2023 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி! இந்தச் செய்தி, கிரிக்கெட் ரசிக மகா உலகத்தையும் தாண்டி பெருவாரியான பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் பேச வைத்திருக்கிறது.
இறுதிப்போட்டிக்கு பிரதமர் வருகிறார் என்றும் நரேந்திர மோடி திடலில் நரேந்திர மோடி அணி வெற்றி என்ற செய்தியை 2024 தேர்தலுக்குப் பயன்படுத்தப் பார்த்த அணி தோல்வியால் துவண்டு விட்டது உண்மைதான்! -
ஆனால் வருமானத்தில்...?
பெரீய்யய வெற்றி மக்கா!
இதில் எத்தனையோ திகிடு தத்தங்கள் –
0 திட்டமிட்டு இறுதிப் போட்டியை குஜராத் நமோ திடலில் வைத்தது ஒன்றும் எதேச்சையாகத் தெரியவில்லை
0 திட்டமிட்டு அஸ்வின்-“ஆல்-ரவுண்டரை”- கடைசிவரை களம் இறக்காமல் வைத்த ரோகித்தின் “ஈகோ“
0 சுழற்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், ஆல்ரவுண்ட் வீரர் அர்திக் பாண்டியாவின் இயலாத நிலையிலும் முதல் மூன்று ஆட்டங்களில் ஷமியை இறக்கிவிடாமல் பார்த்துக் கொண்ட ஈகோ ரோகித்தின் ஈகோ..
0 இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை 1983இல் வென்று தந்த கபில்தேவ், மல்யுத்த வீரர்களின் நியாயமான போராட்டத்தை வாழ்த்தி வரவேற்ற ஒரே காரணத்துக்காக அழைக்கப்படாத அரசியல்!
பாஜகவில் சேரச் சொல்லி வந்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தினாலேயே, 2011இல் தன் இறுதி சிக்ஸரால் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுதந்த மகேந்திரசிங் டோனி இந்தப் போட்டிக்கு அழைக்கப்படாத அரசியல்..
0 சச்சினுடன் “நவராத்திரி ஆட்ட நாயகர்” சாமியாரை மற்றும் கிரிக்கெட்டுக்குத் தொடர்பே இல்லாமல் –அண்ணாமலை உள்ளிட்ட திரையிலும் வெளியிலும் நடிக்கும் நடிகர்களை அழைத்திருந்த அரசியல்..
0 இறுதிப்போட்டிக்கு 1,30,000 பேர் உட்காரக் கூடிய நமோ திடல் நிரம்பியதும், குறைந்த பட்ச கட்டணம் ரூ35,000 என்று அறிந்ததும் மில்லின் கணக்கிலான வருமானம் பற்றிய பிரமிப்புடன் கூடிய ஏமாற்று அரசியல் என்று எத்தனையோ விவாதப் பொருள் இருந்தும்,
0 பத்து ஆட்டங்களில் தோற்காத இந்தியா, இறுதிப் போட்டியில்
ஆஸ்திரேலியா அமைத்திருந்த (1) ஃபீல்டிங், (2) பேட்டிங், (3)
பௌலிங் என்ற மும்முனை வியூகத்தை எதிர்கொள்ளத் திட்டமிடாத
இந்திய அணி ஃபீல்டிங் இயலாமை ஆல்ரவுண்டர் இல்லாமை
காரணமாகவே தோல்வியைத் தழுவியது.
0 சச்சினின் சாதனைகளை முறியடித்த கோலியின் திறன்,
நான்காம் ஆட்டம் முதல் தெறிக்க விட்ட ஷமியின் திறன்,
எனப் பல தனிநபர் சாதனைகள் அணியின் தோல்வியால்
அடிபட்டுப் போயின.. வாழ்த்தும் அனுதாபமும்..
------------------------------------------------------------------------
வருமானத்தில் கவனம் செலுத்தும் அளவிற்கு வெற்றிக்கு உரிய திட்டமிடாத, வீரர்களின் திறனைக் கண்டறிந்து பயன்படுத்தாத அரசியல் அமித்ஷா மகனின் தலைமை என ஆயிரம் ஓட்டைகள் எல்லாம் தோல்வியின் பின்னணி இதை அறியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ரசிகர்!
இதுபற்றியெல்லாம் நிறையப் பேசலாம்.. ஆனாலும் இந்த “நல்லதோல்வி”பல கண்களைத் திறக்க உதவும் என்பதால் இந்தத் தோல்வியை நான் மனமார வரவேற்கிறேன்!
இதே போன்றதொரு தோல்வியை
ஆஸ்திரேலிய அணியிடம்
அரையிறுதியிலேயே கண்ட
இந்திய அணி பற்றி
2015 இல் நான் எழுதிய கட்டுரை கீழுள்ளது.
---------------------------------------------------------------------
அன்றைய படம் மாறியிருக்கிறது,
ஆனால்
அப்போது கற்க மறந்த
பாடம் இப்போதும் மாறவில்லை!
பழசென்று நினைக்காமல்
படித்துப் பாருங்கள் தெரியும்
------------------------------------------------------
https://valarumkavithai.blogspot.com/2015/03/blog-post_5.html
-------------------------------------
இந்தத் தோல்வி பற்றி
கவிஞர் செ தமிழ்ராஜ் எழுதி
தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டிருக்கும்
அற்புதமான கவிதையை
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மகிழ்கிறேன்.
