நன்றிக் கடன் வளர்ந்துகொண்டே போகிறது,,,

நெகிழ வைத்த நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
எழுத்தாளர், பதிவர் கரந்தை ஜெயக்குமார்
 பார்க்க -


 எழுத்தாளன் ஒருவன், தன் சக எழுத்தாளர்களால் அங்கீகரிக்கப்படுவதுதானே பெரிய விருது!

நன்றி கரந்தையார் அவர்களே!

கொஞ்சம் பின்னோக்கிப் போகிறேன் -
1993இல்நான் எழுதிய “புதிய மரபுகள்” கவிதைத் தொகுப்பில் ஒரு நுட்பமொன்றை வைத்திருந்தேன்-

புதிய மரபுகள் எனும் தலைப்புக்கேற்ப, ஒரு மரபுக் கவிதை, அடுத்தொரு புதுக்கவிதை என நூல் முழுவதும் அடுக்கியிருப்பேன். இதனை அனேகமாக வேறுயாரும் கவனித்ததாக இன்றுவரை அறியேன். ஆனால், முன்னர்ப் பலமுறை சொல்லியும் கவிதைகளைத் தொகுத்துத் தராத எனது சோம்பேறித் தனத்தை உணர்ந்துகொண்டார் கவிஞர் மீரா.

கவிஞர் பாலா
கவிஞர் கந்தர்வன்
தன் நண்பர் கவிஞர் பாலாவைச் சந்திக்க வந்தபோது, அவரையும் அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்த  மீரா, “ அவனவன் கவிதைகளைக் குடுத்து போட்டுத்தாங்க என்று கெஞ்சிக்கிட்டு இருக்குற காலத்துல நா போட்டுத் தர்ரேன்னு சொல்லி ஆறுமாசமாச்சு இன்னும் நீங்க தரல.....எடுங்க...உங்க கவிதைகளை..”  என்று பிடிவாதமாக வந்து உட்கார, மிகவும் வெட்கப்பட்ட நான் அவரிடம் கொஞ்சம் கொடுத்துவிட்டு, பிறகு கவிஞர் கந்தர்வனின் முன்னுரையுடன், அவரையும் அழைத்துக் கொண்டு சிவகங்கை போய் தொகுப்பைத் தந்து வந்தேன்.

அதனை அவரது  அன்னம்-அகரம் அச்சிட்டு வெளியிட்ட பிரபல வானம்பாடிக் கவிஞரும் , இளைய படைப்பாளிகளின் வேடந்தாங்கலுமான கவிஞர் மீரா அவர்களின் அன்புக்கு நான் நன்றி சொன்னேன்.

எழுத்தாளர் பொன்னீலன்
இந்நூலின் கையெழுத்துப் பிரதிக்கே, 1993இன் சிறந்த கவிதை நூலுக்கான விருதைத் தந்து பெருமைப் படுத்தி, 1993 டிச.11அன்று பாரதியின் எட்டய புரம் இல்லத்தின் முன்பாக விழா எடுத்து, பிரபல எழுத்தாளரும் அன்றைய கலைஇலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவருமான பொன்னீலன் அவர்கள் விருதைத் தந்தார் எனக்கு!

பின்னர் 1995முதல் 2015வரை காமராசர் பல்கலையின்
முதுகலை இலக்கிய வகுப்புக்குப் பாடநூலாக வைத்து, பிறகு என்னைப் பற்றி விசாரித்து, மாணவர்களிடம் வந்து பேசச் சொன்னவர் தமிழ்த்துறைத் தலைவரும் தமிழறிஞருமான முனைவர் மோகன் அவர்கள்!

இந்தநூலின் இரண்டாம் பதிப்பை, 2014இல் வெளியிட்ட பெருமைக்குரியவர் வேறுயாருமல்ல - காலஞ்கசென்ற கவிஞர் மீரா அவர்களின் அன்பு மகனேதான்! அவர்தான்  இன்றைய அன்னம்-அகரம் பதிப்பக உரிமையாளர்!

இவர்கள் அனைவர்க்கும் எனது நன்றிக்கடன் சேர்ந்து கிடக்க, எனது நூலை -அதிலும்எ குறிப்பாக பலரும் கவனிக்கத் தவறிய எனது பின்னுரையை நுணுக்கமாகக் கவனித்து எடுத்தெழுதி, என் கடனை மேலும் அதிகமாக்கியிருக்கிறார் தஞ்சை  - கரந்தைப் பதிவர் ஜெயக்குமார் அவர்கள்... 

இவர்களுக்கெல்லாம்நன்றி எனும் ஒற்றைச் சொல், போதாது என்பது புரிகிறது. 
ஏதாவது செய்வோம்... விரைவில். நன்றி.

பார்க்க -

5 கருத்துகள்:

  1. பழமையான நினைவோட்டங்கள் அருமை கவிஞரே வாழ்த்துகளும், நன்றியும் - கில்லர்ஜி
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. நெகிழ்ச்சியைப் எங்களுடன் பகிர்ந்துகொண்டமையறிந்து மகிழ்ச்சி. ஒரு படைப்பாளிக்கு பெரிய மகிழ்ச்சி இதுவே.

    பதிலளிநீக்கு
  3. கரந்தை ஜெயக்குமார் தளத்தில் தங்கள் நூலின் விமர்சனம் படித்தேன்! ஆழ்ந்து படித்து விமரிசித்துள்ளார். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு

    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
  5. தங்களின் அன்பு மழையில் நனைந்தேன் மகிழ்ந்தேன் ஐயா
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    பதிலளிநீக்கு