“வலைப்பதிவர் திருவிழா-2015“ விழா, விருதுகள் விவரம்

 வலைப்பதிவர் திருவிழா-2015“ 
விழா, விருதுகள் விவரம்

-விழா விவரம்-

வலைப்பதிவர் அறிமுகம்,
கவிதை-ஓவியக்கண்காட்சி,
தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியிடல்,
இடையிடையே இன்னிசைப்பாடல்கள்,
நூல்வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள்,
உரைவீச்சு,
விருதுகள் வழங்குதல்,
என
விழா விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது

விழாவிற்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகத் தரப்படவுள்ள
தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”
தயாரிப்பதற்கு 
அடிப்படைத் தகவல்கள் தேவைப்படுவதால்,
கடந்த பதிவர் சந்திப்புகளில் கேட்கப்பட்டதை விடவும்
கூடுதலான சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
---------------------------------------------
விழா நடத்தும் முறை,
நிகழ்ச்சிகள்,
விருதுகள் அனைத்தும்
தமிழ்வலைப்பதிவர் பெரும்பாலானவர்
விழாவுக்கு வரவேண்டும்,
மகிழ்ச்சியாக விவரமாகத் தன்பதிவுகளைத்
தொடரவேண்டும்
எனும் நோக்கிலேயே திட்டமிடப்படுகின்றன.
இதில் இன்னும் என்னென்ன செய்யலாம்
என்று நம் நண்பர்கள் தரும்
நல்ல ஆலோசனைகள்
வரவேற்கப்படுகின்றன.
பின்வரும் மின்னஞ்சலுக்கு
உங்கள் ஆலோசனைகளை அனுப்பலாம்.
வரும் 20-8-2015க்குள் மின்னஞ்சல் செய்க.
நன்றி.

-----------------------------------------------------------------------

கையேட்டிற்காக
பதிவர்கள் தாம் வெளியிட்ட
நூல்கள்
குறும்படங்கள்
பெற்ற விருதுகள்,
சிறப்புகள்
விவரங்களைத் தர விரும்பினால் தரலாம்.

கையேட்டில் வெளியிட விரும்பினால்
பதிவர்கள்
தமது செல்பேசி எண், புகைப்படத்தை அனுப்பலாம்.
அல்லது ப்ரொஃபைல் லோகோ இருந்தாலும்
இணைத்து அனுப்பலாம்.
-------------------------- 
விழாவிற்கு வரவிரும்பாதவர் 
யாரும் இருக்கப் போவதில்லை. 
எனினும், வர இயலாதவர்களும் அந்த விவரத்துடன்
தமது வலைப்பக்க விவரங்களைத் தரலாம்.
அவர்களின் வலைப்பக்க விவரம் 
இலவசக் கையேட்டில் சேர்க்கப்படும்.
ஆனால் நேரில் வருவோர் மட்டுமே
விருதுபெறுவோரைத் தேர்வுசெய்வதில்
பங்கேற்க முடியும் என்பதை
இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம்.
--------------------------------- 

வலைப்பதிவர் திருவிழா-2015“இல்,
கீழ்க்காணும் விருதுகள் மகிழ்வுடன் வழங்கப்படவுள்ளன-
(1)   வளர்தமிழ்ப் பதிவர் விருது
(தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களித்து வரும் பதிவர்)

(2)   மின்னிலக்கியப் பதிவர் விருது” 
(கதை,கவிதைப் படைப்புகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(3)   வலைநுட்பப் பதிவர் விருது” 
( வலைப்பக்கம் எழுத உதவியாகத்
தொழில்நுட்ப விளக்கங்கள் எழுதிவரும் பதிவர்)

(4)   விழிப்புணர்வுப் பதிவர் விருது” 
(சமூக விழிப்புணர்வுப் பதிவுகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(5)   பல்சுவைப் பதிவர் விருது” 
(திரைப்படம், ஊடகம் செய்திகளைச் சுவைபட எழுதும் பதிவர்)

மேற்காணும் பதிவர் விருதுகள்,
விழாவிற்கு வருவோரில் இருந்தே
வருவோரின் கருத்தறிந்தே வழங்கப்படும்

இதே ஐந்து விருதுகளும்
வெளிநாட்டில் வாழும் தமிழ்ப்பதிவர்க்கும் உண்டு.
அவர்கள் மட்டும் விழாவிற்கு வந்தாலும் வராவிடினும் விருதுபெறுவோரின் வலைப்பக்கத்தில் வைப்பதற்கேற்ப
மின்பரிசாக” (டிஜிடல்) வழங்கப்படும்.

இதையும்
விழாவிற்கு வருவோரே தேர்ந்தெடுக்கத்
தகுதியானவராவர்.

தவிர,
சிறந்த பதிவுகளைத் தரும் பெண்பதிவர்விருதுகள்
விழாவுக்கு வரும் மூவருக்கும்,
விழாவுக்கு வந்தாலும் வராவிடினும்,
வெளிநாடு வாழ் பெண்பதிவர் இருவருக்கும்
ஆக ஐந்து விருதுகள் தரப்படவுள்ளன.

இவை தவிர,
விழாவிற்கு வருவோரில்
வயதில் மூத்த  பதிவர் ஐவர்க்கும்,
வயதில் இளைய பதிவர் ஐவர்க்கும்
(அவரவர் பிறந்தநாள் அறிந்து)
விருதுகள் தரப்படவுள்ளன.

மற்றும்  
நமது பாராட்டுக்குரிய
இருபெரும் முன்னோடிப் பதிவர்கள்,
விழா மேடையில்
பாராட்டுடன் கூடிய
விருதுகள் வழங்கிக்
கௌரவிக்கப்படுவர்
(இது சஸ்பென்ஸ்)

(விருதுகள்  பெறுவதில்,
புதுக்கோட்டை மாவட்டப் பதிவர்கள் மட்டும்
விலக்கி வைக்கப்படுகிறார்கள்)

அவற்றை இறுதி செய்து,
விழா அழைப்பிதழ்
விரைவில் வெளிவரும்.

விழா வருகையை உறுதி செய்ய 
இவ்வலைப்பக்கத்தின் மேல்வலது மூலையில் உள்ள
தகவல் பெட்டியைச் சொடுக்கி,
முன்பதிவு செய்திட வேண்டும்.
அந்த முன்பதிவுப் படிவத்தை,
திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில்
சென்று பதிவிறக்கியும்,
உடன் பதிவு செய்திட வேண்டுகிறோம்.

அதற்காக தினமும் உழைக்கும்
நமது வலைச்சித்தருக்கு நன்றி.

“வலைப்பதிவர் திருவிழா-2015“
அனைத்துத் தொடர்புகளுக்குமான மின்னஞ்சல்-

உஸ்... அப்பாடா!
இப்பவே கண்ணக் கட்டுதே!
அம்புட்டு தாங்க...

விழாவிற்கு வருக வருக என
அன்புடன் வரவேற்பது,
புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வலைப்பதிவர்கள்,

கணினித் தமிழ்ச்சங்கம்.

75 கருத்துகள்:

  1. தங்களுடன் கலந்தோசித்து விட்டு, முன்பதிவுப் படிவம் விரைவில்...

    இந்தமுறை 500 பேர்கள் வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. No.I strongly disagree.
      It could be 5000 if only DD decides to be the backbone.

      subbu thatha.
      www.vazhvuneri.blogspot.com
      www.movieraghas.blogspot.com
      www.Sury-healthiswealth.blogspot.com
      www.subbuthatha.blogspot.com
      www.subbuthatha72.blogspot.com
      www.subbuthathacomments.blogspot.com
      www.menakasury.blogspot.com

      நீக்கு
    2. அதெல்லாமில்லை அய்யா.
      300 லட்சியம்,300 நிச்சயம்.
      அதுதான் எங்கள் திட்டமிடல்

      நீக்கு
    3. தகவல் பதிவு செய்வதற்கு வாழிமுறைகளை அறியத் தாருங்கள்

      நீக்கு
  2. விளக்கமான அறிவிப்பு! விழா சிறக்க வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்தும் வழிகாட்டுதலும் இருந்தால் சிறப்பாக நடக்கும் அய்யா

      நீக்கு
  3. கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. விருதுகள் பெறுவதில் புதுக்கோட்டைப் பதிவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அவர்களுக்கானபோட்டி தொடர்பானவற்றிற்கு புதுக்கோட்டையைச் சார்ந்தவர்களைத் தவிர பிறரை நடுவராகக் கொள்ளலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நீங்கள் ஆங்கிலமறிந்தவர்
      சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்

      நீக்கு
    2. புதுக்கோட்டைப் பதிவர்களும் பரிசு பெறத் தகுதியானவர்களே.

      நீக்கு
  5. ஆகா
    பதிவர் விழா இப்போதே களை கட்டத் தொடங்கி விட்டது ஐயா
    விழாவிற்கு வருவோரின் கருத்தரிந்தே விருதுகள் வழங்கப்படும் பொழுது,
    புதுக்கோட்டை மாவட்டத்தை மட்டும் ஒதுக்கி வைப்பது சரியல்ல என்று எண்ணுகின்றேன் ஐயா
    மறுபரிசீலனை செய்ய அன்போடு வேண்டுகிறேன்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா நாங்களே நடத்தி எங்களுக்கே விருது கொடுக்க வேண்டான்னு ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்....அண்ணா

      நீக்கு
    2. தங்கை கீதா சரியாகவே சொல்லியிருக்கிறார்
      தங்களன்பிற்கு நன்றி.

      நீக்கு
  6. சிறப்பான திட்டமிடல். விழா சிறப்புற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா இவ்ளோ பணியிலும் அருமையாக எழுதியுள்ளீர்கள்....இதே கனவா வருது தூக்கம் வரல அண்ணா..சிறப்பாக நடத்தனும்னு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பதிவர் சந்திப்பின் போது எனக்கு இருந்த ஆவலை இன்று தங்களிடம் காண்கிறேன் தோழி.
      விழா சிறக்க வாழ்த்துகள்.

      நீக்கு
    2. கூட்டத்தில் தேதி முடிவான அடுத்த நிமிடமே முதல் வரவாக ரூ.2,000 நன்கொடை தந்த தங்கை கீதாவின் ஈடுபாடு , எல்லாரையும் செயல்பட வைக்கிறது.
      அப்புறம் தங்கை சசி பணிகளிலும் உதவலலாம்

      நீக்கு
    3. கீத்ஸ்... நான் கை தட்டற சத்தம் கேக்குதா உனக்கு-.? இதே குன்றாத ஆர்வத்துடன் செயல்பட்டு கலக்குங்க. நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  8. சிறப்பாக நடக்கும் ஐயா....ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...!!!!

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் திருவிழா- 2015 சம்பந்தமான உங்களது தகவல் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். விழாவிற்கு நன்கொடை அளிப்பது சம்பந்தமான தகவலையும் சீக்கிரம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அண்ணா! புதுக்கோட்டை சந்திப்பு புதுவிதமா இருக்கும் போல... ஆர்வமுடன் காத்திருக்கிறோம். வாழ்த்துகள் அண்ணா.
    ( உன் வாழ்த்தைச் சொல்லு இருக்கிற வேலையை பகிர்ந்து வந்து செய்து கொடுக்காம வாழ்த்தாம் வாழ்த்து... மைன்ட் வாய்ஸ் கேட்கிறதுங்கண்ணா.)

    பதிலளிநீக்கு
  11. எதிலும் புதுமை செய்வோம் அய்யா!!!

    பதிலளிநீக்கு
  12. மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதை அறிய முடிகின்றது! நீங்களே நடத்தினாலும் உங்களுக்கும் விருதுகள் பெறும் தகுதிகள் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்! மற்ற மாவட்டங்களின் சார்பாக அவர்கள் தேர்ந்தெடுத்து விருதுகள் பெறுவதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை! பரீசிலீக்கலாம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே.
      இதுவே எங்கள் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நண்பர்களின் கருத்து. தங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி.

      நீக்கு
  13. மகிழ்ச்சியான செய்தி. விழா சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா, 23ஆம் தேதி மட்டுமல்ல, 11-10அன்றும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறோம்.

      நீக்கு
  14. அழகான திட்டமிடல் கண்டு,
    விழா இனிதே சிறக்கும்என்று
    நானும் மனதில் நம்புகிறேன் நன்று!

    வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை வைத்தது கண்டு,
      நல்லிதய வாழ்த்தேற்றுக் கொண்டு,
      நாங்களும் மகிழ்கிறோம் இன்று.
      நாளும் தொடர்வோம்..இத்தொண்டு.

      நீக்கு
  15. விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரியின் வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் வர வாய்ப்பில்லை எனினும், விழாவில் தங்கள் உழைப்பும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மின்னஞ்சலில் தாஙகள் வர இயலுமா? ஓர் உதவிக்காக...(நிச்சயமாக அது பண உதவியல்ல)

      நீக்கு
  16. வணக்கம்,
    நல்ல திட்டமிடல்,,
    விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தமிழ்நாடு தானே? அவசியம் விழாவில் பங்கேற்க வேண்டுகிறேன் சகோதரி.

      நீக்கு
  17. திருவிளையாடல் காலத்திலிருந்தே இருக்கும் ஒரு கேள்வி!!!

    ஒரு நாள் போதுமா!!!

    வழக்கமா கேள்விக்கு கேள்விக்குறி போட்டுதான் பாத்திருக்கோம். இது என்ன புதுசா ஆச்சரிய குறி ? அப்டின்னு என்னோட கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வி கேக்காம யோசிங்க அய்யா..

    இத்தனை திட்டமிடல்களுடன் ஒரு இனிய சந்திப்பு நிகழ ஒரு நாள் போதுமா !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்கள் வேறு! விட்டால் நானே மணிக்கணக்கில் அல்ல நாள்கணக்கில் பேசுகிறவன்தான். எனினும், திருக்குறள் போலப் பேசவும், அய்க்கூ போல விழாநடத்தியும் அனுபவம் உள்ளவன். என்னைப்போல சில பதின்மர் இங்குளர். என்னிலும் செயல்வேக மிக்க இளைஞர் வேறு... சொல்ல வேண்டுமா? வந்து பாருங்கள்.

      நீக்கு
  18. எதிர்பார்ப்பைவிட பங்கேற்கும் வலைப் பதிவர் எண்ணிக்கை அதிகரிக்கும் போலுள்ளது. மகிழ்ச்சி.
    பதிவுப்படிவம் விரைந்தால் முன்பதிவர் எண்ணிக்கையினை ஓரளவு கணித்துத் தங்குமிடம், உணவு, அரங்க இருக்கை, தேநீர், முதலியன பற்றித் திட்டமிட ஏதுவாகும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்டோபர் 1ஆம் தேதிவரை விழாப்படிவத்தில் பங்கேற்பாளராகப் பதிவு செய்தால் போதுமே? அதன்பிறகு? இருக்கவே இருக்கிறது அவசரத்திற்கு உதவும் உப்புமாதான் வேறென்ன?

      நீக்கு
  19. அழகான திட்டமிடல்...
    ஆஹா.... விருதுகள்...
    கலக்கல் நிகழ்வாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதோடு உங்கள் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும் உண்டல்லவா? (அது தொடர்பாக உங்களிடம் எனது மன்னிப்பையும் தனிப்படக் கோருகிறேன்)

      நீக்கு
  20. மகிழ்ச்சியான செய்தி. விழா சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா. இதென்ன இப்படி ஒரு அவநம்பிக்கையான பெயர்? யாதும் ஊரே யாவரும் கேளிர் நண்பா... நாங்கள் சொந்த ஊரிலேயே அகதிகள் பலரைப் பார்த்திருக்கிறோம்..வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  21. பதிவர் விருதுகள்,விழாவிற்கு வருவோரில் இருந்தே வருவோரின் கருத்தறிந்தே வழங்கப்படும் என்று சொல்லும் போது புதுவை பதிவர்களை அதிலிருந்து விலக்குவது சரி அல்ல. இது என் கருத்து...

    ஆசிரிய பணிபுரியும் பலர் மிக சிறப்பாக பதிவுகளை எழுதி வருகிறார்கள் அவர்களுக்கென ஒரு தனிப்பட்ட விருதுகள் வழங்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறு திருத்தம் புதுவை என்பது பாண்டிச்சேரி (புதுச்சேரி). நமது ஊர் புதுகை (புதுக்கோட்டை). அடுத்து ஒரு பெரும் திருத்தம். இதுவே முன்மொழிவுதான்... முடிவுகள் அழைப்பிதழில். எனினும் எங்கள் தியாகிகள் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தீர்ப்புகள் திருத்தப் படலாம்..

      நீக்கு
  22. நமது பாராட்டுக்குரிய இருபெரும் முன்னோடிப் பதிவர்கள், விழா மேடையில் பாராட்டுடன் கூடிய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுவர்
    (இது சஸ்பென்ஸ்) ///// பேசிட்டா அது எப்புடி மௌனவிரதம் ஆகும்..? ஹி... ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியும்படிப் பேசினாத்தானே? இரண்டுபேர் மூன்றுபேராகவும் இருக்கலாம்... அது மாவட்டச் செயல்வீரர்களின் முடிவுக்கு விடப்படுகிறது. (ஆமா எத்தனைச் சென்னை நண்பர்கள் பயணச் சீட்டு முன்பதிவு செஞ்சிருக்கீங்க... சீக்கிரம் சொல்லுங்க வாத்தியாரய்யா.)

      நீக்கு
  23. மிக அழகாக நீங்கள் திட்டமிட்டதை மிகத் தெளிவாக உரைத்து விட்டீர்கள். முன்பதிவுப் படிவத்தை டிடி வெளியிடும் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். நிரப்பி அனுப்ப.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பதிவுப் படிவத்தையும் வங்கிக்கணக்கு எண்ணையும் நாளை நம் வலைச்சித்தர் வெளியிடுவார்.. தங்கள் வரவு நல்“வரவு“ம்ஆகுக.

      நீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு வணக்கம்.
      அவரவருக்கும் எவ்வளவு கவலைகள் இருந்தால் இத்தனை கோவில்களுக்குப் போவார்கள்? இந்த உளவியல் முக்கியம். நாம் அந்தக் கவலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் சாமிப்பண்டாரம் என்று சொல்வது சரியா? கொசு உற்பத்தியாகும் சாக்கடையை ஒழிக்க முயற்சியெடுக்காமல், கொசுமருந்து அடிப்பது கொசுமருந்து விற்பனை உயர்வுக்கன்றி வேறெதற்கு உதவும்? நிற்க. பேச்சாளராக இங்க ஒருத்தன் இருப்பதையே தாங்க முடியவில்லை என்கிறார்கள் எனது நண்பர்கள்... செயலாளர்கள்தான் தேவை. என்னைப் பேச்சாளராக அறிமுகப்படுத்திய டிவியை நான் அவ்வப்போது சபித்துக் கொண்டுதான் எழுதத் தொடங்கினேன். உங்களுக்கும் நகைச்சுவையாக எழுதவரும் போலத் தெரிகிறதே! நிறைய எழுதுங்கள் நண்பா..தொடர்பிற்கு நன்றி.

