குழந்தையைக் கொன்ற கொடுங்கோலன் வெங்கடாசலபதியிடம் என்ன வேண்டியிருப்பான்?


நாக்கு நீண்ட நரி
பல்லில் விஷம் தடவிய பாம்பு
கண்ணில் கொடுமை காட்டும் கழுகு
உடம்பெல்லாம் கொழுப்பெடுத்து ஆடும் ஓநாய்
சொட்டு ரத்தத்தையும் விடாமல் 
நக்கித் திரியும் சொறிநாய்

 இதெல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததுதான்
ராஜபக்ஷ எனும் நரமிருகமோ
(சிங்கம் புலி என்று சொல்லி 
அவற்றின் வீரத்தை நான் இழிவு செய்ய விரும்பவில்லை
அதற்கும் இங்கே சிவப்புக் கம்பளம் விரிக்க அலையும்
சில அ-மனிதர்களை என்ன சொ்ல்ல?)

என்ன கொடுமையடா பாவி!
அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்...
ஏது பற்றியும் அறியாமல்,
பால்வடியும் முகம் கூட மாறாமல்
எதையோ தின்று கொண்டிருக்கும் 
அந்த அப்பாவித்தனத்தைப் பார்
அந்தக் குழந்தை என்ன செய்ததடா பாவீ!

அதைக் கொன்று ரத்தம் குடித்து
நீ எதைச் சாதித்து முடிததாய்?
உன் ரத்தப் பசி 
லட்சக்கணக்கில் எங்கள் மக்களைக்
கொன்று முடித்தும் 
ஆறவில்லையென்று
குழந்தையையும் தின்று முடித்தாயா?

உனக்குக் கோபமென்றால் 
ஒரு குழந்தை கூட உயிருடன் இருக்கலாகாதா?
அது -
ஒருவேளை பிரகலாதனாக வந்திருக்குமோ 
என்று அச்சமா?
அப்படியானால் நீ கொடுமைக்கார அரசன்தான் 
என்றுனக்கு புரிந்து விட்டதோ

பிரபாகரனுடன் 
கருத்து வேறுபாடுள்ளவர்களும்
ஏற்க மறுக்கும் இந்தக் கொடுமையை 
ஏனடா செய்தாய்?

எங்கள் ஊரில் பிரியாணி தின்றால்
சோடா குடிப்பார்கள் பீடா போடுவாரகள்

உங்கள் ஊரில் மட்டும்
குழந்தையைக் தின்றுவிட்டுக்
கோவிலுக்கு வருவீர்களோ?

வெங்கடாசலபதி என்ன
விவரம்கெட்ட சாமியா?-உன்
விருப்பமறிந்து
வேண்டிய வரம் கொடுக்க?

விடுதலை கேட்ட நெல்சன் மண்டேலாவும்
சிறையில் அடைத்த கிளார்க் எனும் அரக்கனும்
ஒரே கர்த்தரைத்தான் கும்பிட்டார்கள்
கர்த்தர் குழம்பிப் போனார்

ஈராக் பாயும் அவரை அழிக்கத் துடித்த
ஈரான் பாயும் ஒரே அல்லாவைத்தான் தொழுதார்கள்
அல்லா குல்லாவை எடுத்துவிட்டு
தலையைச் சொரிந்துகொண்டார்.

வைணவரை அழிக்க சைவரும்
சைவரை அழிக்க வைணவரும்
திட்டமிட்ட போதெல்லாம்
இந்துச் சாமிகள் எல்லாருமே
நொந்துதானே போயிருப்பார்கள்?

எண்ணாயிரம் சமணரைக்
கழுவில் ஏற்றிய காலத்தில்,
கண்ணாயிரம் கொண்ட தாய்
-சம்பந்தருக்குப் பால்நினைந்தூட்டிய பார்வதி-
பார்த்துக்கொண்டுதானே இருந்தாள்?

லட்சம் லட்சமாய்
கொன்று முடித்த கொடுங்கோலன்
பிள்ளை ரத்தத்தையும்
அள்ளிக் குடித்த பெரும்பாவி

இந்தியா வந்து-
வெங்கடாசலபதியிடம்
என்ன வேண்டியிருப்பான்?

அவன் என்ன இழவாவது
வேண்டியிருக்கட்டும்

அதே வேங்கடத்தானை
வேண்டிக் கிடக்கும் எம் மக்கள்
இன்றில்லாவிட்டால் நாளை...
நாளையில்லாவிட்டாலும்
இன்னொருநாள் பொங்கி எழுவார்கள்-

எங்கள் பிள்ளைகளைக் கொன்று தின்ற
வாயை ஒருநாள் கிழித்தெறிவாரகள்
எங்கள் பெண்டுகளின் யோனியைக் குதறிய
குறிகளை ஒருநாள் குலையறுப்பார்கள்
எங்கள் நிலத்தைப் பிடுங்கிய
கைகளையெல்லாம் 
மொத்தமாய் முறித்துப் போடுவார்கள்
உரிமையைப் பறித்த கொடுமைக்கு ஒருநாள்
ஒன்றுக்குப் பத்தாய் பதிலடி கொடுப்பார்கள்

உன் வம்சம் மட்டுமல்ல
உன்னைப் போல எண்ணங்கொண்ட
அத்தனை பேரின் ஆணவத்திற்கும் ஒருநாள்
புத்தரின் பேரிலேயே புதைகுழி தோண்டுவார்கள்!

நீ வேண்டிக்கொண்ட
வெங்கடாசலபதி
அதையும் பார்த்து ரசிப்பார்...
பாரடா பார்!
பாவி கொடுங்கோலா!

சிறுவனைக் கொன்ற
சிறுபொறி ஒருநாள்
பெருநெருப்பாகும்
அதில் நீ
பற்றி எரிவாய்... 
எரிந்தே அலறி அலறி அழிந்து போவாய் 
பார்!
அதில் உனக்கு
இறுதிச் சடங்கு நடத்த
உன் எலும்பும் கூட மிஞ்சாது,
ஒரு பிடிச் சாம்பலும் கூடக் கிடைக்காது! போ! 

7 கருத்துகள்:

 1. இவன் எல்லாம் உடனே சாகக்கூடாது... நரக வேதனைப் பட்டு தினம் தினம் சாவுக்கு ஏங்கணும்...

  பதிலளிநீக்கு
 2. குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல தனபால்,
  குற்றத்திற்குத் துணை போகிறவர்களுக்கும் அந்தத் தண்டனை கிடைக்கும் - சட்டப்படி மட்டுமல்ல,
  மனித சமூக நீதிப்படியும்

  பதிலளிநீக்கு
 3. இவனைவிட மோசமானவன், சுப்பிரமணியம் சுவாமி என்ற பிணந்தின்னி.

  பதிலளிநீக்கு
 4. அவர்கள் துப்பாக்கியை மௌனித்தால் என்ன நடக்கும் என்று தெரிகிறது

  அடுத்து வரப்போகும் சானெல் நான்கு வீடியோ அவரின் கடைசி நிமிடங்கள் என்று சொல்கிறார்கள்

  தமிழருவி சொல்லுவர் தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு அது நீசகுணம் என்பார்

  நீசர்களோடு வாழும் நீசனாக ... நான்

  பதிலளிநீக்கு
 5. இந்தப்படத்திற்கு முகநூலில் லைக் தட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடும் இன்றைய தலைமுறை

  நல்ல தலைமையை தமிழினம் பெறவில்லை எங்குமே என்பதுதான் வேதனை

  பதிலளிநீக்கு
 6. murugesh mu
  பிப். 23 (2 நாட்களுக்கு முன்பு)

  குழந்தையின் முகம் பார்த்து
  நெஞ்சு பதறியது.

  ஏதுமறியா குழந்தையைக் கொன்ற
  மகா பாதகன் ராஜபக்சே மீதான
  என் கோபத்தை தங்கள் கவிதை
  மேலும் போங்க வைத்தது ...தோழரே.

  அந்தக் கவிதை
  உங்களின் கண்ணீ ரல்ல..
  கனல் பற்றிய கோபத்தின் பொறி.
  இன்னும் அனல் பரவும்.பரவட்டும்
  -மு.மு

  பதிலளிநீக்கு
 7. Anonymous
  12:24 AM (22 மணி நேரத்திற்கு முன்பு)

  Anonymous has left a new comment on your post "குழந்தையைக் கொன்ற கொடுங்கோலன் வெங்கடாசலபதியிடம் என...":

  இவனைவிட மோசமானவன், சுப்பிரமணியம் சுவாமி என்ற பிணந்தின்னி.
  --------------------
  Anonymous கருத்துகளை வலைப்பக்கத்தில் நான் ஏற்பதில்லை. முகநூலிலும் அப்படியே... நட்பு வேண்டி வரும் மின்னஞ்சல்களுக்குப் பெயரும், உரிய புகைப்படமும் இருந்தால் மட்டுமே ஏற்பேன்
  இதனை வலைவாசகர்களுக்குத்
  தெரிவிப்பதற்காக மட்டுமே இதனை வெளியிடுகிறேன்.

  பதிலளிநீக்கு