மேதின சிறப்புப் பட்டிமன்றம் பார்க்க, கேட்க, அன்போடு அழைக்கிறேன்

01-05-2016 - மேதினம் - ஞாயிறு
காலை 9 மணிமுதல்  10.15மணி வரை
  கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றம்
சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை –
மனித உழைப்பா?            அறிவியல் வளர்ச்சியா?
- நடுவர் - 
திண்டுக்கல் .லியோனி
மனித உழைப்பே!                 அறிவியல் வளர்ச்சியே
   சென்னை விஜயகுமார்                 திண்டுக்கல் சிவக்குமார்
   காரைக்குடி சர்மீளி                                 தேனி தமிழ்ச்செல்வி
   புதுக்கோட்டை நா.முத்துநிலவன்         கோவை தனபால்

      (அணித்தலைவர்)                                          (அணித்தலைவர்)

(நிகழ்ச்சியில் பேசும் வரிசையில் பெயர் உள்ளது)
------------------------------------------ 
பி.கு.(1)
நடுவர் திமுக பேச்சாளர் என்பதை அறிவோம். எனினும்
பட்டிமன்ற ஜனநாயகத்தை மதித்து,  
என்னைப்பேச அழைத்த நடுவர் அவர்களுக்கும், வேறுஎந்தத் தொலைக்காட்சியும் மேதினப் பட்டிமன்றம் நடத்ததாத போதும், 
எடுத்து நடத்திய கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனது 
நன்றியும் வணக்கமும்.
பி.கு.(2)
தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கச் சொடுக்குக-
https://www.youtube.com/watch?v=QXQLJx8qLhU 
------------------------------------------------ 
நண்பர்கள் அனைவருக்கும்
எனது நெஞ்சார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துகள்!
------------------------------------------------------- 

கரூர் எஸ்.பி.வந்திதாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனின் குடோன் மற்றும் வீட்டில், கடந்த, 22ஆம் தேதி, 4.87 கோடி ரூபாயை (அடங்கப்பா???) வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. ஆம்புலன்ஸ், வாகனங்கள், பணம் எண்ணும் இயந்திரங்களும்(அடடே???) பறிமுதலாயின!!!
சரி……………இந்த அன்பு(?)நாதன் யார் தெரியுமா?
யார் யாருக்கெல்லாம் பினாமி தெரியுமா?

அ.தி.மு.க வைச் சேர்ந்த மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரும், அவர்களுடைய அனைத்து விவகாரங்களையும் உடனிருந்து கவனித்து வருபவர்தான் இந்த அன்புநாதன்!

தமிழகமே அதிர்ந்துபோன இந்தப் பறிமுதலை கரூரின் இளம் எஸ்.பி. வந்திதா அவர்கள் முன்னின்று நடத்தினார். தற்போது, அன்புநாதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அன்புநாதன் வீட்டில் பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பெண் எஸ்.பி. வந்திதாவைக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த வெங்கடேசன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கியுடன் வந்த வெங்கடேசன் கரூர் பரமத்தியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பெண் எஸ்.பி.யை கொல்லுமாறு தம்மிடம் மர்மநபர்கள் துப்பாக்கி தந்ததாக வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

பணம் பதுக்கியவர்களே எஸ்.பி. வந்திதாவை கொல்ல முயற்சியா என தீவிர விசாரணை நடந்து வருகின்றது!

இது ஒருபுறம் இருக்க, வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாகவும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது(?)  
இதையடுத்து, செய்தியாளர்கள் தனியார் மருத்துவமனையில் குவிந்தனர். ஆனால், வந்திதா பாண்டே அந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தது உறுதியானது.

இதுகுறித்து, எஸ்.பி. வந்திதா பாண்டே செய்தியாளர்களை தொடர்பு கொண்டு பேசியதோடு, ''நான் நலமுடன் உள்ளேன்; எந்த பிரச்சனையும் இல்லை. வதந்தியை பரப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை, என்று தெரிவித்தார்.


இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வந்திதாவை கொலை செய்யும் நோக்கத்துடன் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை வதந்தி பரப்பிய நபர்களே இப்போது கொலை செய்யவும் முயற்சி செய்தார்களாக என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரி, எனது கேள்வி -
கரூரின் இளம் பெண்எஸ்.பி.வந்திதா என்ன தவறு செய்தார்?
தவறுகளைத் தட்டிக் கேட்பதும், தவறு செய்வோரை அதைச் செய்ய விடாமல் தடுப்பதும்தானே காவல்துறையின் கடமை?
அதைத்தானே அவர் சரியாகச் செய்தார்? 
இப்படி அவர் தற்கொலை செய்துகொண்டதாக வதந்தி பரப்பும் கேவலமான பிறவிகளைத் தேர்தல் ஆணையம் குற்றவாளிகள் பட்டியலில் வைத்து, தேடிப் பிடித்துத் தண்டிக்க வேண்டாமா?
அதுஒரு புறமிருக்க,

தமிழ்ச்சமூகத்தினர், இந்தக் கேவல அரசியல் நோய்த்தொற்றைத் தடுப்பதில் தன் துணிவான கடமையை ஆற்றிய வந்திதாவுக்கு வணக்கம் சொல்ல வேண்டாமா
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை!”

வந்திதா போல் ஒருசிலர் இருப்பதால் 
அவர்களால் தமிழகம் தலைநிமிரும்! 

நாமனைவரும் அவருக்குக்
கடமைப்பட்டிருக்கிறோம்! 
அவரை வாழ்த்துவோம்!
வாழ்க அந்தப் பெண் சிங்கம்!

எழுந்து நின்று சொல்வோம்!
கரூர் எஸ்.பி.வந்திதாவுக்கு 
ஒரு ராயல் சல்யூட்!
நீ நல்லா இருக்கணும் தாயி!

தகவலுக்கும் படத்திற்கும் நன்றி:

மக்களின் தேர்தல் அறிக்கை –தொடர் பதிவு (கல்வி – நா.முத்துநிலவன்)

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றிய கட்சிகள் மட்டுமே அடுத்த தேர்தலில் நிற்க முடியும் என, சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது முதல் கோரிக்கை... 

அதுவரை, நமது தமிழ்நாட்டு அரசின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றம் தேவை என்பது பற்றிய நம் கருத்துகளை –அதாவது நமது மக்களின் தேர்தல் அறிக்கையை நாமே பகிர்ந்து வெளியிடலாமே?

பதிவுலக நண்பர்கள், அவரவர்க்கும் விருப்பமான துறைகளில் தம் கருத்தை முன்வைக்க அழைக்கிறேன் –
-----------------------------------------------------------------------------------------  
இதோ கல்வி பற்றிய எனது அறிக்கை-
(1)  கல்வி (அடிப்படை உரிமையாகச் சட்டமியற்றப்படும்)
கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் மயம் முற்றிலும் ஒழிக்கப்படும். இவற்றில் அரசுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் உதவுவோர் பெயர்  அந்தந்த இடங்களில் வைக்கப்படும். ஆரம்பக் கல்விமுதல் உயராய்வு, தொழிற்கல்வி மருத்துவ, விஞ்ஞான, வேளாண் கல்வி வரை அனைத்து நிலைக் கல்வியும் மாணவர் ஆர்வத்தின் அடிப்படையிலும் சமூகநீதி அடிப்படையிலும் அரசுச் செலவில் விடுதியுடன் தருவது அரசின் பொறுப்பாகும்.

அவசரச் செய்திகள் சிலவற்றில் ஒன்று..

நாய்க்கு வேலை இல்லயாம்.. உக்கார நேரமில்லையாம் என்னும் பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.
ஓடிக்கொண்டே திரிவதில் எத்தனை இழப்புகள்!

சரி.
எங்கள் இனிய வைகறையின் 
எதிர்பாராத
மறைவைப்பற்றி 
எழுதவேண்டும்...
எப்படி எழுதப்போகிறேன் என்று தெரியவில்லை...
---------------------
இன்று காலைதான் சென்னையிலிருந்து வந்தேன்..
அவசரச் செய்திக்காக இந்த அவசரப் பதிவு...

இன்று (24-04-2016) ஞாயிற்றுக்கிழமை,
மாலை 6மணி முதல் 6.30மணிவரை, 
டி.டி.பொதிகைத் தொலைக்காட்சியில்,
அண்மையில் நாகையில் நடந்த 
இந்து-தமிழ் நாளிதழின்
கல்லூரி மாணவர்க்கான
 “வாக்காளர் வாய்ஸ்” நிகழ்ச்சி 
ஒளிபரப்பாகிறது.

அரைமணி நேர நிகழ்ச்சியில் 
நான் பேசியதும் வருகிறது... 

நேரமிருப்பவர் பாருங்கள், 
அதோடு,
வாய்ப்பிருப்பவர் 
எனது பேச்சைப் பதிவு செய்து 
இணைப்பைத் தாருங்கள்.
இந்தப் பதிவிலேயே பின்னர் இணைத்து விடுவோம்.
(எனக்குத் தெரியாததால் இந்த வேண்டுகோள்)
பி.கு.-
நண்பர்கள் மன்னிக்க- ஏதோ நினைவில்
அரைமணிநேரம் முன்னர் இந்தப்பதிவை ஏற்றும்போது,
இன்று -22-04-2016 வெள்ளிக்கிழமை என்று குறிப்பிட்டு விட்டேன்.. இப்போது திருத்திவிட்டேன்

ஆர்.கே.நகர் தொகுதியில் கல்வியாளர் வசந்திதேவி வெற்றிபெற வேண்டும்!


சென்னை இராதாகிருஷ்ணன் (ஆர்.கே.) நகரில் 
சட்டமன்ற வேட்பாளராகக் களமிறங்கும் பிரபல கல்வியாளர் வசந்திதேவி வெற்றிபெற வேண்டும்.

இன்று மதியம் மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக-தமாகா கட்சிகளில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவுனர் தலைவர் தொல். திருமாவளவன் இதனைப் பத்திரிகையாளர் மன்றத்தில் அறிவித்தார்.

இப்படி ஒரு மிகவும் தகுதிவாய்ந்த வேட்பாளரைத் தேடி அழைத்துவந்து, ஆதரவு தந்து, “பொதுவேட்பாளராக அனைவரும் ஏற்று, வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட திருமா மிகுந்த பாராட்டுக்குரியவர்.

வசந்திதேவியம்மா, தமிழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான – சிங்காரவேலருடன் இணைந்து பொதுவுடைமை இயக்கத்தைத் தமிழகத்தில் விதைத்த – சக்கரைச் செட்டியார் அவர்களின் பெயர்த்தி என்பதும், முன்னாள் மத்திய மாநில அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்களின் மருமகள் என்பதும் மட்டுமே காரணமல்ல… நல்ல கல்விக்கான, சமச்சீர்க் கல்விக்கான தமிழ் நாட்டுக் கல்வியாளர்களில் மிகவும் முக்கியமான இடம் வகிப்பவர்.

மிகப்பெரிய கல்வியாளரும் இந்தியாவின் முதல்குடிமகன் எனும் பொறுப்புக்குப் பெருமை சேர்த்தவவருமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பெயரில் உள்ள இராதாகிருஷ்ணன் நகரையே ஆர்.கே.நகர் என்று அர்த்தமில்லாமல் சொல்லும் நாம் அதற்குப் பிராயச் சித்தமாக கல்வியாளர் வசந்திதேவி அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

வே.வசந்திதேவி 1938ஆம் ஆண்டில் பிறந்தவர். சொந்த ஊர் திண்டுக்கல். வரலாற்றில் முதுகலைப் பட்டமும்  பிஎச்.டி. பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். 2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாகப் பணியாற்றினார். தற்போது மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

தொலைக்காட்சியில் எனது பேச்சு - காணொளி இணைப்பு

“என்ன உங்களைத் தொ.கா. நிகழ்ச்சிகளில் காணோமே?”
என்று அண்மைக்காலமாக நம் நண்பர்கள் கேட்கிறார்கள்.
விரைவில் வருவேன்...
--------------------------------------------
அதுவரை...
14-01-2014 அன்று
கலைஞர் தொ.கா. பட்டிமன்றத்ததைக்
பார்க்காதவர்கள்
இப்பப் பாருங்க...

பாக்காதவுங்களை அப்படியே விட்டுர முடியுமா, என்ன?
அந்தப் பாவம் நமக்கெதுக்கு?

கேட்டவர்கள்-பார்த்தவர்கள் திட்டினால் அந்தப் பாவத்தை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.

(இதுக்குப் பேர்தாங்க -
“சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிறது”ங்கறது!
அடாடா... நம்ம கிராமத்துக் கிழவிக வாயிலதான் தமிழும் அனுபவமும் எப்படி விளையாடுது பாருங்க!)

பேச்சைக்
குடும்பத்தோடு உட்கார்ந்து
கேட்டும்
பார்த்தும்
என்னைத் திட்ட நினைப்பவர்கள்
என்னோடு சேர்த்துத்
திட்டவேண்டியவர் பெயர் -
திரு திண்டுக்கல் தனபாலன்.

(பின்ன...? அவருதான யூட்யுப்ல போயில இந்த இணைப்பைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர்? அதுனால... மறக்காம அவருக்கும் சேர்த்து ரெண்டு அர்ச்சனயப் போடுங்க..
(அவருக்கு இன்னொரு அர்ச்சனை பாக்கியிருக்கு... அது என்னன்னு அடுத்த வாரம் சொல்றேன்...)

கலைஞர் தொலைக்காட்சிக் காணொளி இணைப்பு -

இவர்களால் நாம் வாழ்கிறோம்!

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது நம்மால் அல்ல!
நான் வாங்கிய எம்.ஏ.எனும் பட்டத்திற்குக் காரணம், என்பெற்றோர், காமராசர்,பெரியார் மற்றும் சமூகநீதிக்காகப் போராடிய பல்லாயிரம் பேர் என்று புரிந்துகொண்டால்தான் நான் உலகம் புரிந்தவனாவேன்!
நம்மை ஆண்ட கலைஞராலோ, ஜெயலலிதாவாலோ சிற்சில நன்மைகளை நாம் அடைந்திருக்கலாம். ஆனால் இந்தச் சிலச்சில நன்மை செய்தவர்கள் தமக்குப் பலப்பல நன்மைகளைச் செய்துகொண்டதைத்தான் இப்போது தமிழ்நாடு முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!
காந்தியும், நேருவும் இவர்களைப் போலும் சிலநூறுபேர் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததாகப் படித்தோம். ஆனால் இவர்களுக்காவது “சுதந்திரப்போராட்டத்தலைவர்கள்” என்ற பேர் கிடைத்தது! பேரைக்கூட தியாகம் செய்த பலலட்சம்பேர்தான் உண்மையில் நம் சுதந்திரத்தின் நாயகர்கள்… அவர்களை நமக்குத் தெரியாது! உண்மைத் தியாகம் அதுதான்! - பானைச்சோற்றுப் பதமாக “ஜாலியன் வாலாபாக் படுகொலை” என்று நம் பள்ளிப் பாடத்தில் வந்த ஒரு நிகழ்ச்சி போதும். அதில் ஜெனரல் டயர் ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் கொன்று குவித்தான் என்னும் கொடுமையான செய்தி வரும். ஆனால்...  
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்டவர் ஒருவரின் பெயர் கூட இந்திய வரலாற்றில் எழுதப்படவில்லை!  
அந்த சாதாரண மனிதர்களின் -சரித்திரத்தில் எழுதப்படாத- தியாகங்களால் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் நம் இன்றைய தலைவர்கள் அல்ல! இதோ வெளியில் தெரியாமல் எந்த விருதும் வழங்கப்படாமல் தமது சமூகக் கடமையைச் செய்துவரும் இந்தச் சாதராண மனிதர்கள்தான் உண்மையின் சரித்திர நாயகர்கள்… 

இவர்கள் சிலநூறுபேர் இருக்கலாம்! பாலம் நூலகர் அய்யா, ட்ராஃபிக் ராமசாமி, அய்யா சசிபெருமாள், சகோதரர் யூனுஸ் போல... 
எல்லாரையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம் – சுயநலத் தலைவர்கள் நம் ஊடகங்களால் அறியப்பட்டுவிடுகிறார்கள், இவர்களைத்தான் நமது குழந்தைகளுக்கு நமது முன்னோடிகள் என அறிமுகப்படுத்த வேண்டும்!
இப்போது நானறிந்து நெகிழ்ந்த
இரண்டு பேரைப்பற்றி மட்டும் சொல்கிறேன் –

எது தமிழ்ப்புத்தாண்டு? ஓர் அலசல்!

