விபச்சார விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்!

'ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு..' என்கிற கதையாக, கடைசியில் சீட்டு விளையாட அழைக்கும் விளம்பரமும் தொலைக்காட்சியில் வந்துவிட்டது! (படத்தைப் பாருங்கள்!) அடுத்து விபச்சார விளம்பரம் வருவதை விரைவில் எதிர்பார்க்கலாம்..இருபாலருக்கும்தான்!

கணினி நேரலையில் கொட்டிக்கிடக்கும் ஆபாசத் தளங்களையும், சீட்டுவிளையாட அழைக்கும் விளம்பரங்களையும் தாண்டி நல்லவற்றை மட்டுமே தொடரக் கற்றுக்கொண்டால் இன்றைய இளைய தலைமுறையின் வெற்றி நிச்சயம்தான். தாண்டணுமே?

ஏற்கெனவே “மாக்டொவெல்“குழுமத்தின் சோடா(?) விளம்பரம் பெரியநடிகரின் பெயரில் வந்தது, சர்ச்சையாகி ஓய்ந்தது தெரியும். அந்த விளம்பரமும் அவ்வப்போது வரத்தான் செய்கிறது. அந்த விளம்பரம் சோடா விளம்பரமே இல்லை, மறைமுகமாக அந்தக் குழுமத்தின் விஸ்கி பிராந்தி விளம்பரமே என்பதை அறிந்தவர்கள் அறிந்திருந்தார்கள்… அரசுகள்தான் பாவம் அறியவே இல்லை!

அடுத்த கட்டமாக, நம் வீட்டுக் கூடத்துக்கே வந்துவிட்டது சீட்டாட அழைக்கும் தொலைக்காட்சி விளம்பரம்! (படத்தைப் பாருங்க!)

பாலிமர் தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பான செய்தியின் ஊடாக வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அரண்டு புரண்டு, செல்பேசியைத் தேடிஎடுத்துப் படம்பிடிப்பதற்குள் இந்தக் காட்சியை மட்டுமே பிடிக்க முடிந்தது! நண்பர்கள் மன்னிக்க வேண்டும்!

குடி ஆச்சா..? இப்ப சீட்டு…! இனி விபச்சாரம் ஒன்றுதான் பாக்கி அதற்கும் மறைமுகமாகவோ ஏன் நேரடியாகவோ தொலைக்காட்சி விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்கள்…!

“பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”-பாரதி.

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு - குறள் 920
      (பொருள்- விலைமாந்தரும், குடிகாரர்களும், சூதாடுவோரும்    
       தீயதொடர்புடையாராகி அழிவர்)
பி.கு. - இதைப் படித்துவிட்டு 'விஸ்கி விஸ்கி' அழுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை... எல்லாம் மனப்'பிராந்தி'தான் என்று அடுத்தவேலையைப் பார்க்கப் போகலாம்.. நடப்பதெல்லாம் நம்செயலல்லவே? நாராயணன் செயல்தானே? சுப மஸ்தூ!

11 கருத்துகள்:

 1. பாலிமர் ஊடகம் கொலை கொள்ளைகளை பற்றிய செய்திகளை வாசிக்கும் போது பயன்படுத்தும் பாவனை வார்த்தைகளோடு இதுவும் சேர்ந்துவிட்டதா.

  பதிலளிநீக்கு
 2. எவற்றையும் எதிர்கொள்ளும் அளவு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் போலுள்ளது. அவர்களுடைய வியாபார இலக்கிற்கு எல்லையே இல்லை என்பதை நினைக்குபோது வேதனையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 3. மறைமுக விபச்சார அழைப்புகள் செல் போனுக்கு வந்து கொண்டு இருக்கின்றனவே, கவனிக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 4. என்ன கொடுமை இது ? நம்மள சும்மாவே விடமாட்டானுக போலங்க அய்யா ? டென்சன்லயே வச்சுருக்கானுக ....

  பதிலளிநீக்கு
 5. மக்களைப் பண்படுத்த வேண்டிய பெருவெளி ஊடகங்கள் இத்தகு விளம்பரங்களால் பண்பாட்டைப் பாழ்படுத்தும் நிலையைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே... என்ன செய்வது?

  பதிலளிநீக்கு
 6. திருவனந்தபுரத்தில் வலைத்தளம் மூலம் விளம்பரம் செய்து வலை வீசியவர்களை காவல் துறை கைது செய்தது.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 7. என்னாது ? விபச்சார விளம்பரம் வரலையா? ஐய்யா.. தமிழ் படத்து டூயட் பாடல்களை (உதாரணம் .. சும்மா நிக்காதிங்க - தூங்காதே தம்பி தூங்காதே ) பாடலைகளை கொஞ்சம் பாருங்க.,

  பதிலளிநீக்கு
 8. வி.வி. ஆன்லைன்ல எப்பவோ வர்ற ஆரம்பிச்சுடுச்சு...
  அப்படியே பாலீஷா எஸ்கார்ட் சர்விஸ்ன்னு சொல்லுவானுங்க...!!
  சில பெரிய ஹோட்டல்கள்ல கூச்சப் படாம கேப்பானுங்க...

  பதிலளிநீக்கு
 9. இணையத்திலும் இந்த விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன - பல தளங்களில்......

  பதிலளிநீக்கு
 10. அண்ணா என்ன அண்ணா மிட்னைட் மசலாவை மறந்துட்டீங்களா விட்டுப்புட்டீங்களே....ஆன்லைன்ல நிறையவே வருதே இந்த விபச்சார விளம்பரம். நல்ல பக்கங்களில் கூட வருது. அதை ஏன் கேட்கின்றீர்கள் மொபைலில் கூட மெசேஜ் வருது.

  "ஹை ஐ யம் ...........வித் ப்யூட்டி அண்ட்........யு கேன் கான்டாக்ட் மி இன் திஸ் நம்பர் இன் திஸ் சைட்....." அப்படினு....வருது என்னனு சொல்லறது. என்னை ஆண் என்று நினைச்சுட்டாங்க போல...

  இதைவிடக் கொடுமை இங்கு சென்னையில் ஒரு சில ஏரியாக்கள் கொஞ்சம் பணக்கார ஏரியா மரங்கள் அடர்ந்து அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாதிருந்த போது அதற்குப் பக்கத்தில் நாங்கள் குடியிருந்த போது பெரிய கார்கள் வந்து நிற்கும். நாங்கள் முதலில் பார்க்கிங்க் விட்டிருக்கிறார்கள் போலும் என்று நினைத்தோம். கண்ணாடிகள் கருப்புகலர் உள்ளே பார்க்க முடியாது. சிறிது நேரத்தில் கார் ஆட ஆரம்பிக்கும் (படத்தில் வருவது போல). நாங்கள் முதலில் புரியாமல் பயந்து போனோம். அப்புறம்தான் தெரிந்தது அது கசமுசா என்று. அந்தப் பெண்களைப் பார்த்ததும் உண்டு. இப்போது இல்லை வேறு இடம் மாற்றியிருப்பார்கள் போலும். என்னத்த சொல்லுறது.

  கீதா

  பதிலளிநீக்கு