புதுடெல்லி நங்லாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், இந்தி ஆசிரியர் முகேஷ் குமார்
28-9-16 மாலை 5 மணியவில் வகுப்பறையில் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் தன்னை ஏன் தேர்வு எழுத விடவில்லை என்று ஆசிரியர் முகேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதிய வருகை பதிவு இல்லாததால் தேர்வு எழுத அனுமதியில்லை என்றார் ஆசிரியர்
இருவருக்கும்
இடையே
வாக்குவாதம்
முற்றவே,
அங்கு
தேர்வு
எழுதிக்கொண்டிருந்த
மாணவர்
ஒருவர்,
நண்பனுக்கு
ஆதரவாக
மறைத்து
வைத்திருந்த
கத்தியால்
திடீரென
ஆசிரியரைக்
குத்தினார்.
அதைத்தொடர்ந்து
வாக்குவாதம்
செய்த
மாணவரும்
ஆசிரியரை
கத்தியால்
குத்தினார்.
சகமாணவர்கள்
முன்னிலையில்
தொடர்ந்து
3 முறை ஆசிரியரை
சரமாரியாக
குத்திய
மாணவர்கள்
இருவரும்
அங்கிருந்து
தப்பிச்
சென்றனர்.
அதிர்ச்சியடைந்த
மாணவர்கள்
உடனே
மற்ற
வகுப்பு
ஆசிரியர்களுக்கு
தகவல்
கொடுத்து
வரவழைத்தனர்.
பின்னர்
ரத்த
வெள்ளத்தில்
மயங்கி
உயிருக்கு
போராடிக்
கொண்டிருந்த
ஆசிரியர்
முகேஷ்
குமாரை
உடனடியாக
பள்ளி
அருகேயுள்ள
மருத்துவமனையில்
சேர்த்தனர்.
ஆபத்தான
நிலையில்
சிகிச்சை
பெற்று
வந்த
ஆசிரியர்
முகேஷ்
குமார்
நேற்று
சிகிச்சை
பலனின்றி
உயிரிழந்தார்.
ஆசிரியரை
கத்தியால்
குத்திய
2 மாணவர்களையும் போலீசார்
சில
மணி
நேரத்திலேயே
கைது
செய்தனர்.
இறந்த
ஆசிரியர்
குடும்பத்துக்கு
ரூ.1
கோடி
இழப்பீடு
வழங்குவதாக
டெல்லி
மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் கொலைச் செய்திகளும், மாணவர்
கைதுச் செய்திகளும் ஏற்கெனவே 20102இல் சென்னையில் நடந்த “ஆசிரியர் உமா மகேஸ்வரி
கொலை, ஒன்பதாம் வகுப்பு மாணவர் இர்ஃபான் கைது” என்னும் செய்தியின் மறுபதிப்புத் தான்!
தமிழக அரசோ, டெல்லி அரசோ, மத்திய அரசோ
கூட இதுபற்றிச் சிந்தித்து, இந்தக் கேடுகெட்ட தேர்வுமுறையை, கல்விமுறையை மாற்றாத
வரை ஆசிரியர்கள் கொலை வழக்கமான செய்தியாகவே பார்க்கப்படும்!
-----------------------------------------------------
இதன் மறுபக்கத்தையும் பார்க்க
வேண்டும்!
ஆசிரியரால் மாணவர் தற்கொலை!
ஆசிரியர் பாலியல் கொடுமையால் மாணவி
தற்கொலை!