பிளாஸ்டிக் அரிசி! சீனப் பட்டாசு! செய்திகளின் பின்னணி என்ன?


பிளாஸ்டிக் அரிசியா?
என்ன? கேட்டவுடன் பகீரென்கிறதா?
எனக்கும் 
அப்படித்தான் இருந்தது. 

பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடுவதால் எவ்வளவு ஆபத்துகள் நிகழும்!?

இதைப் பாருங்கள்-

இது உண்மையாக இருக்குமானால் உடனடியாக இதனைத்
தடுக்க வேண்டுமல்லவா?
(இது எனக்கு முகநூலில் வந்தது 
இணைப்பு அதிலேயே உள்ளது)

சரி இந்தவகை அரிசிகளை எப்படி அறிவது?
இதோ இந்த இணைப்பில் பாருங்கள் –

இப்போதெல்லாம் சீனப் பொருள்களை வாங்காதீர்கள், சீனப் பட்டாசுகளை வாங்காதீர்கள் என்றெல்லாம் வரும் காண்செவிச் செய்திகளை நான் நம்புவதில்லை. அதில் பெரிய அரசியல் நடப்பதை நானறிவேன்.

எனவே, இந்த இணைப்பிலும் இந்தவகை அரிசிகள் 
சீனாவில் தயாரிக்கப்படுவதாக உள்ளதையும் இப்படியான அரிசி அரசியலாகவே நினைக்கிறேன்.

என்றாலும்,
பிளாஸ்டிக் அரசி எச்சரிக்கை தேவைதானே?
எனவே தான் பகிர்ந்திருக்கிறேன். மேலே படியுங்கள்...


இனி சீனப்பட்டாசு பற்றி நண்பர் திருச்சி வில்வம் அவர்கள் எனக்கு அனுப்பிய காண்செவிக் குறுந்தகவலை அறிவோம். 
பயனுள்ள தகவல் என்பதால் பகிர்கிறேன்-

சீன பட்டாசு குறித்து தற்போது whatsapp ல் துரிதமாக பரவி வரும் செய்தி குறித்து சிறு விளக்கம்...
“நான் பல முறை இவற்றை பகிர்ந்து கொண்ட பின்பும் பல அறிவாளிகள் ஏனென்று தெரியாமல் இந்த வாட்சாப் பதிவை பகிர்ந்து கொள்வதை கண்டித்து இந்த என் பதிவு!

சீன பொருளை வாங்க வேண்டாம் என்று கூறும் திடீர் Whats app தேசபக்தர்களுக்கு சில கேள்விகள்
இந்தியா மக்கள் சீன பட்டாசுகளை வாங்க வேண்டும் என்றால் அதை சாதாரணமாக இந்திய அரசு இனி எந்த இந்திய வியாபாரியும் சீனாவிலிருந்து சீன பட்டாசுகளை இறக்குமதி செய்ய கூடாது என்று தடைவிதிக்கலாம்.
அப்படி மீறி விற்றால் கடுமையான தண்டனை என்று சொல்லி தன்னுடைய தேசபக்தியை உறுதி செய்யலாம்....

முதலில் இந்திய அரசுக்கு தெரியாமல் சீன பட்டாசுகள் எப்படி இந்திய நாட்டிற்குள் வரும்.
அப்படி வந்து விற்பனை நடக்க போகிறது என்றாலே இந்திய அரசு இந்திய மக்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
பிரதமர் மோடி தான் பதவியேற்ற இந்த 2 1/2 ஆண்டில் சீன நாட்டிற்கு மூன்று முறை பயணம் மேற்கொண்டு இந்திய நாட்டில் தொழில் முதலீடு செய்யுமாறு ஒப்பந்தம் போட்டுள்ளார். அப்போது தேசபக்தி எங்கே போனது.

இந்த what's up தேசபக்தர்களுக்கு இன்னும் ஒரு முக்கிய தகவல் Reliance தற்போது அறிமுகபடுத்தியுள்ள Jio சிம் கார்டு அதற்கான தொழில் நுட்பம் சீனாவிலிருந்துதான் இறக்குமதியாகியுள்ளது.
சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறும் இந்த வாட்சாப் தேசபக்தர்கள் சீனத்தொழில் நுட்பத்தில் தயாரித்த Jio SIM card இந்திய மக்கள் வாங்க வேண்டாம் என்று reliance கடை வாசலில் கூட்டம் கூட்டமாக நிற்கும் மக்களுக்கு தேசபக்தியை ஊட்டலாம், செய்வார்களா?

முடிந்தால் இந்நாட்டின் பணக்காரக் குடிமகனான ரூ12,000/-கோடி வீட்டில் வசிக்கும் பரம ஏழையான அம்பானிக்கு தேசபக்தி குறித்து அறிவுரை கூறலாம்.


அரசு நிறுவனமான Bsnl ஒழிக்க reliance Jio விற்கு விளம்பர மாடலாக நடித்த மோடிக்கு தேசபக்தி சொல்லித் தரலாம்

சீனப்பட்டாசுகளால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படபோகிறது என்றால் இந்திய அரசு அதை பகிரங்கமாக தடை செய்யட்டும். திரைமறைவில் சமூக வலைதளங்களில் மக்களை அச்சுறுத்த வேண்டிய மர்மஅவசியம் என்ன வந்தது?

உண்மையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே வகையான ஆயுதத்தை வியாபாரம் செய்யும் நாடு அமெரிக்கா தான். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுத வியாபாரம் செய்யவில்லை என்று மறுக்க முடியுமா?? இந்த What's app தேசபக்தர்களால்.

தைரியம் இருந்தால் பாகிஸ்தான், இந்தியா இரண்டுக்கும் ஆயுதம் விற்கும் அமெரிக்கப்பொருளை பகிஷ்கரிப்போம் என்று கூறுங்கள் தேசபக்தர்களே.
Toilet cleaner ராக பயன்படுத்த வேண்டிய Pepsi,Coca-Cola வை இந்தியாவில் குளிர்பானங்களாக விற்பனை செய்யும் அமெரிக்க கம்பெனி பொருளை பகிஷ்கரிக்க சொல்லி தங்களுடைய தேசபக்தியை வெளிபடுத்தியிருக்க வேண்டும் இந்த தேசபக்தர்கள்

நாட்டின் அடிதட்டு மக்களின் எந்த பிரச்சினையும் தீர்க்க திட்டம் இல்லாத ஆட்சியாளர்கள், அதை மறைக்க அவ்வப்போது அண்டை நாடுகள் மீது பகைமையை வளர்க்க மக்களிடம் தேசிய வெறியை கிளப்பி வருவது ஒரு அரசியல் தந்திரம்.

அதைத்தான் தற்போது தந்திரமாக செய்து வருகிறார்கள்.

மக்கள் இதற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்ளும் வரை இப்படி பட்ட போலி வாட்சாப் தேச பக்தர்கள் நம்மிடம்
இந்த போலி தேசபக்தியை சொல்லி ஏமாற்றிவருவது தொடரும்.
அனைத்தையும் கேள்வி கேள்...
அனைத்தையும் சந்தேகி..
அரசியல் பழகு...

மா.செழியன்..
(காண்செவியில் நண்பர் திருச்சி வில்வம் தந்த செய்தி)

இவற்றின் உண்மைகளுக்கு அப்பாற்பட்டு, எனக்குத் தோன்றுவதும் ஒன்றுண்டு. சீனா அமெரிக்காவைப் போல் ஆயுத விற்பனையைத் தூண்டுவதற்காக நாடுகளிடையே சண்டையை மூட்டி அதில் லாபம் பார்க்கும் நாடல்ல! அது சமத்துவ மக்கள் குடியரசு! மனிதாபிமானமற்ற முறையில் இதுபோல் கெமிக்கல் கலந்த பட்டாசு மற்றும் ப்ளாஸ்டிக் கலந்த அரிசி தயாரித்து பிற நாடுகளுக்கு விற்கும்படியான மனிதாபிமானத்திற்கு எதிரான எதையும் அது செய்யாது, தமது மக்களின் வேலைவாய்ப்பிற்காக கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை உலக நாடுகளுக்கு மலிவான விலையில் தந்து தம் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் பிறநாட்டு மக்களுக்கு மலிவான பொருள்களையும் தரும் அன்றி அமெரிக்காவும் சீனாவும் ஒன்றல்ல என்கின்ற புரிதல் முதலில் நமக்கு வேண்டும் – இது முக்கியம்.

எனவே தான் இந்தப் பதிவு
நன்றி நண்பர்களே!
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்” (திருக்குறள்-510)
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.--மு.வ.உரை
------------------------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. பிலிப்ஸ் CFL பல்ப் 500,600 ஆகிறது. சீன CFL 150 , 200 தான். ரொம்ப சிம்பிள். ரோடோரம் டீக்கடைக்கு 600 ௹ பல்புவேஸ்ட்.

    பதிலளிநீக்கு
  2. வணிக உத்தியில் பாதிக்கப்படுவது பொதுமக்களே.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு