எனது
வாழ்நாள் பணியாக நான் எழுதிவரும் நூல்.
25ஆண்டுக்கும் மேலாக சுமார் 10,000 நூல்களைச் சேர்த்து நான் வைத்துள்ள நூலகத்தின்
நோக்கமும் இதுவே!
கடந்த
15ஆண்டுகளாக எடுத்த குறிப்புகளில் எனக்கு நிறைவில்லை!
கடந்த
2001இல் கணினி வாங்கியதும் கற்றுக்கொண்டதும் எழுதிவருவதும் இதற்காகவே!
இதற்காக எடுத்த சில குறிப்புகளைக் கொண்டு அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றையே சிறுநூலாக வெளியிட்டேன் -
“கம்பன் தமிழும் கணினித் தமிழும்“நூல் இதன் முன்னோட்டமே!
இந்நூலிற்கு
உதவியாகவே “வளரும் கவிதை“ எனும் இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கினேன்.
2001இல்
“முன்வெளியீட்டுத் திட்டம்” வெளியிட்டு, அப்போதே சுமார் 250 பிரதிகளுக்கான –பிரதி ரூ.100வீதம்-
ரூ.25,000வந்த நூல்! (பட்டியல் உள்ளது- அதற்குப் பணம் அனுப்பியோர் பட்டியலில் அன்பிற்குரிய பொன்னீலன், “விஜயா“ வேலாயுதம், கோவைஞானி, தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ம.திருமலை, எனப் பற்பலர் தமிழிலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் என்பதொரு செய்தி)
400பக்கம் திட்டமிட்டு, எழுத எழுத விரிவடைந்து 1000பக்கங்களைத் தாண்டிய நூலை இப்போது சிலவற்றைச் சுருக்கியும், சிலவற்றைப் பெருக்கியும் எழுதிவருகிறேன்...
நிறைவை நோக்கி விரைவாக நகர்ந்து வருகிறேன்.
இப்போது, அதே1000பக்கநூலை அச்சிலும், 5,000பக்கநூலை உள்நுழைந்து
பார்க்கும் டி.வி.டி.யிலுமாக சுமார் 500கவிஞர்களின் புகைப்படங்களுடன் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன்.
அதற்குமுன், நம் நண்பர்களுடன் பகிர்ந்து, உரிய கருத்தறிந்து,
கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி,
அதன் பின்னர் அடுத்த ஆண்டு நூலாக வெளியிட எண்ணுகிறேன்.
வணிக நோக்கமில்லை, கவிதை வரலாறே முக்கியம்.
அதற்கென இப்போது உருவாக்கியுள்ள வலைப்பக்கத்தில்
அந்தத் தொடரை நம் வலைநண்பர்கள் தொடர்ந்து வரவும், சரியான கருத்துகளைத் தரவும் அன்போடும்
உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
முந்திய சங்க இலக்கியம்
அறஇலக்கியம்
பேரிலக்கியம்
பக்திஇலக்கியம்
சிற்றிலக்கியம்
சித்தரிலக்கியம்
நேற்றைய மற்றும் இன்றைய புதுக்கவிதை
இன்றைய மற்றும் நாளைய குறுங்கவிதை
எனவும், இவற்றுக்குள் இலக்கணம், புலம்பெயர் இலக்கியம்
எனவும் விரியும் தமிழ்க்கவிதையின் ஒட்டுமொத்த
வரலாறு கூறும் முயற்சி.
மரபுக்கவிதை–புதுக்கவிதை–குறுங்கவிதை எனும்
முப்பெரும் பிரிவு!
இது மற்ற இலக்கிய வரலாறுகளைப் போல, கவிதைகளை மட்டும்
ஆய்வு செய்வதல்ல, அதன் சமூகப் பின்னணியில் உருவ-உள்ளடக்க மாறுதல்களின் வரலாறு
கூறும் முயற்சி! இன்னும் சரியாகச் சொல்வதெனில், தமிழ்க்கவிதை நடந்து கடந்த பாதையில்
தெரியும் தமிழ்ச்சமூக வரலாற்றின் சுவடுகள்!
அன்றைய ஆதிச் சங்க காலம் முதல்
இன்றைய சாதிச் சங்க காலம் வரையிலான-
தமிழ்க்கவிதையின் பின்னணியில் மனிதகுல
வரலாற்றின் கதை!
--------------------------------------
ஆனால், அதை இந்த வலைப்பக்கத்தில் எழுதப் போவதில்லை.
இதற்கெனத் தொடங்கியிருக்கும் தனி வலைப்பக்கத்தில்
தொடர்கிறேன்.
அன்பு கூர்ந்து வருக!
உங்களின் கருத்துகள், எனக்கு மிகமிக முக்கியம்.
திருத்தல், சேர்த்தல், கழித்தல் எல்லாம்
செய்துகொள்ளலாம்!
ஏனெனில், தனிஒருவன் செய்யக் கூடிய பணியல்ல இது என்பதை
நான் அறிவேன், படிக்கப் படிக்க நீங்களும் அறிவீர்கள்! எனவே, உங்களின் கருத்தை
எந்தவிதமான தயக்கமும் இன்றி எனக்குத் தெரிவியுங்கள். அது சரியாக இருக்குமெனில்
எடுத்துக் கொண்டு, நூலாக்கம் செய்யும் போது அதனைச் சொன்னவர் பெயருடன் வெளியிடுவேன்.
இனி, அந்த வலைப்பக்கத்திற்கு வருக!
அது இந்த நூலக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டது.
வேறெதுபற்றிய பதிவும் அதில் இடம்பெறாது.
தொடர்ந்து வருக என அன்புடன் அழைக்கிறேன் -
----------------------------------------------------------------------------
உங்களின் திட்டமிட்ட அயராத உழைப்பில் நூலும் டிவிடியும் அருமையாக இருக்கும் என்பதில் அணு அளவும் ஐயமில்லை. சிறப்பாக நிறைவேற என் மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா :-)
பதிலளிநீக்குபுதிய தளத்தினைக் கண்டிப்பாகத் தொடர்வேன்
நன்றிம்மா
நீக்குஇதோ வருகிறேன் ஐயா
பதிலளிநீக்குஅன்பிற்கு நன்றிஅய்யா.
நீக்குஇந்த வரலாறு சிறப்பாக அமையும் ஐயா... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவழக்கம்போலத் தொழில்நுட்ப உதவிக்காகத் தங்களை அவ்வப்போது அழைப்பேன். செய்வீங்க தானே?
நீக்குநூல் சிறக்க வாழ்த்துக்கள்! வலைப்பக்கம் வருகிறேன் ஐயா! நன்றி!
பதிலளிநீக்குவந்தமைக்கும், கருத்துத் தந்தமைக்கும் நன்றிகள் அய்யா.
நீக்குகண்டிப்பாக எனது கருத்துரை இருக்கும் அய்யா தம.3
பதிலளிநீக்குஆகா.. அய்யா தங்களின் கருத்துகளை மிகவும் எதிர்பார்க்கிறேன் அவ்வப்போது தோன்றுவதை எழுதிட அன்புடன் வேண்டுகிறேன்.
நீக்குவெற்றியடைய இனிய வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றிம்மா. (என்னாச்சும்மா? ஆல்ஃபி அய்யா கூட்டத்தில் உங்களை நம் நண்பர்கள் விசாரித்தார்களே?)
நீக்குஐயா , உங்களின் கவிதையின் கதை என்கிற ஆழ்கடலில் சிறு துளியாக என் முயற்சியும் இருக்கும்!
பதிலளிநீக்குஉங்களின் பலதுளியில் ஒரு கடல் உருவாகும். (அப்பப்ப காணாமல் போகாமல் தொடர்ந்து வரணும் அய்யா!)
நீக்குமிகப் பெரிய பணிக்கும் புதிய வலைப்பக்கத்திற்கும் என் அன்பு வாழ்த்துகள் அய்யா. எந்த பணிக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று தாங்கள் கருதுகிறீர்களோ அப்பணியில் என்னையும் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் அய்யா. எப்பொழுதும் என் நினைவு தங்களோடு இருக்குமென்று நம்புகிறேன். நன்றிங்க அய்யா.
பதிலளிநீக்குஎன்னது ஆயிரம் பக்கம் ...நூல்
பதிலளிநீக்குமிச்சத்தை டி.வி.டில்?
காத்திருக்கிறோம்.
தம +
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குசில தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக தொடர்ந்து தங்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை. தங்கள் பணி பாராட்டுதலுக்குரியது. தொடரட்டும். வாழ்த்துக்கள் ஐயா.