இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி - ரூ.50,000 பரிசுத் தொகை


இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி 
 பெருமதிப்பிற்குரியீர்  வணக்கம் .
  
  தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய - மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .

0 அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு  பகுதியாக இவ்வாண்டு  எழுத்தாளர்கள் மற்றும்   ஆய்வாளர்களுக்கான இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டியினை கீழ்கண்ட 25 தலைப்புகளில் அறிவிப்பதில்  மகிழ்ச்சியடைகிறது .

0  ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு  செய்யப்படும் 

0  தேர்வுபெறும்  ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும் 


0 தேர்வு பெறும்  கட்டுரைகளை  புதுக்கோட்டையில் எதிர்வரும்அக்டோபர் (2014 ) மாதத்தில் நடைபெறும் மூன்று நாள் சிறப்புக் கருத்தரங்கில் சமூகவியல் ஆய்வில் புகழ்பெற்ற படைப்பாளுமைகளின்  தலைமையிலும் விமர்சனத்திலும் வாசித்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும் 

0 தேர்வு பெறும் கட்டுரைகள் அனைத்தும் புகழ்பெற்ற புத்தக நிறுவனத்தால் தனி நூலாக வெளியிடப்படும் 

0ஆய்வுக்கட்டுரைகளை A 4 தாளில் 10 முதல் 15 பக்க அளவினை கொண்ட தட்டச்சுப்  பிரதிகளாய் (குறுந்தகடுகளுடன் ) அனுப்பிட வேண்டும் .

0 ஆய்வுக்கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள /எடுத்தாளப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளுக்குமான ஆதார நூல்களின் விவரங்கள் தனித்தாளில் குறிப்பிடப்பட்டு இணைக்கப்படவேண்டும் 

0 கட்டுரையாளரின் பெயர் ,முகவரி ,மின்அஞ்சல் முகவரி ,அலைபேசி எண்கள் போன்ற விபரங்களுடன் கட்டுரை தம் சொந்த படைப்பே என்பதற்கான உறுதி மொழியையும் தனியே இணைக்கவேண்டும் .

0 ஆய்வுக் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.07.2014

0 கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி செயலர் , அபெகா பண்பாட்டு இயக்கம், 832, கீழ ராஜ வீதி புதுக்கோட்டை -622 001 மின் அஞ்சல் முகவரிகள் drnjayaraman@gmail.com   rasipanneerselvan@gmail.com
jryazhini2012@gmail.com   தொடர்புக்கு 9486752525 ( ராசி .பன்னீர்செல்வன் )
--------------------------------------------------------------------------------------
 ஆய்வுக் கட்டுரைகளுக்கான பொருள் 
--------------------------------------------------------------------------------------
1. ஆரிய வருகைக்கு முன்பான ஆதி இந்திய சமூகம் 
2. வர்ணம், சாதி --தோற்றமும் இருப்பும் 
3. வர்ண சாதியப் படிநிலைகளின் எதிர்ப்பு வரலாறு 
4. சாதியத்தின் மீதான சமண பௌத்த குறுக்கீடுகள் 
5. இந்து மதத்தின் தோற்றமும் நிலைநிறுத்தப்பட்ட விதமும் 
6. மனு ஸ்மிருதி தொகுக்கப்படுவதற்கான சூழலும் தேவையும் 
7. பௌத்தமும் சமணமும் அழிக்கபட்ட விதம் 
8. இந்திய சாதியில் இஸ்லாத்தின் இடையீடுகள் 
9. கிறிஸ்தவமும் சாதியும் 
10 மத மாற்றம் போல் சாதி மாற்றம் சாத்தியப்படாதது ஏன் ?
11 இந்து மதம்  ஏன் ஒரு பிரச்சார மதமாக இல்லை ?(கிறிஸ்துவ முஸ்லிம் மதங்களை போல் )
12 பிரிட்டீஷ் ஆட்சியில் சாதியம் --உடன்பாடுகளும்   முரண்பாடுகளும் 
13.பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமணர்களும் 
14 பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமணரல்லாதோரும் 
15 பிரிட்டீஷ் ஆட்சியும் தலித்துகளும் 
16அம்பேத்கருக்கு முந்தைய சமூக சீர் திருத்த  இயக்கங்கள் 
17 அம்பேத்கர் சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை 
அம்பலப்படுத்தியதால் ஆதாயம் அடைந்தவர்கள் 
18. அம்பேத்கரின் இந்து மத கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்கள்  ( பௌத்தம் தழுவியது வரை )
19 அம்பேத்கர் சமூக நீதி என்பதை நாடளாவிய விவாதப்பொருளாக்கியதால் விளைந்த பயன்கள் 
20.அம்பேத்கர் அதிகார அமைப்புகளுக்குள் பங்கெடுத்து ஆற்றிய 
பணிகளால் விளைந்த பலன்கள் 
21 சாதியும் பெண்களும்/பெண்களின் ஊடாக சாதியம் 
22 இன்றைய சாதியும் தொழில்களும் 
23 சுதந்திர இந்தியாவை சாதி கைப்பற்றிய விதம் 
24 உலகமயமாக்கல் காலகட்டத்தில் சாதியம் 
25 இந்திய சமுக அமைப்பும் இட ஒதுக்கீடுகளும் 
----------------------------------------
அ பெ கா பண்பாட்டு இயக்கம்
832, கீழ ராஜ வீதி புதுக்கோட்டை -622 001
தொடர்புக்கு   9486752525 - ராசி .பன்னீர்செல்வன்
----------------------------------------  

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    போட்டிக்கான தலைப்புக்கள் ஒவ்வொன்றும் நன்றாக உள்ளது.. கட்டுரைப்போட்டி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ஐயா... முயற்சி ஒன்று கொடுத்துப்பார்க்கிறேன்....நான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தலைப்புகள் சிறப்பு மிக்கவை ஐயா
    போட்டி வெற்றி பெற வாழ்த்துகிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. தலைப்புகளை உருவாக்கியவர் நம் நண்பர் திரு ராசி.பன்னீர்செல்வம், அருமையான விமர்சகர். இவர் கவிஞர்பாலாவுக்கு எழுதிய விமர்சனத்தை அவர் அந்தநூலின் இரண்டாம் பதிப்பில் பின்னுரையாகச் சேர்த்தார் என்றால் பாருங்களேன். ஆற்றல் மிகுந்தவர்கள் புதுக்கோட்டையில் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒருவரே போதும். இவரது வலைப்பக்கம் - http://rasipanneerselvan.blogspot.com/ (நமது வலைப்பக்க இணைப்பிலும் உள்ளது பாருங்களேன்?) நன்றி

      நீக்கு
  3. சிறப்பான கட்டுரை தலைப்புக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா, எழுதவும் சிந்திக்கவும் தூண்டும் தலைப்புகள்!

      நீக்கு
  4. கட்டுரை போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. நீங்களெலலாம் கலந்துகொண்டு சிறப்பித்தால் தானே வெற்றிபெறும்! அவசியம் எழுதுங்கள் முன்கூட்டியே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  5. வணக்கம் ஐயா
    போட்டிக்கான அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. புதுக்கோட்டையில் இப்படியொரு போட்டி என்பது கூடுதல் மகிழ்ச்சி ஐயா. போட்டியை நடத்தும் அ பெ க பண்பாட்டு இயக்கத்திற்கு வாழ்த்துகளும் நன்றிகளும். நமது ஒத்துழைப்பையும் இராசி.பன்னீர்செல்வம் ஐயா அவர்களுக்கு வழங்குவோம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நண்பர் மருத்துவர் ஜெயராமன் நீண்ட நாள்களாக அ.பெ.கா. பண்பாட்டு அமைப்பை செயல்தூண்டுதலோடு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியே இந்தப் போட்டி, கருத்தரங்கு, நூல்தொகுப்பு. உங்களைப் போலும் இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனக்கும் எதிர்பார்ப்பு.

      நீக்கு

  6. இருபத்தைந்து தலைப்பும்
    சிறப்பான தலைப்புகள்
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தளத்தில் இணையப் பயிற்சிப் படடறைச் செய்தியைப் பகிர்ந்துள்ள அன்பிற்கு என் தலைதாழ்ந்த வணக்கமும் நன்றியும்.

      நீக்கு