எழுத்தாளர் எஸ்.ரா., பேராசிரியர் ச.மாடசாமியுடனான நிகழ்ச்சியின் ஒளிப்பதிவுகள்...

இரண்டாம்நாள் -20-6-2015- கருத்தரங்கத்தில்-
நான் நெறியாளராகப் பேசியபின்

பேராசிரியரும் கல்வியாளருமான திரு ச.மாடசாமி
அவர்கள் பேசிய பேச்சுகளைக் கேட்கவும் பார்க்கவும் -

இரண்டாம்நாள் முழுப்பேச்சுகளின் ஒளிப்பதிவு-
---------------------

21-06-2015 மூன்றாம்-நிறைவு-நாளின் 
நிறைவு அமர்வு
அமர்வு நெறியாளராக வந்த ஆனந்தவிகடன் உதவிப் பொறுப்பாசிரியர் கற்க கசடற” தொடர் எழுதிய திரு பாரதிதம்பி முதலில் உரையாற்றினார்.

பின்னர் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் பேச,
நிறைவுப் பேச்சாளராக நான் பேசுகிறேன். பார்க்க
----------------------------------------------------- 
சென்னை அண்ணா நகர் 
SBOA - CBSE பள்ளியில் நடந்த
கல்விசார் கருத்தரங்கின்
மூன்றுநாள் முழுநிகழ்வில் 
எழுத்தாளர்கள் ஞாநி, சல்மா, ச.தமிழ்ச்செல்வன், திருநங்கையும் எழுத்தாளருமான பிரியா பாபு, கல்வியாளர் திரு ச.சீ.ரா. உள்ளிட்ட அனைவர் பேச்சின் முழு ஒளிப்பதிவு-

மூன்றுநாள் கருத்தரங்கில் பேசியவர்கள் மற்றும்
தலைப்புகள் பற்றிய முழுவிவரம் காண-
----பார்த்தும், கேட்டும் கருத்துரைக்க வேண்டுகிறேன்-
---------------------------------------
SBOA பள்ளிகள் இரண்டின் மொத்த மாணவர் எண்ணிக்கை சுமாராக 15,000 ஆசிரியர்கள் மட்டும் சுமாராக 600 எனினும் இந்தக் கருத்தரங்கிற்கு ஆர்வமுள்ள 11ஆம்வகுப்பு மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மட்டுமே அழைக்கப்பட்டு வந்திருந்தனர். மாற்றுக் கல்விக்கான கருத்து சுதந்திரமாகப் பேசப்பட்ட பள்ளிக்கூடம் என்பதே என்போன்ற நண்பர்களுக்குப் பெருமகிழ்வு தந்தது. அந்தப்பக்கம் ஆங்கிலக் கருத்தரங்கு, இன்னொரு பக்கம் கீழ்த்தளம் முழுவதும் புத்தகக் காட்சி மற்றும் விற்பனை அரங்குகள், இயற்கை உணவு ஏற்பாடு என வித்தியாசமான விழா... நல்ல கல்விக்கான தாகம் நிறைந்த கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை இப்படி அழைத்துப் பேசவைத்ததோடு,
பேச்சுகள் அனைத்தையும் அவ்வப்போதே வலையேற்றம் செய்து நிரந்தர ஆவணமாக உலகெங்கும் உள்ளோரைப் பார்க்க ஏற்பாடு செய்த நிர்வாகம் பாராட்டுக்குரியது.  தாளாளர் திரு தாமஸ் ஃபிராங்கோ, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத்தலைவரும், பாரத ஸ்டேட்வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவருமாக இருப்பது இந்த நிகழ்வைச் சாத்தியப் படுத்தியது என்பது முக்கியம். பள்ளி  முதல்வர் வழிகாட்டுதலில்,  விழா ஒருங்கிணைப்பாளரும் மூத்த தமிழாசிரியருமான திரு நலங்கிள்ளி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபாட்டோடு -ஞாயிறு அன்றும் வந்திருந்து- அயராது பணியாற்றியது நம்பிக்கையளிப்பதாக இருந்தது. நல்ல கல்வியின் வழியாக நல்ல சமுதாயம் அமையும் எனும் நம்பிக்கையை இந்தக் கருத்தரங்கம் தந்திருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. இது தமிழகமெங்கும் நிகழவேண்டும்.
அப்படி நிகழ்ந்தால்...
கல்விவழியாக சமூகமாற்றம் 
சாத்தியமே என்பது சத்தியமே!
------------------------------------------------------ 

8 கருத்துகள்:

  1. நெய்வேலி சென்று விட்டதால் அருமையான நிகழ்வில் பங்கு கொள்ள முடியாமல் போய்விட்டது. youtube மூலம் அனைத்தையும் பார்த்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் இதை இப்போதும் பதிவிடுகிறேன்.
      அவசியம் பார்த்து, கேட்டுக் கருத்துச் சொல்லவேண்டும். நன்றி

      நீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி. நேரில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.
    தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. விழா ஏற்பாடு வெகு ஜோர்... கொடுத்துள்ள ஒரு படமே எந்தளவு நிகழ்வை சிறப்பித்துள்ளார்கள் என்பது புரிகிறது...

    இணைப்புகளுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா! இப்போதுதான் காண முடிந்தது. இணையப் பிரச்சனையாதலால்...

    நேரில் கலந்து கொள்ள முடியவில்லை ஆனால் நேரில் கலந்துக் கொண்ட உணர்வு...

    வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. அருமையான தொகுப்பு... அனைத்தையும் பார்க்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு