வரும் 11-10-2015 அன்று “வலைப்பதிவர் திருவிழா-2015” புதுக்கோட்டையில் நிகழவிருப்பதை அறிந்திருப்பீர்கள்!
வருவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறீர்கள், சிலர் பயண முன்பதிவு செய்துவிட்டதாகச் சொன்னது மகிழ்ச்சி!
“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தமது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுப்படிவத்தை இதுவரை 50பேர் நிரப்பியிருப்பதாக அறிந்து மகிழ்கிறோம்.
இன்னும் பதிவுகள் தொடர்கின்றன... நீங்கள் இதுவரை படிவம் நிரப்பாமல் இருந்தால் உடன் நிரப்பிவிட வேண்டுகிறேன். ஒருவேளை கடைசிநேரத்தில் வரஇயலாமல் போனாலும் பரவாயில்லை, விவரம் கிடைக்க வேண்டுமல்லவா?
வலைப்பதிவர் கையேடு
இம்முறை ஒரு புதிய முயற்சி எடுக்கிறோம் –
உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப்பதிவரை அறிந்து கொள்ள உதவும் “தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015“
உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப்பதிவரை அறிந்து கொள்ள உதவும் “தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015“
இதற்கு, வருவோர் வரஇயலாதோர் அனைவருமே தத்தம் சுயவிவரம் தருவதால் சரியான –இன்றைய- தகவல்களுடன் அனைவருமறிய ஒரு கையேடு கிடைக்கும் என்பதால் பதிவர்-படிவம் முக்கியத்துவம் பெறும் முக்கியமாக வெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தம் விவரங்களை –அவர்கள் விரும்பினால் தமிழ்நாட்டில் தொடர்புகொள்ளும் முகவரியுடன்- தரலாம்.இதற்கென விழாக்குழுவில் ஒரு குழுவினர் தனியே சுறுசுறுப்பாகச் செயல்பட்டு விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.
இதில் ஒரு வேண்டுகோளும் கூட..
15-9-2015 வரை வரும் விவரங்களைக் கொண்டே இக்கையேடு தயாரிக்கப் படவுள்ளது. பக்க அளவு அப்போதுதான் இறுதியாகும். அச்சிடும் செலவும் அப்போதே முடிவாகும். இதனை விழாவுக்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகவே தருவதென்றும், அச்சிடும் செலவை ஈடுகட்ட சில பக்கங்களில் விளம்பரம் வெளியிடலாம் என்றும் விழாக்குழு முடிவெடுத்துள்ளது. எனவே, வாய்ப்புள்ள நண்பர்கள் கடைசிப் பக்கம் மற்றும் உள் அட்டைகள் இரண்டு ஆக 3வண்ணப் பக்கங்களில் இடம்பெறும் விளம்பரங்களைப் பெற்றுத் தந்துதவலாம். உள்பக்கங்களில் ஒரு வண்ணம் மட்டுமே
வெளிநாடுகளில் இயங்கிவரும் தமிழ்அமைப்புகள் தமிழ்ச் சங்கங்கள்- உதவும் தமிழர்களை அணுகி இதற்கு உதவிசெய்ய வேண்டுகிறோம். இது பற்றிய செய்தி விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டாம் என்பதால் தனியே மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
முக்கியமாக,வெளிநாடுவாழ் தமிழ்வலைப்பதிவர்கள் தமது நிதிஉதவி,
விளம்பர உதவியுடன்–
வரஇயலாதவர்–தமது வாழ்த்துரையை, கவிதையை 10,15வரிக்குள் தெரிவித்தால் அதை விழா அரங்கில் அழகாக எழுதி வைக்க விரும்புகிறோம். கவிதையாகவோ வாழ்த்துரையாகவோ தருக!
நேரில்வருவோர் தரும் சுய-அறிமுகத்தை அப்படி அப்படியே நேரலையில் தரவிருப்பதாலும், விழாவில் வெளியிடவுள்ள வலைப்பதிவர் கையேட்டில் அச்சிட்டுத் தரவிருப்பதாலும் தனியே தரவேண்டியதில்லை. (கூகுள் படிவத்தில் பதிவு செய்தல் போதும்)
அப்படியே தங்கள் நல்வரவு(உடன்),
நல்“வரவும்“ ஆகுக!
அனைத்துத் தொடர்புகளுக்கும் -
bloggersmeet2015@gmail.com
-------------------------------------------------------------
விழாவுக்கான
பிரத்தியேக வலைப்பதிவு காண வருக
http://bloggersmeet2015.blogspot.in/