      நீக்கு
    2. திரு முத்துநிலவன்:
      “வலைப்பதிவர் திருவிழா-2015“ வெற்றி பெறும். என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். எனக்கு இது மாதிரி தமிழ் விழாக்களுக்கு வரவேண்டும் என்ற ஆசை நிறையவே உண்டு!
      முதலில் நான் எழுத நினைத்தது.:

      உங்கள் பின்னூட்டம் நான் எழுதியுள்ள ஒரு வார்த்தையின் அர்த்தம் உங்களை வேறாக நினைத்துக்கொள்ள வைத்ததாக தெரிகிறது! அதற்கான விளக்கம்.. நாங்கள் ஒய்வு பெற்றபின் தமிழ்நாடு வருவோம். மனைவிக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; ஆனால், எந்த ஜாதி மத ஜாதி நம்பிக்கை கிடையாது; எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சென்று ரசிப்பார். அதன் கலை அழகை அந்த கால கலை, மனித ஆற்றல், மனிதனின் உழைப்பைப் பார்த்து வியப்பார். பார்த்து ரசிப்பார். நானும் கூட எல்லா இடங்களுக்கும் போயாக வேண்டும்; அதைவிட எனக்கு என்ன பெரிய வேலை? "நீங்கள் எழுதியுள்ள படி அவர் கவலைக்காக கோவிலுக்கு செல்பவர் அல்ல!" எது தேவையை அது வீட்டில் கிடைக்கும். அப்படி வேண்டும் என்றால் அவர்கள் மனதுக்குள்ளே வேண்டிக்கொள்வார். அதோடு சரி! நான் சொல்ல வந்தது இது தான். நான் முதலில் "தமாஷாக எழுதிய அந்த ஒரு சொல்" உங்களுக்கு வேறு அர்த்தத்தை கொடுத்து இருக்கலாம். என்னை மன்னிக்க வேண்டும். நான் எழுதுவதை விட நன்றாக பேசுவேன்...கட்டாம் ஒரு முறை ஒரு “வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டு பேசுவேன்! கேட்க நீங்கள் தயார் என்றால் நான் பேச ரெடி!
      __________________
      பி.கு.: மேற் சொன்ன காரணத்தால் நான் முதலில் இட்ட பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன். நன்றி!

      நீக்கு
  25. பதில்கள்
    1. அவசியம் வரணும் எட்வின். வலைப்பகிர்வுக்கும் நன்றி.
      பிறகு செல்பேசியில் பேசுவேன்

      நீக்கு
  26. ஏற்பாடுகள் வாய் பிளக்க வைக்கிறது/. அதிர்கிறது வலைப் பதிவுலகம். இதுவரை கண்டிராத வலைப்பதிவர் திருவிழா கண்முண்ணே விரிகிறது. புதுக்கோட்டை பதிவர்களுக்கும் சேர்த்தே விருதுகள் வழங்கப் படவேண்டும்.
    உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு காரணமாக 08.08.2015 அன்று வர இயலவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிமுரளி.
      உங்கள் உதவிகள் அவசியம் தேவை
      பின்னர் அழைப்பேன்.

      நீக்கு
  27. எவ்வளவு திட்டமிடுதல்! எவ்வளவு ஈடுபாடு! கலக்குகிறீர்கள் அண்ணா , நீங்களும் புதுகை சொந்தங்களும் .
    சிறந்த பதிவர்கள் பலர் புதுகையில் இருக்க அவர்களுக்கு விருதுகள் இல்லையா??!!

