“தமிழ் இனிது” -நூல் பற்றி, வானொலியில் கலந்துரையாடல், பொள்ளாச்சி, கோவை நிகழ்ச்சிகள்

திருச்சி வானொலி, வானவில் பண்பலையில்

தமிழ் இனிதுநூல் பற்றிய கலந்துரையாடல்

வரும் 25-8-2024 ஞாயிறு காலை 10மணி முதல் 

ஒரு மணிநேரம் ஒலிபரப்பாகிறது 

(நினைவுக்கு :மங்க்கி பாத்நிகழ்ச்சிக்கு முன்பாக!

இந்நிகழ்வில்

திருச்சி வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர்

திருமிகு அடைக்கலராஜ் அவர்களும்

திருச்சி- வட்டாரக் கல்வி அலுவலர்

திருமிகு இரா.ஜெயலட்சுமி அவர்களும்

என்னுடன் கலகலப்பாகக் கேள்விகள் கேட்டு

சுவையான உரையாடலை நடத்தியிருக்கிறார்கள்.

(இருவருமே தொடர் வாசிப்பாளர்கள் என்பது 

அவர்களின் கேள்விகளால் விளங்கியது!)  

உலகம் முழுவதுமிருந்து

இணைய இணைப்பு வழியாக

வானொலி நிகழ்வைக் கேட்கலாம்

https://liveradios.in/air-trichy-fm-rainbow.html 

நண்பர்கள், தம் நண்பர்களுடன் கேட்டு

கருத்துரைக்க வேண்டுகிறேன்.

--------------------------------------------

கடந்த 18-8-2024 அன்று

பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அய்யா அவர்களை 

பொள்ளாச்சியில் அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன்.

தமிழ் இனிதுநூலுக்கு ஆழமானதொரு

முன்னுரை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து

நூலின் இரண்டு படிகளை வழங்கி, வணங்கி மகிழ்ந்தேன் -

91வயதிலும் அவர்களின் உற்சாகம் நெகிழ வைத்தது! 

---------------------------------------  

18-8-2024 ஞாயிறு காலை 10மணியளவில்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்நிகழ்வில்

நமதுதமிழ் இனிதுநூல் அறிமுகம் நடந்தது.


                                                       
இந்நிகழ்வில் எனது ஏற்புரை - காணொலி 

பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிர்வாகிகள் 

தலைவர் கவிஞர் அம்சப்பிரியா,

செயலர் கவிஞர் பூபாலன் 

ஆகிய இனிய நண்பர்களுக்கு

நமது புதுக்கோட்டை வீதி சார்பாக நன்றி தெரிவித்தேன்.

------------------------------ 

அதே 18-8-2024 மாலை 6மணியளவில்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்

கோவை மாவட்டம் - கிளைகளின் சார்பாக

தமிழ் இனிதுநூல் அறிமுகவிழா நடந்தது

செந்தலையார் வெளியிட நூலைப் பெற்றுக் கொள்பவர்

கோவை மாவட்ட தமுஎகச தலைவர் தோழர் மணி அவர்கள்

அண்ணன் செந்தலை ந.கவுதமன் முன்னிலையில்

தமுஎகச கோவை மாவட்டச் செயலர் எழுத்தாளர், 

வழக்குரைஞர் அ.கரீம் அவர்கள் சிறப்புச் செய்கிறார்

நூலறிமுகம் செய்த பேரா.முனைவர் மு.அன்பரசி அவர்கள். 

எனது ஏற்புரை - காணொலி இணைப்பு-

https://youtu.be/cRu9s7HUhQg?si=FbF-0hx7Gi29VQEN

 

மாவட்டத்தலைவர் தோழர்  மணி,

மாவட்டச் செயலர் தோழர் .கரீம் உள்ளிட்ட

நிர்வாகியர்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

கல்லூரிக்காலத்தில் முத்துபாஸ்கரனாக 

இருந்த என்னை,

 “முத்துநிலவன்ஆக்கிய அண்ணன்

தமிழறிஞர் செந்தலை புலவர் .கவுதமன் அவர்கள்

இந்நிகழ்வில் கலந்து கொண்டு

சிறப்புரையாற்றியது நான் பெற்ற பேறு!

-------------------------------

வானொலி நிகழ்வையும்

பொள்ளாச்சி, கோவை நிகழ்வுகளின்

காணொலிகளையும் பார்த்து,

கருத்துரைக்கும்படி

நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

--------------------------------   

இனி

கடந்த நமது பதிவில் குறிப்பிட்ட

புதுக்கோட்டை விழாப் படங்கள்









“தமிழ் இனிது” நூல் வெளியீட்டு விழாக்கள் – நண்பர்கள் வருக!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 

வீதி -கலை இலக்கியக் கழகம், 

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் 

இணைந்து புதுக்கோட்டையில் நடத்தும்

நமது நூல் வெளியீட்டு விழா!

16-08-2024 - புதுக்கோட்டை

18-08-2024 காலை- பொள்ளாச்சி

18-08-2024 - மாலை - கோவை

நகரங்களில் உள்ள

நண்பர்கள் வருக!

உற்றோர் -அருகில் இருப்போர் - நேரில் வருக

மற்றோர் தம் நண்பர்களுக்குப் பகிர்க!

நூல் படித்து -வெற்றுப் புகழ்ச்சியாக அல்லாமல், 

பொருள் பொதிந்த சொற்களால் விமரிசனம் செய்து அனுப்புக

muthunilavanpdk@gmail.com எனும்

எனது மின்னஞ்சலுக்கு  அனுப்பி,

தகவல் தர வேண்டுகிறேன்

எனது செல்பேசி எண் - 91 94431 93293

விழாக்களில் கலந்து கொள்ள இசைவுதந்த, 

நடத்துகின்ற, வருகை தருகின்ற

அறிஞர்கள், தோழர்கள், நண்பர்களுக்கு 

எனது இதயம் கலந்த நன்றி!



 


---------------------------------------- 

பொள்ளாச்சி - 18-08-2024 ஞாயிறு- முற்பகல்

------------------------------------------

கோவை - 18-08-2024 -ஞாயிறு - பிற்பகல்

------------------------------------------------------------

புதுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை 

நகரங்களில்  உள்ளோர் நேரில் வருகை தருக. 

மற்ற நண்பர்கள் 

20% கழிவு போக, ரூ.130க்கு

நூல் பிரதிகள் பெற்றுக் கொள்ள தொடர்பு எண்கள் –

சென்னை – திரு இன்பராஜன் – +91 74012 96562

புதுக்கோட்டை – திரு அஜ்மீர் - +91 98420 18544

அஞ்சல் செலிவின்றி ஆங்காங்கே உள்ள

இந்து-தமிழ் திசை நூல்விற்பனை நிலையங்களில் 

பெற்றுக் கொள்ள திரு இன்பராஜ் அவர்களிடம்

விவரம் கேட்டுக் கொள்ளலாம்.

----------------------

முனைவர் மகா.சுந்தர் அவர்களின்

 “தமிழ்இனிது” நூல் அறிமுகம் காண,

“தென்றல்“ தமிழ் வலைக்காட்சி இணைப்பு-

https://www.youtube.com/watch?v=MsKrFXmaeUQ

--------------------------------

இனிமைத் தமிழ்மொழி எமது -எமக்கு

                         இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது

கனியைப் பிழிந்திட்ட சாறு -எங்கள் 

                        கதியில் உயர்ந்திட யாம் பெற்ற பேறு 

தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் 

                              தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை 

நனியுண்டு நனியுண்டு காதல்-நல்ல 

                     தமிழர்கள் யாவர்க்கு மேதமிழ் மீதில்!

-பாரதி தாசன்

------------------------------------------

“தமிழ் இனிது” பதிப்புரை, என்னுரையுடன், நூல் பெறும் விவரமும்

வணக்கம்

ஜூலை 3முதல் 15ஆம் தேதிவரையான எனது அமெரிக்கப் பயணம் அமெரிக்கையாக இருந்தது!  

(தமிழில் உள்ள இந்தச் சொல்லே  தனித்துவமான அமெரிக்கப் பண்பைச் சொல்லுவதாக உள்ளது! இது பற்றித் தனியாக ஒரு சொல்லாய்வு செய்யலாம் போல! – செய்வோம்!)

அமெரிக்கப் பயணம் பற்றி நாலைந்து இயல்கள் (அத்தியாயம்) எழுத வேண்டும். எழுதுவேன்.  பயணத்தின்10ஆம் நாள்-12ஆம் தேதி- மதியம், நியூயார்க் சுதந்திர தேவி சிலை முன் எனது செல்பேசி தொலைந்து போனது ஒரு பெரும் சோகம்!  அன்று மதியம்வரை அமெரிக்க நிகழ்வுகளில் எடுத்த படங்கள் அனைத்தும் செல்லோடு போய்விட்டன!

எனினும் நியூயார்க்கில் உள்ள நண்பர் ஆல்ஃபி @ ஆல்ஃபிரட் தியாகராஜன்,  பாஸ்டனில் உள்ள தம்பி அருண் ரவி ஆகியோரின் சலிப்பில்லாத அன்பால் பத்திரமாக ஊர்வந்து சேர்ந்தது தனிக்கதை!

இப்போது புதுக்கோட்டை வந்து செல்பேசித் தொடர்பு எண்களை மீட்டு எடுத்துவிட்டேன். படங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் அமெரிக்க நண்பர்களின் அன்பை விரிவாக எழுத ஆசை -

நல்ல வேளையாக எனது இணையருக்கும் இனிய நண்பர்களுக்கும் அவ்வப்போது அனுப்பிய படங்களில் பாதி கிடைத்திருக்கிறது. முழுவதும் கிடைத்ததும் தொடர்ச்சியாக எழுதுவேன்.

இது நிற்க.

அமெரிக்கப் பயணத்திற்கு முதல்நாள் –ஜூலை 1ஆம் தேதி –இந்து தமிழ் திசை நாளிதழில் ஓராண்டாகத் தொடரந்து வெளியான “தமிழ்இனிது” நூலும் அச்சாகி வந்துவிட்டது. 10பிரதிகளை மட்டும் எடுத்துச் சென்று FeTNA பேரவை நிகழ்விலும் வெளியிட்டாகி விட்டது (இதை முந்தைய எனது வலைப்பதிவில், அட்லாண்டா தங்கை கிரேஸ் பிரதிபாவின் மேசைக் கணினி வழி நமது வலைப்பக்கத்தில்  பகிர்ந்ததை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். பார்க்காதவர்கள் பார்த்துவிட வேண்டுகிறேன்)

நமது நூல்பிரதிகள் எங்கே கிடைக்கும் என்று நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்தப் பதிவு –


தமிழ்இனிது நூல் வெளியீடு : “இந்து தமிழ் திசை“ குழுமம்.                   எனவே   மாவட்டத் தலைநகர் அனைத்திலும், முக்கியமான நகரங்களிலும் இந்து-தமிழ்- விற்பனை நிலையங்கள் உள்ளன

சென்னை “இந்து தமிழ் திசை” அலுவலகத்தில் நூல் கிடைக்குமிடம் –விற்பனையகப் பொறுப்பாளர்- திரு இந்துராஜ் அவர்களின் –                      தொடர்பு எண் – 91 74012 96562,   மற்றும்     ஜி.பே.எண் - 9840699497.  

அவர்களிடமே கேட்டால் விவரம் தெரிவிப்பார்கள்.

புதுக்கோட்டையில் மேல ராச வீதி “சக்சஸ் புக்ஸ்டால்”இல் கிடைக்கும் (நூல் வந்த பதினைந்து நாளில் 100பிரதிகள் விற்பனை ஆகிவிட்டதாக சக்சஸ் அஜ்மீர் மகிழ்வுடன் தெரிவித்தார்!)                   அவரது தொடர்பு எண் - +91 98420 18544

பொதுவாக 10 %கழிவு தருகிறார்கள். பிரதிகள் அதிகமாக வாங்கினால் அதிக கழிவும் கிடைக்கும். என்னைத் தொடர்பு கொண்டால் எவ்வளவு கழிவு தருவார்கள் எனும் கூடுதல் விவரத்தையும் தருவேன்.

நூலைப் படித்தபின், சிறந்த -புகழ்ந்த அல்ல- நூல்விமர்சனத்தின் பகுதியை அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடத் திட்டமுள்ளது. எனவே ஆக்கவழியிலான கருத்துகளைத் தெரிவிக்க  வேண்டுகிறேன்.

வணக்கம்.

---------------------------------------------------- 

நமது வலை நண்பர்களுக்காக

இந்து தமிழ் திசை ஆசிரியர்

திருமிகு அசோகன் அவர்களின்

அருமையான பதிப்புரை-


 

என்னுரை -




இனி,

மற்றவை-

நூலைப் படித்தபின்

உங்கள் கருத்தறிந்து..

நன்றி வணக்கம்.

(அடுத்த பதிவு-

அமெரிக்கப் பயண நினைவுகள்... )

-------------------------------------------------------