விஸ்வநாதன்-ராமமூர்த்தியும், ஜேம்ஸ் வசந்தனும்

 முன்னர் எனது பதிவு ஒன்றில், “இன்றைய இளைஞர்கள் நினைத்தால் தஞ்சைப் பெரியகோவிலையும், ஆக்ரா தாஜ்மகாலையும் கூட விஞ்சக்கூடிய விஞ்ஞான அறிவும், கலைமேன்மையும் கொண்டவர்கள்” என்று எழுதியிருந்தேன். 

பலரும் இதில் குறைப்பட்டுக்கொண்டார்கள்!
ஆனால், இதைப் பாருங்கள் – பாடலைக் கேளுங்கள்
இன்றைய இளையவர்களைப் பற்றிய பெருமை 
நெஞ்சுக்குள் பொங்கிவரும்! 


சும்மா டிவி யிலயும், திரைப்படத்திலும் வரும் விடலைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனவர்களுக்கு இவர்களைப் போலும் இளைய திறமைசாலிகள்தானே நம்பிக்கை?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாடல்தான்,
பலமுறை கேட்டுக் கிறுகிறுத்த 
இசைமேதையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசைதான்.

ஆனால், இசைக்கருவி எதுவுமின்றி, கைச்சொடுக்கும், வாய் ஊதலும் மட்டுமே பின்னணியாக வர அற்புதமான பாவங்களோடு பாடியிருக்கும் இந்த இளையவர்கள்.. நடிகர்களல்லவாம்! இசைக்கலைஞர்களாம்! இந்த இணைப்பின் யூ-ட்யூப் பதிவு வரிகளில்
ஜேம்ஸ் வசந்தன் எழுதியிருப்பதையும் பாருங்கள்! 
(இப்பாடல், “வானவில் வாழ்க்கை“எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதாக அதே குறிப்பில் தெரிகிறது. படம் வெளிவந்தது பற்றித் தெரியவில்லை, பாடல் அருமையாக உள்ளது மட்டும் உண்மை)

“தாய் எட்டடி குட்டி பதினாறடி” பழமொழிக்கு எடுத்துக்காட்டாகிவிட்டார்கள் இந்த இளைய கலைஞர்கள்! 
இவர்களின் இசைத்தமிழ்ப்பணி இனிதே வளர்க!

கைகொடுங்கள் 
ஜேம்ஸ் வசந்தன்! 
வாழ்த்துகள்!

(ஒருவார்த்தை ஒருலட்சம் நிகழ்ச்சியின் தமிழர்கள் போற்றும்படியான உங்களின் நுண்ணரசியலை வணங்கி, வாழ்த்தி வரவேற்கிறேன்)

இளையவர்களின் காணொலி கேட்டும் பார்த்தும் மகிழ –


பாடல் வரிகள் கிடைக்காதவர்களுக்காக -
தமிழுக்கும் அமுதென்று பேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
----------------------------------------------------------------------
பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்டி.கே. ராமமுர்த்தி
வரிகள்: பாரதிதாசன்,   நடிப்பு – கே.ஆர்.விஜயா, முத்துராமன்.

திரைப்படக் காணொலி காண - https://www.youtube.com/watch?v=J2mIZcb7uqg
-------------------------------------------------------------------------------------
கடைசியில் ஒன்று –
”என்ன திடீரென்று பாட்டு” என்போருக்காக…
இந்தப்பாடலை நண்பர் ஒருவரின் செல்பேசி வழியாகக் கேட்டு அசந்துபோய், மாதா மாதமும் (ரூ.30+12) பணம்கட்டி எனது செல்பேசியில் கடந்த பல மாதங்களாக வைத்திருக்கிறேன். 

இந்தப் புதியவர்களின் இசைக்கோவையில் கேட்க விரும்புவோரும், தமது செல்பேசியில் இந்தப் பாடலை வைத்துக்கொள்ள விரும்புவோரும் என்னை அழைத்து -தொலைபேசித் துறைக்குப் பணம்கட்டி- தாராளமாக அமைத்துக் கொள்ளலாம்! வருக!
எனது செல்பேசி எண் - +91 94431 93293

புதிதாக அழைப்பவர் இந்தப் பாடலைக் கொஞ்சநேரம் கேட்கட்டும் என்பதற்காக சிறிது தாமதமாகவே நான் புதிய அழைப்புகளை எடுப்பது வழக்கம். நான் வேறுபணிகளில் இருந்தாலும் எடுப்பதில்லை. மறுமுறை கேட்கும்போதே பொத்தானை அழுத்தி நீங்கள் உங்கள் செல்பேசியில் உடனடியாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்!  

இதைப் பற்றிப் பலரும் என்னைப் பாராட்டுகிறார்கள்! ஆனால் உண்மையான பாராட்டுக்குரியவர்களை நாம் பாராட்டவேண்டாமா? பரப்புவது தானே உண்மையான பாராட்டு! பரப்பிட்டேன்.. வாழ்க!
 --------------------------------------------------------------------------------------



7 கருத்துகள்:

  1. அருமையாக பாடி இருக்கிறார்கள். நானும் கேட்டு ரசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நானும் ரசித்தேன். சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. அன்பு ஐயா,

    நீங்கள் பகிர்ந்து கொண்டுள்ள பாடல் இடம் பெற்றுள்ள அதே தொகுப்பிலிருந்து மேலும் இரண்டு பாடல்கள் இதோ

    https://www.youtube.com/watch?v=7yAQOiD9EqU



    https://www.youtube.com/watch?v=AD7BvXiq24U

    நான் மிக அதிகம் ரசித்த பாடல்களின் பட்டியலில் இவையும் இடம் பெற்றுவிட்டன. காரணம் தமிழ், தமிழ், தமிழ், தமிழ்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாடல் முன்பே ஒரு முறை கேட்டிருக்கிறேன்...

    இப்போது மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்...

    நம்மவர் படத்தில் கூட கல்லூரி விழாவில் இதே முறையில் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் கொடுத்திருந்த காணொலி அற்புதம். பாரதி தாசனின் இந்தப் பாடலுக்கும் சரி, பாரதியாரின் 'சிந்துநதியின் மிசை நிலவினிலே' வுக்கும் சரி; தமிழின் முக்கியமான இரு பெரும் கவிஞர்களின் இந்த இரண்டு பாடல்களுக்கு இணையாக இத்தனை இனிமையாக இசையமைத்த இசையமைப்பாளர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா? அப்படி இல்லையெனில் இந்த இரண்டு கவிஞர்களுடைய பாடல்களில் ஏதாவதொன்றை எடுத்துக்கொண்டு இதைவிட சிறப்பாக இசையமைக்கும் இசையமைப்பாளர் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அவரை தமிழின் மிகச்சிறப்பான இசையமைப்பாளர் இவரே, இவருக்கு இணை இங்கே யாருமில்லை என்று நான் ஏற்றுக்கொள்கிறேன் - என்று ஒரு பதிவில் நான் எழுதியிருந்தேன். அதற்கு இதுவரை இணையவெளியில் பதில் இல்லை. உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு அதுதான் நினைவு வருகிறது. என்னே அந்த இரட்டையர்களின் மேன்மை.

    பதிலளிநீக்கு
  6. இதை ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கிறோம். மிக மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள்....

    பதிலளிநீக்கு