இணையத் தமிழ்ப்பயிற்சி - படங்கள்-(1)

நடத்திய எங்கள் “கணினித் தமிழ்ச்சங்க” 
நண்பர்களே வியந்து போனோம்!
இணையத் தமிழ்ப்பயிற்சியில் இத்தனை ஆர்வமா?

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் –2016 - நிகழ்ச்சி நிரல்

18-12-2016 ஞாயிறு அன்று  புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஒருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் அழைப்பிதழ் இதோ-

வருவோர் கவனத்திற்கு -

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அனைவரும் வருக!

புதுக்கோட்டை - கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும்
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்
18-12-2016 ஞாயிறு 
(காலை9மணிமுதல்-மாலை5மணிவரை)
அனுமதி இலவசம், அனைவரும் வரலாம்
பயிற்சி நிகழும் இடம்
Mount Zion College of Engineering and Technology
Lena Vilakku, Pilivalam P.O, Thirumayam Tk.,
Pudukkottai Dt - 622507, Tamil Nadu, India
 ----------------------------------- 

1.      தமிழ் வலைப்பக்கம் தொடங்குவதற்கான பயிற்சி
(உருவாக்கம் முதல் விரிவாக்கம் வரை)  -
2.      விக்கிப்பீடியாவில் தமிழில் எழுதுவதற்கான பயிற்சி
(எப்படி எழுதுவது, எதை எழுதக்கூடாது)
3.      யூட்யூப்-இல் (ஒலி-ஒளி) ஏற்றுவதற்கான பயிற்சி
(வலைப்பக்கத்தில் யூட்யூப் இணைப்பது உட்பட)
4.      செல்பேசியில் வலைப்பக்கம் ஏற்ற, படிக்க, (ஆப்ஸ்)பயிற்சி
                           மற்றும்
பிழை திருத்திகளைப் பயன்படுத்துவதற்கான குறிப்புகள்,
மின்னூலாக்கும் ஆலோசனைக் குறிப்புகள்,
காண்செவி(வாட்ஸாப்)இல் வலைப்படைப்பைப் படிக்கவும் பதிவேற்றவுமான குறிப்புகள்
பொத்தான்களின் வழி விரைந்த கணினிப்பணிக்கான பயிற்சி (USAGES OF SHORT CUT KEYS IN COMPUTERS)
தலைமை தாங்கித் தொடங்கி வைக்க,
புதுக்கோட்டை கணினித்தமிழ்ச் சங்க நிறுவுநரும்
தற்போதைய கோவை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலருமான
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
இசைந்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2016


புத்தகக் காதலர்கள் வருக!
வாராது போல் வந்த மாமணி
புதுக்கோட்டை மக்களின்
நெடுநாள் கனவு!
இப்போது அவசரமாக நிறைவேறுகிறது!
இதுவும்
கவிஞர் தங்கம் மூர்த்தி
விழாக்குழுத் தலைவர்
என்பதால் மேலும்  சிறப்படைகிறது
----------------------------------
- முக்கியமான கூடுதல்செய்தி -
புதுக்கோட்டை மாவட்டப் படைப்பாளிகள்
என்றொரு அரங்கை (ஸ்டால்) வாங்கியிருக்கிறோம்

வலைப்பதிவர் திருவிழா - வேண்டுகோள்!

20-11-2016 காலை,  கணினித்தமிழ்ச்சங்க நிறுவுநர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தலைமையில்
 “வலைப்பதிவர் திருவிழா” நடத்துவது பற்றி நடந்த
ஆலோசனைக் கூட்டம்

---------------------------------------------------------------------------












புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா நடந்து முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு, மாநிலம் தழுவிய விழாவை நடத்த வேறெந்த மாவட்டத்தினரும் --இன்றுவரை-- முன்வரவில்லை.
  

மை வச்சதுக்குப் பதிலா மருதாணி வச்சிருக்கலாம்! (வாசகர் மீம்ஸ்)

மை வைக்கிறதுக்கு பதிலா 
மருதாணி வெச்சாலாவது 
வரிசைல நின்னு காய வைச்சிடலாம்... 
மோடி ஜி 
உங்களுக்கு Creativity பத்தல....
-ஆர்த்தி ரவிசங்கர்


ஏடிஎம்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் -
ரிசர்வ் வங்கி # அது ஏடிஎம்- பணத்தை வச்சுட்டு சொல்லணும்....
எப்ப பாரு எதாது பேசிட்டு
- கமல் காம்



இருபது லட்சம்பேர் பார்த்த குறும்படம்!

காதல்கதைதான்
என்றாலும் இன்றைய இளைய இணையரின் ஈகோ வை மையப்படுத்தி அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள் குழுவினர் (20நிமிடம்) 

திரைமொழியும் இசையும், தொகுப்பும் பட்டுக் கத்தரித்த மாதிரி...நடிப்பும் மிக இயல்பு! 
வாழ்த்துகள் சொல்லி என் வலைப்பக்கத்தில் 
பகிர்கிறேன் நன்றி

இளமையான இனிய கதையை, படமாக்கிய குழுவினர் அனைவர்க்கும் – வாழ்த்துகள் 
முக்கியமாக இயக்குநர் –சீனிவாசஸ் அவர்களுக்கு.
நாம் எதிர்பார்க்கும் காட்சிகளைப் புரிந்து கொண்டு, அதைத்தாண்டித்தாண்டி யோசித்து வைத்த புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது!

நீங்களே பாருங்களேன் – 

இணைப்பிற்குச் செல்ல -

(கீழே பார்வையாளர் எண்ணிக்கையைப் பாருங்கள்,
 21லட்சத்தைத் தாண்டி விட்டது...)

(முதல்காட்சி மட்டும்தான். . .
 பிறந்தநாளை இரண்டுபேர் மட்டுமே கொண்டாடுகிறார்கள்?

நண்பர்கள் எல்லாம் லீவா நண்பா?)

தீபாவளியன்று ஒரு வைரத்தைத் தீயில் இட்டோம்!

------------------------------------------------------- 
எஸ்.ரா.விடம் நினைவுப் பரிசு பெறும்
விழாக்குழு ஆசிரியர்
சி.குருநாதசுந்தரம்

ஆசிரியர்தான், ஆனால் சாதாரண ஆசிரியரல்ல! தமிழாசிரியர்கள் மட்டுமின்றி அனைத்துப் பாட ஆசிரியர்களும் விரும்பும்  வண்ணம் “பவர் பாயிண்ட்”வழி நடத்தும் ஆசிரியர்களின் ஆசிரியர்!

வலைப்பதிவர் இணையப்பயிற்சிமுகாமை இருமுறை நடத்திய அமைப்பாளர்களில் முக்கியமானவர்!
பார்க்க, படங்கள் மற்றும் செய்திகள் -
இடமிருந்து.. மது கஸ்தூரி, சி.குருநாதசுந்தரம், நான்,
முனைவர் நா.அருள்முருகன், ராசி.பன்னீர்செல்வன்,மகா.சுந்தர்,அ.பாண்டியன்,
சகோதரிகள் இரா.ஜெயா, மு.கீதா
பார்க்க -
   
RMSA (அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட) ஆசிரியப் பயிற்றுநர்! மாநிலக் கருத்தாளர்களில் முக்கியமான தமிழ்ப்பாடப் பயிற்சியாளர்!

ஆசிரியர்கள் கணினிவழி கற்பிக்கும் பயிற்சி பெறத் தூண்டி, முன்னோடிப் பயிற்றுநர்!

இதுதான் “மோடி வித்தை”யா மிஸ்டர் மோடி? (ரூ.500, 1000 செல்லாதாமே?)

வர வர இந்தியாவின் பிரதமர் மோடிஜி, ”துக்ளக் ஆட்சி“யை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்.. அவர்தான் திடீரென்று “நாணயங்கள் எல்லாம் இனி தோலில் வெளியிடப்படும்.. முந்திய அரசாணைகள் செல்லாது” என்பதுபோல திடீர் அறிவிப்புகளை வெளியிடுவாராம்!
நமது இன்றைய பாரதப் பிரதமரும் இரவு 08-11-2016அன்று இரவு 9மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி, “இன்றிரவு 12மணிமுதல் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது” என்று அறிவித்து, நாடு முழுவதும் பரபரப்பை நிகழ்த்தியிருக்கிறார்! ஏழை பாழைகள் நாயாய், பேயாய் அலைகிறார்கள்!
இதனால், “கள்ள நோட்டுப் புழக்கம் அறவே ஒழியும். கணக்கில் வராத ரூபாய்கள் மதிப்பிழக்கும், ஊழல் ஒழியும்” என்று விளக்கம் தருகிறார்கள்!
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, சில கேள்விகளை முன்வைக்கிறேன்-

TNPSC குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன?

எனது மாணவரின் வற்புறுத்தலின் காரணமாக, இந்தத் தேர்வுக்குத் தமிழ்ப் பாட ஆசிரியனாக, நானும் ஒருவாரம் வகுப்பெடுத்த அனுபவத்தோடு, மிகவும் ஒத்துப் போவதால் பாடசாலை இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை அப்படியே இங்குத் தருகிறேன்- 
--நா.முத்துநிலவன்
இனி அந்தக் கட்டுரை -