சித்திரை முதல்நாளா? தை முதல்நாளா?
எது தமிழ்ப்புத்தாண்டு என்பது பற்றிய அலசல்

தி.மு.க. தை முதல்நாள் என்கிறது,
அ.தி.மு.க. சித்திரை முதல்நாள் என்கிறது.
இரண்டையும் தவிர வேறொன்றும் இருக்கிறதா?
இவற்றில் எது சரி? 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரும், புதுதில்லியின் அறிவியல் அறிஞருமான 
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய 
“எது தமிழ்ப்புத்தாண்டு” எனும் அரிய கட்டுரை ஒன்றை “விழுது” மாத இதழில் படித்தேன்.

இதனை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக அந்த இதழின் கோப்பு முழுவதையுமே இங்குத் தருகிறேன்.
படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்-

இணைப்பில் செல்லுங்கள்..
விழுது- ஜன.பிப்.2016

படித்துவிட்டுச் சொல்லுங்கள்...
நன்றி த.வி.வி., “விழுது” இருமாதக் கல்வி இதழ்.

ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது! சரிதான்!


ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக் காசு பெற்றுவரும், 
தமிழ்நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ம பூஷண் விருது பெற்றார்
சிகரெட்டை எப்படித் தூக்கிப்போட்டு வாயில் சரியாக விழவைப்பது, நெருப்புக்குச்சியை நெருப்பெட்டி இல்லாமலே, கால் சட்டை அல்லது கைச்சட்டைத் துணியில் சரக்குன்னு தேய்த்தே பற்றவைப்பது என்பது போலும் அதிசயங்களை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழ் நடிகர் ரஜினிகாந்த் இன்று விருதுபெற்றுள்ளார்.
இனி செய்தி வருமாறு -

தமிழில் மாணவர் தோல்வியடையக் காரணமென்ன?



கடந்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்புத் தேர்வில் நம் பிள்ளைகள் மதிப்பெண்களை வாரிக்குவித்து “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி” என்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள். 
மாநில முதல்மதிப்பெண் 500க்கு 499 என்பதும், அதையும் 19பேர் பகிர்ந்திருப்பதும், அடுத்த 498ஐ 125பேரும், 497ஐ 321பேரும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திதான்
இதுவரை இல்லாத அளவில்கடந்த கல்வியாண்டில் மாணவ-மாணவியர் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தாலும், பல்லாயிரம்பேர் கணித-அறிவியல் பாடங்களில் 100 விழுக்காடு பெற்றிருந்தாலும், தமிழ்ப்பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாகவே இருப்பதும், 10முதல் 15விழுக்காட்டினர் தோல்வியடைவதும் தொடர்கிறதே ஏன்? அதிலும் தேர்வெழுதிய சுமார் 11லட்சம் மாணவர்களில் 63,000பேர் தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்களே ஏன்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

சில “நல்ல” பள்ளிகளில் கோடை விடுமுறை விடுவதில்லையே இது சரிதானா?!



ங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமதுபள்ளிகளுக்கான கோடை விடுமுறைஎன்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே
அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான நம் பிள்ளைகளுக்கு மட்டும் கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது? அவைதாம் “நல்ல பள்ளிகள்” என்ற நினைவுவேறு!

புதிய தலைமுறையில் வந்த எனது தேர்தல் பாடல்

புதுக்கோட்டை அறிவொளி இயக்கத்தில் நான் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவனாகப்  பணியாற்றிய போது(1989-91) எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி ஷீலா ராணி சுங்கத் அவர்களின் வழிகாட்டுதலில் நான் எழுதிய சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி எனும் பாடல் மாவட்ட ஆட்சியரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் வழி இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழி-இசை பெயர்க்கப்பட்டு வலம் வந்தது. 

அந்த நினைவுகளோடு 2011இல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி சுகந்தி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேர்தல் ஆணையத்தின் வாக்களிப்பது நம் கடமை அது இந்தியர் ஒவ்வொருவரின் உரிமை எனும் கருத்தமைய நான் எழுதிக்கொடுத்த பாடல் இது. 

ஈசன்திரைப்படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாடலைப் பாடிப் புகழ்பெற்றிருக்கும் உண்மையில் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சையில் திருமணமாகிப் போயிருக்கும்- தஞ்சை செல்வி பாட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள கம்பிவட (கேபிள்) தொலைக்காட்சிகளில் ஒளி-ஒலிக் காட்சியாகத் தற்போது வலம் வந்த எனது பாடல்கள்..

 -------------------------------------------------------------------------------  
தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா?
தேர்தல் பாடல் : நா.முத்து நிலவன்

தும்பைவிட்டு வாலைப் பிடிக்கலாமா? -ஏ மாமா
ஓட்டுப்போட நீங்க மறக்கலாமா?

நாம ஓட்டுப் போட்டுத் தானா
நாடு திருந்தப் போகுது?ன்னு
அலட்சியமா நீங்க இருக்கக் கூடாது மாமா!  ஆட்சி
அமைவதிலே உரிமையத்தான் விட்டுக் குடுக்க லாமா?
                                        (தும்பை விட்டு)
யாரோ வந்து செய்வாங்கன்னு
யாரோ வந்து தருவாங்கன்னு
எதுலயுமே கலந்துக்காம இருந்தாஎன்ன ஆகும்?அப்புறம்
குத்துது’‘குடையுதுனு கத்தும் நிலைமை ஆகும்!
                                        (தும்பை விட்டு)
மக்களாட்சி நம்ம நாடு
ஜனநாயகத் தாய் வீடு
இந்தப் பெருமை உன்னால கெட்டுப்போகணுமா?-உனது
ஓட்டாலே நாட்டுக்கே பெருமைஆகணுமா?
                                        (தும்பை விட்டு)
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
சரியாக ஓட்டுப் போடுங்க!
– பாடல்;: -நா.முத்து நிலவன்

சத்தியமா ஓட்டுப் போடுங்க – அண்ணே
சரியாக ஓட்டுப் போடுங்க
நிச்சியமா ஓட்டுப் போடுங்க – அக்கா
நேர்மையாக ஓட்டுப் போடுங்க ஆ…ஆ…ஆ…

‘ஓட்டுப் போட மாட்டேன் – அது

உதவாத வேலை’ யின்னு
உக்காந்து கதைபேசும் உருப்படாத மனுசரால
ஒருத்தருக்கும் பயனில்லீங்க… ஆமாங்க…
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

ஓட்டுப் போட காசு வாங்கி

நாட்ட அடகு வைக்காதீங்க
உரிமைகள விட்டுத்தந்து கடமைகளை மறக்காதீங்க
உங்கஓட்டு உங்கஉரிமை.. ஆமாங்க… 
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க

நம்மை ஆளும் தலைவர்களை

நாமதான தேர்ந்தெடுக்கணும?; - இந்த 
ஜனநாயக வரலாற்றின் நாயகரே நீங்கதானே?
உங்கள் கடமை உங்கள் வாழ்க்கை --அட ஆமாங்க
           (சத்தியமா ஓட்டுப் போட வேணுங்க 
--------------------------------------------------------------------------------------------------------------------------- 
வெளியிட்டமைக்கு நன்றி:
புதிய தலைமுறைவாரஇதழ் ஏப்-14, 2011.

பிரேமலதா அடுத்த ஜெயலலிதாவா?

அண்மைக்காலமாக ஊடகங்கள் இவருக்குத் தரும் முக்கியத்துவம் எனக்கு வேறொரு கலக்கத்தைத் தருகிறது... தமிழ்நாட்டில் எல்லாரும் சேர்ந்து இன்னொரு ஜெயலலிதாவை உருவாக்கி வருகிறோமோ என்று!
பேச்சில் அன்பான விளக்கங்களை விட ஆரவாரமே அதிகம் தெரிகிறது.  கட்சியினர்(?) சேகரித்துத் தரும் விவரம் இருக்கும் அளவுக்குக் கேட்போரைத் தனது நியாயத்தால் கவரவேண்டும் எனும் விவேகம் இருப்பதாகத் தெரியவில்லை. 
இவரது குரல் உயரும்போதோ ஜெயலலிதாவை விடவும் கூடுதல் அச்சம் தருகிறார் ! இந்த அளவிற்கே இது என்றால் அந்த அளவிற்கு அது என்பதுதானே எதார்த்தம்?

கொஞ்சம் உலக அறிவும் கொஞ்சம் கலக அறிவும்..


சுகப்பிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப் பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது. (இத இப்ப காசேறியன் அப்படின்னு சொல்றாங்க!)

தைவானில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை (நம்ம சென்னை அடையாறுக்கே அடையாளமான ஆலமரத்தை வெட்டிட்டாங்க பா! பாலச்சந்தர் படம் ஒன்னுல அந்தாதிப் பாட்டுல அது வந்துகிட்டே இருக்கும்)