‘‘ஞானாலயா’’
புதுக்கோட்டையில் ஒரு
புத்தகக் கோட்டை
புத்தகக் கோட்டை
புத்தகக் காதலர் |
மிழ்நாட்டின் மிகப்பெரிய தனியார்
நூலகங்களில் இரண்டாவது இடம்பெறும் ஒரு மாபெரும் அறிவுலக அமுதசுரபி எங்கள் ஊரில்
இருப்பது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது. ஆனால்,
உலகம்
முழுவதுமிருந்து புதுக்கோட்டையை நாடிவரும் எந்த்த் தமிழரும் அறிந்து வைத்துக்கொண்டு, “ஞானாலயா” போக வேண்டும்” என்று தமது பயணத்திட்டத்திலேயே
குறித்து வைத்திருந்து,
போய் வரும் இடமாக
இப்போதும் இருப்பது எங்கள் ஊரின்- புதுக்கோட்டையின்- பெருமை.
தமிழ்நாடு அரசின் கல்வித்துறை கணித ஆசிரியராகத் தொடங்கி, முதுகலைத்
தமிழாசிரியராகி, மேல்நிலைப் பள்ளித் தலைமை
ஆசிரியராகி ஓய்வுபெற்ற திரு பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
திரு பா.கி.அவர்களுடன் அறிவியல்
ஆசிரியராகப் பணியாற்றிய போதே சாதி-மதங்களைக் கடந்து வாழ்க்கையிலும் இணைந்த திருமதி
டோரதி அவர்கள் பின்னர் கல்லூரித் தாவரவியல் பேராசிரியராகவும், அரசுக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்
1959இல் தொடங்கிய புத்தக சேகரிப்பை
ஞானாலயாவாக மிகப்பெரிய ஆய்வுநூலகமாக வளர்த்து, இருவரும் ஓய்வுபெற்றபோது வந்த பணம்
ரூ.11லட்சத்தையும் இந்த ஞானாலயா வளர்ச்சிக்கே செலவிட்டு (மிகப்பெரிய தனிவீடு)
இன்றும் பயன்அறிந்தோர்க்குப் பழுமரமாக இருக்கும் ஞானாலயா பற்றிய -16நிமிடம்
ஓடக்கூடிய- செய்தித் தொகுப்பை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
பாரதியாரின் முதல் கவிதையான “தனிமை இரக்கம்” வெளிவந்த ஞானபாநு உள்ளிட்ட ஏராளமான
-முதல்பதிப்பு- மூலநூல்கள்... பாரதியார
பற்றி மட்டும் சுமார 1500 நூல்கள், திருக்குறள் பற்றி மட்டும் பலமொழிபெயர்ப்பு உள்பட
அத்தனை உரைகளுமாய 1500
நூல்கள் என…
1,75,000 தமிழ்நூல்கள்...!
மற்றும் பல்லாயிரம் அரிய ஆங்கில நூல்கள்…!
1920முதல் தமிழில் வந்த சிற்றிதழ்களின்
தொகுப்புகள்... என லட்சக் கணக்கான பத்திரிகை நூல் பிரதிகள் அவ்வளவும் வகைப்பட அடுக்கி வைக்கப்பட்டு
ஆய்வாளர் கேட்ட உடனே எடுத்துக் கொடுக்க்கூடிய வகையில் தனிவீடு! நகலச்சு வசதியுடன்.
ஞானாலயா பற்றி இன்னும் பலபத்திரிகைத் தகவல்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று –
அவற்றில் ஒன்று –
THE HINDU
– METRO PLUS – WEEK END (Dated - October
09,2010) பார்க்கலாம்.
-------------------------
தொடர்பிற்கு
“ஞானாலயா“ திரு.பா.கிருஷ்ணமூர்த்தி
வலைப்பக்கம் -
http://www.gnanalaya-tamil.com/
அலைபேசி – 9965633140
தொலைபேசி எண் –04322 221059
ayya vanakkam> keerai thamizhan. eppadi ullirkal. thangalin katturaikal sirappaka ullathu. kalaiyai kalaiyaga paarkka marukkum intha arasiyalukku intha katturai nalla savukkatiyaakum.vaazhlthukal. nandri.
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்கு