எல்லாச் சாமியும் ஒண்ணு தான்! - கவிதை

ஒன்னை ஒன்னு இழுத்துக்கிட்டு
                 
உருண்டக் கிரகம் போகுது - இதை
உணராத மனுசக் கூட்டம்
                   
உருண்டு பெரண்டு சாகுது!

ரம்சான் பண்டிகை பிரியாணி
                 
ரத்தினம் வீடு போகுது! அந்த
ராமு வீட்டுப் பொங்கச் சோறு
                   
ராவுத்தர் வீடு போகுது! ----(ஒன்னை…)

சாகுலோட சங்கரனும்
                 
ஜானும் போறான் பாருங்க ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
                 
சார்ந்திருந்தா போறும்ங்க!

கையக் கோத்து திரியிது பார்
                 
கள்ளமில்லாப் பிள்ளைக பின்ன
பையப் பைய பிரிச்சு வச்ச
                 
பாவிக யார் சொல்லுங்க?  ---(ஒன்னை…)

நாகூர் ஆண்டவர் மண்டபத்துல
                 
நல்லக்கண்ணு கிடக்குது சீக்கு
போகணுமின்னு வேண்டி அந்த
                 
வேண்டுதலும் நடக்குது!

அம்மைப் பாத்த கொடுமை போக
                 
அபுலுகலாம் பொஞ்சாதி மாரி
அம்மனுக்கு நேந்துக் கிட்டு
                 
உப்புக்கடன் செஞ்சாக!   -----(ஒன்னை…)

இருக்கும் நொம்பலம் தாங்கலய்யா
                 
எந்தச் சாமி தீர்த்தது? – அட
எது வாச்சும் செய்யட்டுமேனு
                 
ல்லாத்தையும் பார்த்தது!

ஏழ பாழ சனங்களுக்கு
               
எல்லாச்சாமியும் ஒன்னுதான் - இதுல
ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
               
ஏவன்டா? அவன் மண்ணுதான்.!-(ஒன்னை…)  

எனது கவிதைத் தொகுப்பு -
புதிய மரபுகள்” -- சிவகங்கை கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடு-1993

(1995முதல் இன்று வரை, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்ஏ–தமிழ் பாடநூலாக இருக்கும் எனது கவிதைத் தொகுப்பிலிருந்து)

27 கருத்துகள்:

  1. எல்லாக் கடவுளும் ஒன்று தான்!
    நல்லாப் படித்தவங்க நன்றே சொன்னாங்க
    இன்றும்
    எல்லாச் சாமியும் ஒண்ணு தான்!
    சொல்லாலே சொல்லி வைத்தவர் தான்
    வல்லவர் நா.முத்துநிலவன் தன் பாவிலே
    வெல்வோம் மதவொற்றுமை பேணி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, நீங்கள் அறிமுகப்படுத்திய வலைத்திரட்டியில் சாதாரணமாகச் சேர்ந்துவிட முடியாது போலுள்ளதே! கணினியில் கத்துக்குட்டியான எனக்கு முடியல சாமீ! உங்கள் அன்பில் சேர மீண்டும் முயல்கிறேன். நன்றி

      நீக்கு
  2. அருமையான கவிதை. சந்த நயத்தோடு அழகிய பாடலாக படிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிற கவிதை.....
    சின்னப் பிள்ளைகள் படிப்பது போன்ற கவிதையில் அருமையான கருத்துக்கள்....
    தொடர்க உமது கவிதைப் பணி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரீ.
      பாடக்கூடிய பாடல்தான். சின்னப்பிள்ளைகளுக்குப் புரிவது போல எழுதுவது மிகச் சிரமம். அதற்கு மிகத்திறமை வேண்டும். தமிழில் ஔவையார் ஆத்திசூடி எழுதியதெல்லாம் குழந்தைப்பாடலே அல்ல என்பது என் கருத்து. அ-அறஞ்செயவிரும்பு... எந்தக் குழந்தைக்கு அறம் என்றால் புரியும்? நமது பெரும்பாலான “குழந்தைப் பாடல்கள்” குழந்தைகளுக்கு எனும் பெயரில் பெரியவர்களுக்கானவை!

      நீக்கு
  3. இன்றிருக்கும் இயல்பான உலக நடப்பு..
    யாரோ ஓரிருவர் மதம்பிடித்து செய்யும் செயல்களால்
    சகோதர சகோதரிகளாய் இருப்பவர்களுக்கும்
    தொல்லையே..
    அருமையான கவியாக்கம் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மகேந்திரன், தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      நீக்கு
  4. பல்கலைக்கழகங்களிலும் நல்ல கவிதையை இனம் கண்டுகொள்கிறார்கள் என்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். தங்களைப் போலும் பெரியவர்கள் காட்டும் அன்பில் கிடைக்கும் ஊக்கம், நிறைய எழுதத் தூண்டுகிறது. தங்களின் சிறுகதைத் தொகுப்பு நன்றாகப் போகிறதா அய்யா.?

      நீக்கு
  5. மனிதம் பேண வேண்டி உதித்த மதங்கள்
    கொல்லும் உயிரை குலைக்கும் ஒற்றுமை
    எனில் அதை ஏன் ஆண்டவன் ஒன்றே
    என்றும் உணராமல் நாட்டின் அமைதியையும்
    ஒழுங்கு முறைகளையும் நெறிப்படுத்தாமல்
    மாறாக நடக்க உதவுவது வருந்த தக்கதே.

    அருமையான வரிகள் மனம் கவர்ந்தது. நல்லறிவு புகட்டும் வகையில் அமைந்ததும் மகிழ்ச்சியே.

    நன்றி வாழ்க வளமுடன்......!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதங்களின் வரலாற்றுத் தொடக்கமெல்லாம் அன்புதான். ஆனால் அதை வளர்க்க, அதன் பின்திரண்டவர்கள் அடுத்த மதத்து ரத்தத்தில்தான் வளர்ததிருக்கிறார்கள். இதுவரையான பெரும் போர்களில் இறந்தவர்களை விடவும், மதச்சண்டை கொண்ட பலியே அதிகம்! தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரீ.

      நீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள் ஐயா
    அரசியலால்தான்
    சாமிகளுக்கு பிரச்சினை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரண மக்கள் சாமியைக் கும்பிடுவதோடு சரி - அது எந்தச் சாமியானாலும் அவர்கள் வேறுபடுவதில்லை.ஆனால், இந்த அரசியல்தான் எல்லாவற்றையும் கெடுத்ததுபோல, சாமிகளையும் விட்டுவைக்கவிலலை. பாவம் சாமிகள்!

      நீக்கு
  7. மத நல்லிணக்கத்தோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . சுய லாபங்களுக்காக சிலரின் சதிதான் பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுகிறது. அற்புதமாக சொல்லி விட்டீர்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்துவீட்டுக்காரர் எந்த மதம் சாதியென்றாலும் அண்ணே, அக்கா என்று பழகியவன் நம் பழந்தமிழன். இப்போதும் அதில் பெரிய மாற்றமில்லை. மதத்தலைவர்-சாதித் தலைவர்கள் தான் வேறுபாடுகளை ஊதிக்குளிர் காய்கிறார்கள். நன்றி முரளி.

      நீக்கு
  8. ஏழ பாழ சனங்களுக்கு
    எல்லாச்சாமியும் ஒன்னுதான் - இதுல
    ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
    ஏவன்டா? அவன் மண்ணுதான்.!//

    நாம என்ங்கையா சதி மதம் பார்க்கிறோம்...ஒத்துமையாதன இருக்கோம்...எல்லாம் அந்த அரசியல் புகுவதால் தான் நாட்டில் அமைதி குலைகிறது! அந்த அரசியலை நம்பி விழும் ஏமாந்த மக்களாலதானே!!

    நல்ல அருமையான பகிர்வு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. மக்கள் தொடர்ந்து ஏமாற மாடடார்கள். நாமும் அவர்கள் தொடர்ந்து ஏமாற விட்டுவிடக் கூடாதில்லையா?

      நீக்கு
  9. சாதாரண மக்கள் எல்லோரும் ஒன்றாய்த் தான் வாழ்கின்றனர் என்று சொல்லும் அழகிய கவிதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டியதோடு, சத்தம்போடாமல் பகிரவும் செய்த உங்களின் அன்பிற்கு என் அகம்பணிந்த நன்றிகலந்த வணக்கம் சகோதரீ.

      நீக்கு
  10. கலக்குறிங்க அண்ணா!
    ரொம்ப பெருமையா இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் வார்த்தைகளின் உள்ளீடாய் அன்பு தோய்ந்திருக்கும் போது, அதன் பலமே தனீதான்பா. (நன்றி சொன்னா நீ அடிப்பே..ல்ல?) -- அடுத்து உன் கலக்கலை எதிர்பார்த்திருக்கும் அண்ணன்.

      நீக்கு
  11. அருமையான கவி ஐயா.

    உங்கள் பட்டிமன்ற பேச்சுக்கு நான் பெரிய விசிறி :). முதல் முறை இங்கு வருகிறேன். தங்கள் தளம் கண்டு அறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தொடர்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  12. எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு அருமையான கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  13. ஐயாவிற்கு அன்பு வணக்கம்
    தங்களின் வரிகளினூடே பயணித்த என் மனம் கவிதையின் கருத்துக்களில் கலந்து கரையேர மறுக்கிறது ஐயா. அற்புதமான சந்த நயமும் சேர்ந்து கொள்ள கவிதை கலக்குகிறது. பாடநூலாக இருக்கும் கவிதையல்லவா! அப்படி தான் இருக்கும். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  14. படிக்கிற பொழுதே பாடத் தூண்டும் வரிகள்.. அருமை அய்யா
    ஜோர் ..
    கொஞ்சம் உங்கள் குரலில் பாடி பாட்காஸ்ட் செய்தால் நல்லா இருக்கும்...

    பதிலளிநீக்கு
  15. ஏழ பாழ சனங்களுக்கு
    எல்லாச்சாமியும் ஒன்னுதான் - இதுல
    ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
    ஏவன்டா?



    wonder full lines.ஆம் எழைகளுக்கு என்றுமே ஒரே சாமி தான். பல இடங்களில் நான் கண்டிருக்கிறேன். பணம் ஏற ஏற மதத்தின் பால் உள்ள பற்றும் ஏறி விடுகிறது சில மனிதர்களுக்கு. சிந்திக்க வைத்த கவிதை ஐயா!

    பதிலளிநீக்கு
  16. கள்ளமில்லா இளவயசு நட்பு , அதன் பிறகும் இயல்பான நட்பும் ஏதோ ஒரு சுய நலவாதியால் தடுமாற வைக்கப்படுகிறது... எக்காலத்தும் பொருந்தும் அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  17. வணக்கம

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி

    http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு