மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்
-நா.முத்துநிலவன்-
--------------------------------------------
செங்கீரைப்பருவம் – பாடல் -1
மரைகள் தம்ஒளியில்
மயில்கள் ஆட,முகில்
முழவின் ஏங்க, விழியா
மலரும் குவளையிதழ் மயங்கி நோக்க,முரல்
மதுக ரங்க ளிசையா
திரைகள் மாற்றியலை புரளும்
கோமருதன்
திகழும் எழிலை அருகே
திரைக்கை வீசிஅரு கழைக்க ஏங்குமனத்
தெளிவி லாக்கடல் மகள்
கரைகள் வேலியெனக் காத்து
மறிக்க,மிகுங்
காதல் துயரமுழவாக்
கரைகலா மனமும் கரையவான் குரலில்
கதறி ஓலமிட நீர்
சொரியும் நாகைநகர் உரிய
அடிகள் செங்
கீரை யாடியருளே!
சூழ்கலப் பொலியை வீழ்த்தும் அடிகள்!செங்
கீரை யாடியருளே!
------(எழுதிய ஆண்டு 1976. பிற குறிப்புகளுக்கு “மறைமலையடிகள்
பிள்ளைத் தமிழ்”முன்னுரை பார்க்க.
ஒரு முக்கியக் குறிப்பு- இன்றைய முத்துநிலவனை இதில் தேடாதீர்கள்! இது நமது “பழைய பனையோலைகள்”) ----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக