முதலில்
தந்தி தொலைக்காட்சியின் இந்த விவாதத்தைப் பாருங்கள் –
(நான்கு
இணைப்புகள் அடுத்தடுத்து வருவதைக் கவனிக்க)
இனி, இந்தச்
செய்தியைப் படியுங்கள் –
புனித கங்கை நீர் விற்பனை திட்டத்தின்படி, அந்த நீர் அஞ்சல் அலுவலகங்களில் அமோக விற்பனையாகியது.
ரிஷிகேஷ், கங்கோத்ரி ஆகிய இரு இடங்களிலிருந்து கங்கை நீர் பெறப்படுகிறது. அங்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள் நீரை பெறும் விதமாக, அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனையை பாட்னாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
உத்தரகண்ட் அஞ்சல் ஊழியர்கள் பாட்டிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு, நாடு முழுவதும் அனுப்பி வைக்கின்றனர். இதில், ரிஷிகேஷ் நீர் 200 மி.லி. அளவு ரூ.15-க்கும், 500 மி.லி. அளவு ரூ.22-க்கும், கங்கோத்ரி நீர் 200 மி.லி. பாட்டில் ரூ.25-க்கும், 500 மி.லி. பாட்டில் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 7 இடங்களில்...: தமிழகத்தில், முதல்கட்டமாக திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தருமபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலை, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால், சில நிமிடங்களிலேயே அனைத்து கங்கை நீர் பாட்டில்களும் விற்றுத் தீர்ந்தன.
இதுகுறித்து சென்னை மாநகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலேக்சாண்டர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 94 தலைமை தபால் அலுவலகத்திலும் கங்கை நீர் விற்பனை செய்யப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணராஜன், ரஞ்சனா தேவி கூறுகையில், “கங்கை நீரில் புனித நீராடுவது இந்து மக்களிடையே பாரம்பரியமிக்க ஒன்றாக இருந்து வருகிறது. அதோடு, அனைவராலும் கங்கைக்கு சென்று வர முடியாது. இதற்காக, அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை செய்யப்படுவதை வரவேற்கத்தக்கது“ என்றனர் – (தினமணி-13-07-2016)