விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!


விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!
தினமும் காலையில் பத்திரிகை படிக்கத்தான் செய்கிறோம்.
13-02-3013 இன்றைய செய்தி ஒன்று ரொம்பவே பாதித்துவிட்டது...

அமிலவீச்சில் காயமடைந்த விநோதினி சாவு – தினமணி 

ஆண் உலகில் பெண் ஒரு “துய்க்கப்படு பொருளாகவே பார்க்கப்படுவதன் விளைவாக எத்தனை எத்தனைப் பெண்கள் யுகம் யுகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்! அவளுக்கும் உயிர் உண்டு, அவளுக்கும் உணர்வு உண்டு அவளும் நம்மைப்போல் ஒரு மனிதஇனம்தான் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாத ஆண்களால் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண் இனம் இப்படி அமில வீச்சாலும், பாலியல் வன்கொடுமையாலும் அழியப் போகிறதோ தெரியவில்லையே!
காரைக்காலைச் சேர்ந்த அந்தப் பெண் பொறியியல் படித்துவிட்டு, குடும்ப வருமானத்திற்காகவே வேலைக்கும் போய்கொண்டு, காதலை நினைக்காமல் இருந்தபெண்ணை சுரேஷ் என்னும் நாய் தன்னைக் காதலிக்க வற்புறுத்த, அடித்துப் பழுக்க வைக்க அதுவொன்றும் இரும்பல்லடா இதயம் காதல் என்பது தானாகப் புக்கும் காட்டுப் பு என்பதை அந்த நாய்க்கு எப்படி விளக்க முடியும்? நக்குற நாய்க்கு செக்குத் தெரியுமா, சிவலிங்கம் தெரியுமா?
அந்த சுரேஷ் – நம்சமூகத்தால்தானே உருவாக்கப் பட்டிருக்கிறான்!
பெண்ணுரிமையை சொல்லித்தராத கல்வி முறை...
பெண்ணின் உணர்வுகளை மதிக்கக் கற்றுத்தராத குடும்ப அமைப்பு...
பெண்ணை “ஆண் அனுபவிப்பதற்கான ஒரு பண்டம்என்றே சொல்லிச்
சொல்லிப் பாடி ஆடும் நமது திரைப்படங்கள்...
  பெண் என்பவள் ஆணின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டும், அதோடு  
   அவனுக்காகவே , அழுகொண்டும் வாழவேண்டியவள்    
    என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லி அழும் தொ.கா.தொடர்கள்... 
  “பானமடி நீ எனக்கு-பாண்டமடி நான்உனக்கு“ எனபபாடிய பாரதி உட்பட  “ஆர்லிக்ஸா மாறிவிட நாரெடி என்ன அப்படியே சாப்பிட நீ ரெடியா?” என்று பெண்ணே கேட்பதாக எழுதும் திரைப்படக் கவிக்கிறுக்கன்கள்
  எல்லாவற்றுக்கும் மேலாக இதையெல்லாம் “அரசியல்ல இதெல்லாம்
சகஜமப்பா“ என்பது போல எடுத்துக்கொள்ளும் ஆணாதிக்க அரசியல்
என எத்தனை எத்தனை புறக்காரணிகள்...
எல்லாம் எழுதி என்ன ...
 என்னென்ன கனவுகளோடு வாழ்க்கைக் கணக்குகளைப் போட்டு வைத்திருந்தாளோ... எல்லாம் ஒரு அமிலவீச்சில் நாசமாகி விட்டதே!

டெல்லிப் பெண் சாவும் கொடுமையானதுதான் ஆனால், அதற்குச் சற்றும் குறையாத கொடுமையை 3 மாதமாக அனுபவித்தும் இறந்து போன விநோதினியின் அநியாய மரணம் தந்த புண் ஆறவே ஆறாது...
அதற்குத்தந்த முக்கியத்துவத்தை நமது ஊடகங்கள் இதற்கும் தந்திருந்தால் ஒரு வேளை நிதி சேர்ந்து விநோதினியைக் காப்பாற்றியிருக்கலாமோ என ஒருபக்கம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க முடியவில்லையே!


முவ அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு “நெஞ்சில் ஒரு முள்”  அந்தத் தலைப்புத்தான் இந்த நேரத்தில் நெஞ்சில் குத்துகிறது...  



2 கருத்துகள்:

  1. நெகிழ வைக்கும் பதிவு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. கல்வியும் சமூகமும் ஊடகங்களும் பெண்ணுரிமைச் சிந்தனைகளை ஊட்டவில்லை. ஏன் சட்டம் கூட இந்த நேரத்தில் புதுப்பிக்க காலம் கடத்துகின்றன. இதில் இடையே அரசியல் வேறு. சமூகத்தில் இன்னமும் பால் பாகுபாடு அதிகமாவே உள்ளது. பெண் என்பவள் ஆணுக்கு கட்டுப்பட்டவள். அவளுக்கு எப்போதுமே வேலை நாள் தான். என்று விடியும் பெண்களின் உரிமை வானம். அய்யா தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். பெண்மையை அவை எவ்வளவு கேவலப் படுத்துகின்றன? பெண்கள் வில்லிகளாகவும் அடுத்தவர் குடிகெடுக்கும் சூதகிகலாகவும் சித்தரிக்கின்றன. இவற்றிற்கு முதலில் வைப்போம் கொள்ளி. பெண் என்பவள் வையம் தழைக்க வந்தவள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு சமூகம் அஞ்சத்தக்க தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். விவேக் அவர்களின் நகைச்சுவைக் காட்சியை நிஜப் படுத்த நேரம் வந்து விட்டது. ம் புறப்படுங்கள்.

    பதிலளிநீக்கு