ஏ.ஆர்.ரகுமான் இசைக்குப் பாட்டெழுத வாருங்கள்!


இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 
தனது முகநூலில் - 
தனது புகழ்பெற்ற பாடலான 
“ஊர்வசி ஊர்வசி டேக்இட் ஈசி” பாடலை 
இன்றைய இளைஞர்களுக்கு 
ஏற்றவாறு எழுதச்சொல்லிக் கேட்டிருக்கிறார்

இசை அதேதான்… வரிகள் மாறவேண்டும். 
சரியா…
எடுங்கள் கணினியை, 
பிடியுங்கள் சுண்டெலியை 
அல்லது செல்பேசியைத் துளைத்துக் 
கொண்டுவாருங்கள் 
அந்த இளைஞன் கேட்ட இளைய பாடலை…
இதோ அந்த இணைப்பு -
ஆமா, நீங்க எழுதலியான்னு கேட்குறீங்களா…

நான் முன்னாள் கவிஞன் ஆகிவிட்டேன் என்று 
என் நண்பர்கள் ஓட்டுகிறார்கள்… 
அவர்களுக்காக முயல்வேன். 
பாட்டுவந்தால் 
உங்களிடம் சொல்லாமலா… 
பார்க்கலாம்..
என் இனிய பொங்கல் மற்றும்
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
உங்களுக்கும்
உங்கள் இனிய குடும்பத்தினருக்கும்,
என் சார்பாகவும்,
எனது இனிய குடும்பத்தின்
சார்பாகவும்!
அன்புடன்,
உங்கள் 
நா.முத்துநிலவன்
------------------------------------------ 

9 கருத்துகள்:

  1. எழுதியாச்சா என்ன ...
    ஆறுமாதமா கேட்டுண்டே இருக்கார் அவர்

    பதிலளிநீக்கு
  2. 'முன்னாள் கவிஞன்' என்று இல்லவே இல்லை. :-)

    பாடல் முயற்சி செய்கிறேன் அண்ணா. பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல் [மற்றும்
    தமிழ்ப்புத்தாண்டு] வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. விசு அவர்கள் தன் வலைத்தளத்தில் எழுதியிருந்தாரே!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஐயா! நான்கு வரிகளை அவர்தேர்வு செய்துவிட்டார் இசையாய் கேட்பதற்கு காத்திருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  6. புதிதாய் பாடல் எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. ஐயா! ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அனுப்பிய வரிகளிலிருந்து மிகவும் சொற்பனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து ஏ.ஆர். ரகுமான் அவர்கள் குழுவுடன் பங்கேற்ற MTV -unplugged நிகழ்ச்சியில், இப்பாடல் ஒளிபரப்பப்பட்டது!

    https://www.facebook.com/mtvindia/videos/10154815449600102/

    பதிலளிநீக்கு
  9. அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு