விரைவில் மாறப் போகிறது உங்கள் செல்பேசி எண்?

         இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்க செல்பேசி எண்களை, விரைவில் 11 இலக்க எண்களாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
        இந்தியாவில் செல்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 10 இலக்க எண்களைக் கொண்ட எண்ணே அறிமுகம் செய்யப்பட்டது
(அப்போதிருந்த பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டாது என்னும் முடிவின் அடிப்படையில் இருந்திருக்கலாம். ,இந்தியர்கள் இப்படி ஆளுக்கு 4செல்பெசி ஒவ்வொன்றிலும் 4சிம் என்று வாங்கிக் குவிப்பார்கள் என்று யாரும் சொல்லலியே...!)
செல்போன் பயனர் அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்குப் பராமரிக்க முடிவும் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியாவில் செல்பேசி சேவையின் அசுர வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடும் காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது
(அதனால், இரண்டு சிம் வைத்திருக்கும் ஒரே மனைவியின் எண்களை மனைவி-1, மனைவி-2 என்று போட்டுவைத்திருக்கும் நம் கணவன்மார்களை என்ன செய்ய ?)
இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
(இதனால் குழப்பம் ஏற்படாமலிருக்க, தற்போதிருக்கும் எண்களின் முன்னோ / பின்னோ ஒரு சுழியத்தை (0) மட்டும் போட்டு, சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, புதிய எண்களுக்கு மட்டும் 11இலக்க எண்களைத் தரலாம்… அரசாங்கத்தார் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ? அந்த சுழியத்துக்கே வெளிச்சம்! -நா.மு.)
அடைப்புக்குறிக்குள் நீல வண்ண எழுத்தில் இருப்பவை மட்டும் நம் கருத்துகள். மற்றவை அப்படியே வந்த செய்திகள்
தகவலுக்கு நன்றி – பாடசாலை இணையம்-

16 கருத்துகள்:

 1. நமது மக்கள் 11 இலக்க எண்களிலும் ஆளுக்கு நாலு சிம் கார்டு வாங்கிவிடும் அபாயம் இருப்பதால். பேசாமல் 16 இலக்க எண்ணை வழங்கிவிட்டால் ஒரு 50 வருடங்களுக்கு பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்.
  நல்ல பதிவு! நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே! குடும்பக்கட்டுப்பாடு மாதிரி “செல்கட்டுப்பாடு திட்டம்” கொண்டுவரப் போகிறார்களோ என்னமோ?

   நீக்கு
  2. இப்போதே சிம் கார்டுக்கு கட்டுப்பாடு இருக்கிறது அய்யா. ஒரு தனி நபர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுதான் பெறமுடியும். கடைசியில் பார்த்தால் அது ஒரு நிறுவனத்தில் 9 சிம் கார்டு வாங்கமுடியும் என்றிருக்கிறது. அதாவது ஏர்டெல்லில் 9, ஏர்செல்லில் 9 என்று வாங்கிக் கொண்டே இருந்தால், இந்தியாவில் மொத்தம் 11 சேவை நிறுவனங்கள் உள்ளன. 11 x 9 = 99 சிம் கார்டுகள் வாங்கலாம். இன்னும் ஒன்று இருந்தால் சதமடித்த பெருமையோடு வலம் வரலாம்.
   நமக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறதய்யா!

   நீக்கு
 2. ஆஹா தந்தையே 11 இலக்க எண் என்பதிலே நான் பதறிவிட்டேன்.இதில் 16 இலக்க எண் என்றால் ..??? நமது அரசாங்கம் விரைவில் இத்திட்டதை நிறைவேற்றுமா ..??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பா. ஆறுமாதமாவது ஆகலாம். 16இலக்க எண் நம் செந்தில்குமார் போல நினைவாற்றல் உள்ளவர்க்கு மட்டும் தந்தால் நல்லா இருக்கும் ல?

   நீக்கு
 3. செல்கட்டுப்பாடு திட்டம் அவசியம் கொண்டு வரத்தான் வேண்டும் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் கண்டது அய்யா? திட்டங்களைப் போட்டு நடைமுறையாகாமல் பார்த்துக் கொள்வதில் நம் தலைவர்களை மிஞ்ச முடியுமா என்ன?

   நீக்கு
 4. ஐயா! எத்தனை இலக்கங்கள் இருந்தாலும் கவலைப் படத் தேவை இல்லை. நாம் என்ன முன்பு போல எண்களை நினைவில் வைத்திருக்கவா போகிறோம். கைபேசிதானே நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் முரளி அய்யா. இப்பவே நண்பர்களின் எண் மறந்துபோய் “நீயெல்லாம் என் நம்பரை நினைவு வச்சிருப்பியா?” என்று ஓட்டும் நண்பர்ளிடம் இனி “ஙே” என்பதே வழக்கமான நம் முழியாகிவிடும் அபாயமுள்ளது. (நமக்குத்தான் மனப்பாடம் னா பள்ளிக் காலத்திலிருந்தே ஆகாதுல்ல..?)

   நீக்கு
  2. “செல்”லத் தாயி அம்மன் நமக்குப் பலநேரம் உதவுவதே இல்லையே முரளி அய்யா? அப்பப்ப எண்களை அழித்துக் கொண்டே வருவது என்ன தொழில் நுட்பமோ தெரியல போங்க..

   நீக்கு
 5. செல்வந்த நாட்டின் குடிமக்கள் தங்கநகையும்,செல்போன்களும் வாங்கி குவிக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 6. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. இன்னும் எனக்கு எனது செல்போன் எண்ணைத் தவிர, எனது குடும்பத்தார் செல் எண்களை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை. 10 இலிருந்து 11 ஆனாலும், 16 ஆனாலும் எனக்கு கவலையில்லை.

  பதிலளிநீக்கு
 7. இன்னும் என்னென்ன சிக்கல் வரப்போகிறதோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. இரண்டு சிம்கள் வைத்திருக்கும் கணவன் மனைவி-1 , மனைவி-2. ஹா ஹா ஹா! நல்ல நகைச்சுவை!

  பதிலளிநீக்கு
 9. ஹஹா... நகைச்சுவையுடன் கருத்து பகிர்ந்தமை அழகு...

  பதிலளிநீக்கு