    விழா சிறப்பாக நடக்கும் என்பதில் நெல் முனையளவும் ஐயமில்லை! உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. எனக்கான வலைப்பதிவைத் தொடங்கி ஒரு வருடம் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் இது போன்ற சந்திப்புகளின் வழி பல மூத்த வலைப்பதிவர்கள் வழி பெறப்படும் ஆலோசனைகள் என்னையும், வலைப்பக்கத்தையும் செழுமையாக்கிக் கொள்ள உதவும் என்ற போதும் வாழ்வியல் அதற்கான வாசலை என் போன்றவர்களுக்கு அடைத்தே வைத்திருக்கிறது. நல்ல திட்டமிடலுடன் தொடங்கும் விழா சிறப்பாய் நடந்தேற வாழ்த்துகள். வலைப்பதிவர் கையேட்டை மின்னிதழாகவோ அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளும் படியோ தந்தால் மற்றவர்களுக்கும் அது பயன்படும் என நினைக்கிறேன். சாத்தியமிருப்பின் பரிசீலியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல யோசனைதான்.
      இப்போது வலைப்பதிவர்களை வரவழைக்கும் வேலைதான் நடக்கிறது.... நீங்களும் பகிர்ந்து உதவலாமே?

      நீக்கு
  29. அடடே பிரமாதம்..திட்டமிடலே வெகு சிறப்பாக இருக்கிறது.விழா பிரம்மாண்டமாக நடக்கும் என்பதில் ஐயமில்லை..

    பதிலளிநீக்கு
  30. திட்டமிடல் நிறைவாக இருக்கிறது .... புதுக்கோட்டை பதிவர்கள்களை பரிசிலிருந்து விலக்கி வைத்திருப்பது சங்கடமாக இருந்தாலும், எவ்வித பிரச்சினைக்கும் வழி வகுக்காது... விழா குழுவினருக்கு என்று பிரத்யோகமாக நினைவு பரிசு தயார் செய்து வழங்கலாம் என்பது என்னோட விருப்பம் ... சென்னையில் அவ்வாறு வழங்கினோம் ... கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் அய்யா ....

    பதிலளிநீக்கு
  31. வலைப்பதிவர் விழாவுக்காக கடுமையாக உழைக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி! விழா இனிதே நடக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்! அழைப்பிதழை தனபாலன் சாரின் வழிகாட்டுதலில் என் பக்கத்தில் இணைத்துவிட்டேன். என் பங்குக்கு என்னால் முடிந்த நன்கொடையை விரைவில் அனுப்புவேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  32. ஐயா தங்களின்முகவரி கிடைக்குமா,,?
    நூல் அனுப்ப வேண்டும்.

    பதிலளிநீக்கு
  33. எவ்வளவு திட்டமிடல்கள்.. எவ்வளவு முன்னேற்பாடுகள்.. புதுக்கோட்டைப் பதிவர்களின் செயலாக்கமும் ஈடுபாடும் வியக்கவைக்கின்றன. அனைவருக்கும் அன்பான பாராட்டுகள். விழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  34. மீ கமிங். ஆவலோடு வெயிட்டிங்..! விண்ணப்ப படிவத்தை டிடி வெளியிட்ட அன்றே பூர்த்தி செய்து அனுப்பிவிட்டேன்.. :)

    பதிலளிநீக்கு
  35. வாழ்த்துக்கள், அன்பர்களே புதுக்கோட்டையில் குறைந்தது 3 ஆடுகளும் 20 30 கோழிகளும் உயிரைவிட்டு, கோழிகளின் உறவினர்கள் சேர்ந்து விட்ட 500 முட்டைகளையும், சைவப்பிரியர்களுக்கான காய்கறி உணவுகளும், உற்சாகப்பிரியர்களுக்கான கூல்டிரிங்ஸ் ஏற்பாடுகளையும் சேர்த்தே தடாபுடாலாக நடைபெறுவதாக ஒரு ரகசிய செய்தி... உண்மையா?

    பதிலளிநீக்கு
  36. விளக்கமான அறிவிப்புக்கு... நன்றியும்! வாழ்த்துக்களும்.....விழாவுக்கு உழைத்துக் கொண்டு இருப்பவர்களை விருதுக்கு ஒதுக்கி வைத்திருப்பது மன வருத்தத் ஏற்படுத்துகிறது. விழாவுக்கு உழைத்த அனைவரையும் கௌரவிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  37. சிறப்பான விருதுகள்! நல்ல ஏற்பாடு! மிக்க மகிழ்ச்சி ஐயா! அறிவிப்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு