கள்

ஆத்தா வந்தா... காப்பாத்துவா!

 அதற்கும் பூசாரி ஏஜெண்ட் உண்டு!

மாமிப் பேய்க்கும் அம்மாப் பேய்க்கும் சண்டையோ?

பேய்க்கே குழப்பம்!
ரெண்டுபேரும் யாகம் பண்ணினா
யார்பேச்சைக் கேட்பது(?)
------------------------------------------------------------------
இப்ப என்ன ஃபேஷன் னா,
லோக்கல் கவர்ச்சியை விடவும்
வடநாட்டு இறக்குமதிக் கவர்ச்சிப் பேய்களுக்குத்தான்
மௌசு அதிகமாம்... பேர் தெரியாதில்ல?

என்னமா யோசிக்கிறாய்ங்கெ!
--------------------------------------------------------------
விதியே விதியே தமிழச் சாதியை 
என்செய நினைத்தாய் எனக்குரை யாயடா! 
- பாரதி

 “சீரியநல் கொள்கைகளை எடுத்துக் காட்ட
      சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்,
கோரிக்கை பணம்ஒன்றே என்று கொண்டால்
      கொடுமைஇதை விடவேறே என்ன வேண்டும்!” 
– பாரதிதாசன்.

உங்கள் மேடை
உங்கள் நாக்கு
எதுவேண்டுமானாலும் பேசுங்கள்!
உங்கள் பேனா
உங்கள் அச்சகம்
எதுவேண்டுமானாலும் எழுதுங்கள்
!

(வைரமுத்து மன்னிக்க...
இதில் நாம் ஒன்றைச் சேர்க்கலாம் போல..
“உங்கள் சேனல்
உங்கள் சீரியல்
எதுவேண்டுமானாலும் போடுங்கள்”)
ஆனால்
காலத்தின் விமர்சனம்
உங்கள் பிணங்களைக் கூட
தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும் 
என்பது மட்டும் நியாபகம் இருக்கட்டும்
!
- வைரமுத்து

நா வேற என்னத்தச் சொல்ல...! அட போங்கப்பா!
--------------------------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

  1. உங்கள் பதிவில் முதல் படத்தில் இருக்கும் பேய் எனக்கு பிடித்திருக்கிறது அந்த பேய்க்கு என்னை பிடித்திருக்கிறதா என கேட்டு சொல்லுங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்... அதை அமெரிக்காவில் இருக்கும் தங்கள் அம்மணியின் அனுமதிபெற்றுக் கேட்கணுமாமே? நீங்களே கேட்டுவிடுங்களேன்...

      நீக்கு
  2. அறிவை வளர்க்க டிவியா நல்லா போச்சு போங்க.........நீங்க எந்த உலகத்தில் இருக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரலைப் பாடங்கள் பல்கலைக்கழகத் தேர்வுகள் பற்றிச் சொன்னேன்..

      நீக்கு
  3. அதாங்க இந்த மாதிரி பேய்கள
    நான் பாக்கவே மாட்டேன்....
    சுடுகாட்டுக்கு போய் நிஜப் பேயதான்
    பார்ப்பேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..
      எப்பேயை யார்யார்வாய்க் கேட்பினும் அப்பேய் மெய்ப்பேய் காணல் சரிப்பேய்...

      நீக்கு
  4. ஆதங்கம் புரிகிறது ஐயா. எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி இப்படித்தான் இருக்கிறது ஐயா.

    நான் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சிப் பெட்டியை திறக்கவே இல்லை! மூடுவிழா நடத்திவிட்டேன்....

    பதிலளிநீக்கு
  5. பார்க்க வைக்கும் தொலைக்காட்சி
    எனக்கு ரொம்ப அலர்ஜி

    பேய் வேறா??? படம் பார்ப்பதே இல்லையண்ணா.
    இங்கு அறிவுக்குப் பயன்படுத்துகிறார்கள்...அதுவும் பார்க்க வைப்பதாகவே எண்ணுகிறேன்...புத்தகம் படிப்பதுபோல் இல்லை...

    பதிலளிநீக்கு
  6. வரிசையாக எத்தனை பேய்கள்? IDIOT BOX என்று இதற்கு இன்னொரு பொருத்தமான பெயர் உண்டு அண்ணா! தொடர்ந்து இதனைப் பார்ப்பவர்களுக்கு மறை கழலுவது உறுதி! அதனால் நான் இதனைப் பார்ப்பதேயில்லை! உங்கள் ஆதங்கத்தையும், வேதனையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தொகுப்பாளினிகள் தமிழே வராதது போல் செய்யும் தமிழ்க் கொலையைப் பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்!

    பதிலளிநீக்கு
  7. டீவி சீரியல் பார்த்தால் நம் மண்டை காய்ந்துவிடும்! பெண்மணிகளை கவர தொலைக்காட்சிகளின் தந்திரம் இந்த சீரியல்கள்!

    பதிலளிநீக்கு
  8. நாய் வித்தகாசு குரைக்காது என்பதுபோல பேய்ப்படங்களின் வருவாய் குறையாது என்பதில் கோடம்பாக்கம் கனவுத் தொழில் முதலாளிகள் மிகுந்த நம்பிக்கையோடு முதலிட்டு மக்களை மடமைக்குழிக்குள் அமிழ்த்தத் தொடங்கியிருக்கிறார்கள். தீப்பந்தம் ஏந்தச் சொன்ன ஈரோட்டுக் கிழவர் இல்லை என்ற துணிச்சலில். அக்கினிக்குஞ்சுகள் மடமை இருளழிக்க கிளம்பினால் வெந்து தணியும் அந்தப் பேய்க்காடு.

    பதிலளிநீக்கு
  9. இப்போ பேய்களின் அரசாட்சி... நான் தொலைக்காட்சி நாடகத்தைச் சொன்னேன் ஐயா...

    பேய்ப்படங்களுக்கு மவுசு இருப்பதால் தொலைக்காட்சியும் பேயோடு நடக்க ஆரம்பிச்சிருச்சு போல...

    பதிலளிநீக்கு
  10. ஐயா, பேய் பயம் போய்விவிட்டது comedy பேய்கள்,ஜாலி பேய்கள்,குத்துப்பாட்டுக்கு dance ஆடும் பேய்கள்..எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

    பதிலளிநீக்கு
  11. மிக சரியான கருத்து. தொல்லைகாட்சியில் பேய்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குழந்தை பேய், கருவிலிருக்கும் பேய், பிணமான பேய், இவைகளெல்லாம் இனி முளைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. இளைஞர் சக்தி அவலமாக போய் விட்டது. சமுக அறிவு அணு அளவும் இல்லாமல் போய் வேதனை நிலையில் உள்ளது. எந்த நீதியும் நியாயமும் இல்லாமல் எவ்வளவு நாட்கள் போகும் இந்நிலை?

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. இப்பொழுது பாம்பு சீரியல்தான் டிரன்ட். விதம் விதமாக (பாம்பு) படம் காண்பிக்கிறார்கள்.மக்களும் அதனை எப்படித் தான் பார்க்கிறார்களோ தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  15. எனக்கு இந்தப் பிரச்னை எல்லாம் இல்லை.முகநூல்,டுவிட்டர்மற்றும் இணைய இதழ்களில் எழுதுவதறகே நேரம் போதவில்லை.நான் எங்கே இந்த பேய்களைப் பார்ப்பது.அவைகள் வந்து என்னை(கனவில் வந்து)பார்த்து விட்டுப் போகட்டும்.

    பதிலளிநீக்கு