---------------------------------------
உலகக் கோப்பை!
ஜெய் ஸ்ரீ ராம் கோசமிட்ட
வானரங்கள்
பரிசாக கிடைத்த தோல்வியை
எந்த
முழக்கமிட்டு
வரவேற்பார்கள்.
மைதானங்களை கைப்பற்றி
பெயர் சூட்டிக்கொண்டவர்கள்
வெற்றியை
விலைக்கு
வாங்கமுடியாமல்
தோற்றுப்போனார்கள்.
அரசியல் சூதாட்டக்காரர்களால்
மட்டைப்பந்தாட்ட வீரர்கள்
பலியானார்கள்.
வான்
சாகசங்களில்
பூத்தூவி
மகிழ்ந்த
காவி
முகங்களில்
தோல்வி
காரி
உமிழ்ந்திருக்கிறது.
எல்லாவற்றிலும்
மதங்
கலந்தார்கள்
விளையாட்டும்
ஒரு
வினைப்பயனாய்மாறி
பாடம்
நடத்தியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து
வெளியேறி
பாரதமென்று
படையெடுத்தார்கள்
மணிமுடி
யெங்கும்
மண் பூசி
நின்றார்கள்.
தோற்றாலும்
வீரன்
வெற்றிக்கு
கைகொடுப்பான்
கோப்பையை
கொடுத்த கோழை
"கோ"வென்று
அழுது
ஓடுகிறான்.
வெற்றியும்
தோல்வியும்
வீரர்களுக்கு
மட்டுமே அழகு
அழுகுணி
அரசியல்
ஊளைகளுக்கல்ல.
எமது
இந்திய வீரர்கள்
மீண்டும்
ஜெயிப்பார்கள்
அப்போது
விளையாட்டரங்கம்
இந்திய
மக்கள் வசம் இருக்கும்
அன்றெழுப்பும்
ஒற்றை
முழக்கத்தில்
எந்த மதமும் கலந்திருக்காது.
--செ.
தமிழ்ராஜ்
வண்டியூர் மதுரை
--------நன்றி- தீக்கதிர்-21-11-2023--------
------------------------------------------------
கிரிக்கெட் பற்றியெல்லாம் எழுதி
நேரத்தை வீணடிக்க வேண்டுமா?
எனில்,
இந்திய சமூகத்தைப் பாதிக்கும்
எதைப் பற்றியும் கவனிக்க வேண்டும்,
நாம் சரியாக கவனிக்க - கணிக்க- வில்லை எனில்,
தவறான கணிப்புகளே உண்மைபோல் பரவும்.
எனவே...
நன்றி.
-----------------------------------------
படங்களுக்கு நன்றி - வழக்கம் போல- கூகுளார்
-----------------------------------
சரியான காரணங்கள்...
பதிலளிநீக்குகவிதை வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடி...
ஒவ்வொரு வார்த்தையும் சிக்சர்...
பதிலளிநீக்குவிளையாட்டில் இப்போதா அரசியல் வந்தது?
இவ்வளவும் தெரியாமலா கோடிக்கணக்கானோர் இதனை பார்த்தோம்....களத்துக்கு முன்னாலேயே எப்போதுமிருக்கும் நீங்கள் களத்துக்குப் பின்னுள்ளதையும் எழுதியது சிறப்பு...கவிதை எப்போத்ய்ம் எனக்கு உவப்பு..
விளையாட்டை விளையாட்டாக த்தான் பார்க்க வேண்டும். அரசியலுக்கு பயன்படுத்த முனைந்த தன் விளைவு மக்களின் உளைச்சல் கள்.
பதிலளிநீக்குஎப்போ தேஷ் பக்தர்கள் உள் நுழைந்தார்களோ அப்போவே இதுவும் முடிந்தது...அதத் தாண்டி இந்த அணி இவ்வளவு போட்டியிட்டதே பெரிது...அதிலும் கடசியாட்டத்தில் இப்படி மண்ணைக் கவ்வும் என்று தெரியாமல் எத்தனை பேரு காசு செலவு பண்ணி .
பதிலளிநீக்குஇந்திய அணியின் சீருடை காவி வண்ணத்தில் மாறாமல் தப்பித்தது
பதிலளிநீக்குஅருமை ஐயா! அரசியலில் மதத்தைக் கலந்தவர்கள் விளையாட்டில் எப்படி அரசியலைக் கலந்தார்கள் என்பதைப் பொட்டுக்குறிப் பட்டியலிலேயே பொட்டிலடித்தாற்போல் விளக்கியிருக்கிறீர்கள்! இன்னும் விளையாட்டை விளையாட்டெனவே நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் எளிய மக்களுக்குப் புரியட்டும்! மிக்க நன்றி!
பதிலளிநீக்குஉலக கோப்பை கவிதையை மிக அழகாக தங்கள் இணையப்பக்கத்தில் வெளியிட்ட தங்களுக்கும் அதைப் பாராட்டி பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் அன்பும் வாழ்த்துகளும். நன்றி தோழர்
பதிலளிநீக்கு