புத்தக அறிமுக விழா மற்றும்
கவிஞர் வைகறை குடும்பநிதி வழங்கும் விழா
(1) “புதுக்கோட்டை மாவட்டப் பாறை ஓவியங்கள்” நூலறிமுகவிழா.
(புதுகையில் பணியாற்றிய போது எமது வீதி கலைஇலக்கியக் களத்தையும், கணினித் தமிழ்ச் சங்கத்தையும்
தொடங்கி ஓராண்டுக்காலம் நடத்தி, தற்போது கோவை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலராகப்
பணியாற்றி வருகின்ற
தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் எழுதிய தொல்பழங்காலப்
பாறைஓவியம் பற்றிய ஆய்வு நூல்)
பார்க்க -
பார்க்க -
(2) நம்மோடிருந்து, 35வயதில் அகாலமரணம் அடைந்த- நம் வீதி, மற்றும் கணினித்
தமிழ்ச்சங்கத்தின் பிரிக்கமுடியாத வைரத்தை வைகறையைக் காலம் பறித்துக் கொண்டதால்..
கவிஞர் வைகறையின் குடும்ப
நிதி வழங்கும் விழா.
திருச்செந்தூர் அருகில் பிறந்தான்
தர்மபுரியில் ஆசிரியப் பணியேற்று,
அடுத்த சில ஆண்டுகளில் புதுகை வந்தான்.
எங்களோடும் சிலஆண்டுகளே வாழ்ந்தான்.
நான் அவனை
அவன் வீட்டில் சென்று
முதன்முதலாகச் சந்தித்தபோது
(நண்பரும் கவிஞருமான
நாணற்காடன் வந்தபோது) காட்டிய அன்பை
(நண்பரும் கவிஞருமான
நாணற்காடன் வந்தபோது) காட்டிய அன்பை
இறுதிவரை தொடர்ந்தான்.
என் மகனை ஒத்த
இளையவன் வயதில்,
என் தந்தையை ஒத்த மரியாதைக்குரியவன் பண்பில்.
இவ்வளவு
விரைவாக எம்மை விட்டுப் பிரிவான் என்று
நினைத்தும் பார்த்ததில்லை!
இதோ
அவனது இளம் மனைவியும், குழந்தை ஜெய்க்குட்டியும் அவனைப் பிரிந்து தவித்துக்
கிடக்கிறார்கள்!
புதுக்கோட்டைப் பதிவர் விழாவை அறிந்த அனைவர்க்கும் கவிஞர் வைகறையைத்
தெரியும்.
தவிரவும் தமிழ்நாடு முழுவதும் அவனது கவிநட்பு வட்டம், தர்மபுரி சேலம் பொள்ளாச்சி சென்னை என்று கவியூறும்தமிழ்உலகெலாம் பரந்து விரிந்து கிடக்கிறது.
தவிரவும் தமிழ்நாடு முழுவதும் அவனது கவிநட்பு வட்டம், தர்மபுரி சேலம் பொள்ளாச்சி சென்னை என்று கவியூறும்தமிழ்உலகெலாம் பரந்து விரிந்து கிடக்கிறது.
எனவே
தான்,
கோவை
தமுஎச நண்பர்கள் நடத்திய எனது புத்தக அறிமுக விழாவின்போது, கவிஞர்அம்சப்பிரியா, கவிஞர் பூபாலனுடன் பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள்,
தம்மிடம் கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா வழங்கிய ரூ.10,000 வைகறையின் குடும்ப
நிதியை என்னிடம் தந்து நெகிழ வைத்தனர்.
இதோ
புதுகை, பொள்ளாச்சியிலிருந்து தமிழகம் கடந்து, வைகறையின்மேல் அன்புகொண்டோர் வட்டம்...
இப்போது அமெரிக்கா வரை நீள்கிறது.
இப்போது அமெரிக்கா வரை நீள்கிறது.
பதிவர்
விழாவின் வரவுசெலவு விவரங்களை அப்போதே இணையத்தில் அனைவரும் அறியத் தந்திருந்தோம்.
(பார்க்க
– நிதிதந்தோர் பட்டியல் இணைப்புக்கு- http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html
பதிவர்
விழா வரவு செலவுக்கணக்குகளைப் பார்க்க –
(அதே
வங்கிக் கணக்கில் இப்வபோது வரவுவைக்கப்படும்
கவிஞர் வைகறையின் குடும்ப நிதிக் கணக்கும்
அனைவரும் அறிய, வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்)
கவிஞர் வைகறையின் குடும்ப நிதிக் கணக்கும்
அனைவரும் அறிய, வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்)
இதுவரை
ரூ.1,89,000 வந்துள்ளது. இதனை
ரூ.2,00,000
ஆக்கி, ஜெய்குட்டியின் பெயரில்
பத்தாண்டுகளுக்கான நிரந்தர வைப்பாக 31-07-2016 வீதி கூட்டத்தில் வைகறையின் துணைவியார் ரோஸ்லின் கையில் கொடுத்துவிட வீதி நண்பர்கள் எண்ணியிருக்கிறோம்.
வீதியின் நிறுவுநர் அய்யா அருள்முருகன் வழங்கவுள்ளார்.
வீதியின் நிறுவுநர் அய்யா அருள்முருகன் வழங்கவுள்ளார்.
30ஆம்
தேதிவரை வரும் தொகையை வைப்புநிதியில் சேர்த்துத் தர எண்ணியிருக்கிறோம். (பிறகு
வந்தாலும், அதையும் அறிவித்து, குடும்பத்தினரிடம் சேர்ப்போம் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறோம். இப்போதைக்கு ஒரு 11,000 ரூபாய் வந்தால் முழுத்தொகையாக்க
உதவியாக இருக்கும்)
உங்கள்
அன்பில் நம்பிக்கை வைத்து, –இதுவரை தராத- கவி உள்ளங்களிடம் நம் பதிவர்களிடம் உரிமையாகக்
கேட்கிறோம்!
இதுவரை
வேறெந்த அரசு உதவியும் கிடைக்கப்பெறாத நம் வைகறையின் குடும்பத்திற்கு நாம்தானே உதவ
வேண்டும்?
எனும் உரிமையில் கேட்கிறோம்.
உடன்
அனுப்பி உதவுங்கள் –
அனுப்ப
வேண்டிய வங்கிக்கணக்கு விவரம் –
(நமது
பதிவர் விழா வங்கிக்கணக்கு விவரமேதான்!
இந்த
ஆண்டு விழாவை வைகறை நிதிக்காக ஒத்திவைத்து, அடுத்த ஆண்டு நடத்திட
முடிவுசெய்திருக்கிறோம்)
NAME -
MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
இதுவரை
உதவியவர்களின் பட்டியல் காண -
(இது
19-05-2016 வீதி-28 நிகழ்வு நடந்தநாள் வரையான வரவே.
அதன்
பின்னர் வந்த தொகை சுமார் ரூ.60,000 பட்டியல் தனியாக உள்ளது. வரும் 31-07-2016 வீதி-29
நிகழ்வில் ரூ.2,00,000 தொகைக்கான முழுப்பட்டியல் அடுத்தநாள் பதிவேற்றப்படும்)
----------------------------------------------------------
“அய்யா…” என்று தொலைபேசியில் அவன் குரல் கேட்டால்,
ஒன்று
ஏதாவது நிகழ்வுபற்றி, அல்லது தான் படித்த நல்லதொரு கவிதைபற்றிய செய்தி வரும்! அதுதான் வைகறை!
வெற்று
வார்த்தைகளை அவன் சொல்லி ஒருபோதும் கேட்டதில்லை! வேடிக்கை கூடப்பிடிக்காத சீரியஸ்
கவி!
வைகறையின் வலைப்பக்கம் -
வைகறையை ஆசிரியராகக் கொண்டு ஏற்கெனவே
வெளிவந்து, இடைநின்றிருந்த நந்தலாலா இணைய இதழை, மீண்டும் வெளியிட்டார்,
விக்கிமீடியா நிறுவனத்தின் இந்திய இயக்குநர் திருமிகு இரவிசங்கர் (புதுக்கோட்டை
பதிவர் திருவிழா-11-10-2015)
இது மீண்டும் புதுப்பிக்கப்படாமல் கிடக்கிறது.
ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள்!
வைகறை
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள்!
வைகறை
(நந்தலாலா
இணைய இதழ் ஏப்.09, 2016)
இந்தஇதழ் இப்போது இணையத்தில் கிடைக்கவில்லை என்பது வைகறையை இழந்த
துயரத்தை அதிகப்படுத்துகிறது.
வாருங்கள் விழாவில் சந்திப்போம்! வைகறையின் குடும்பம் அவன் நினைத்தபடி
வாழ நம்சக்திக்கேற்பச் செயல்படச் சிந்திப்போம்!
வலைப்பதிவர் திருவிழா-2015இல், தமிழ்இணையக் கல்விக்கழகத்துடன் புதுக்கோட்டை
கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவிய கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற வைகறையின் கவிதை
இது –
-------------------------------------------------------------------------------------------
இது
பற்றிய கூடுதல் தகவல்களை அறிய, வீதி மற்றும் கணினித் தமிழ்ச்சங்க நிதிப்பொறுப்பாளர்
கவிஞர் மு.கீதா அவர்களின் வலைகாண வாருங்கள் -
------------------------------------------------------------------------
ஒரு
வேண்டுகோள், நிதிதர வாய்ப்பில்லாத நண்பர்களும் வைகறைக்கு உதவ முடியும். இந்தப் பக்கத்தை
உங்கள் முகநூலில், வலைப்பக்கத்தில், சுட்டுரையில் G+இல் பகிர்வதன் வழி… செய்வீர்கள்தானே? செய்வீர்கள்!
Anna aluthutten
பதிலளிநீக்குhttp://valarumkavithai.blogspot.com/2016/07/blog-post_78.html = எனது பக்கத்தில் பகிர்கிறேன். திரு நாறும் பூ நாதன் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். நன்றி ஐயா திரு முத்து நிலவன்
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உருக்கமான பதிவு. வைகறை என்றாலே அந்த கவிஞனின் முகம்தான் நிழலாடுகிறது.
பதிலளிநீக்குஐயா முகநூலிலும், ஜி+ லும் பகிர்ந்துவிட்டோம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிற்கு எங்கள் இருவரின் சார்பில் எங்களால் இயன்ற ஒரு சிறு தொகை அனுப்பப்பட்டுள்ளது ஐயா/அண்ணா.
பதிலளிநீக்குவைகைறை அவர்களின் கவிதையை தெரிவு செய்திருந்தோம். அவரது குடும்பத்திற்கு ஆறுதல்கள். அவரின் குழந்தை சிறப்பாக வந்திட வாழ்த்துகள். வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை..
இந்தக் கவிதையை அவரது தளத்தில் வாசித்த நினைவு எங்கள் தளத்திலும் இரங்கல் பதிவில் இதைக் குறிப்பிட்ட நினைவு..
மனதை நெகிழவைத்துவிட்ட எழுத்துகள்.
பதிலளிநீக்குகண்கள் கசிய படிக்கிறேன்....என்றும் நம் நெஞ்சில் நீங்கா நண்பன் வைகறை...
பதிலளிநீக்குஇப்போது வீட்டில் சென்று ஜெய்க்குட்டியை பார்த்தேன். வாழ்க்கை எலிப்பொந்தில் தள்ளி அவனின் சிறகை முறித்து போட்டுவிட்டிருக்கிறது.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் ஜெய்க்குட்டிக்கு நல்ல வாழ்வினை காட்டிடvendum.
மனதை நெகிழ்த்திய பதிவு.
பதிலளிநீக்குகலந்து கொள்ள விருப்பம் இருப்பினும் வர முடியாத சூழல்.... விழா சிறக்க வாழ்த்துகள்.