உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!





“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டிகணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு

போட்டி விதிகளை அறிய இந்த வலைப்பக்கம் வருக http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html
-------------------------------
இது எனது வலைப்பக்கத்தின் 500ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதரவுதரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வணக்கமும். 

----------------------------------

வலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி?

வரும் 11-10-2015 ஞாயிறு 
வலைப்பதிவர் திருவிழா-2015

புதுக்கோட்டையில் 
சிறப்பான ஏற்பாடுகள் 
நடந்து வருகின்றன.

புதுக்கோட்டைப் பதிவர்கள் 
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு
விழாவுக்காக 
உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..

மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.

(1)    கவிதை ஓவியக் கண்காட்சி
(2)    பதிவர்களின் அறிமுகம்
(3)    தமிழிசைப் பாடல்கள்
(4)    நூல்வெளியீடுகள்
(5)    குறும்பட வெளியீடுகள்
(6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8)    பதிவர்களுக்கான போட்டிகள் பரிசுகள்
(9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது.        இதோடு,

பங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத்  தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்...  மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்....

                   அப்ப நீங்க..?

பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர்விவரம் அறிய இங்கே வாருங்கள் –


--------------------------------------------------------------------------------------
பிரபல  வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
இந்தப் பதிவை அவரவர் தளங்களில் எடுத்து மறுபதிவு இட்டு,
விழாக்குழுவிற்கு உதவிட அன்புடன் வேண்டுகிறேன். 
நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு முன்கூட்டிய எங்கள் நன்றி.

“அவர்கள் உண்மைகள்“ மதுரைத் தமிழனின் ஆலோசனைகள் பற்றி...

முதலில் பின்வரும் இணைப்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

 
(பாவி மனுஷன் 
அவரது பதிவுகளை 
யாரும் நகலெடுக்க முடியாதபடி 
ஏதோ செய்திருக்கிறார்! 
நமக்கும் அதைச் சொல்லித்தர 
மாட்டேங்குறார்)

மதுரைத் தமிழனின் 
நமது பதிவர் விழா 
ஆலோசனைப் பதிவு-


இனி ஒவ்வொரு கருத்தாகப் பார்ப்போம்.

தொடர வருக பார்க்க –
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_8.html

(வேறுவழி? அந்த வலைப் பக்கத்தில் பதிவு போட்டு ஒருமணிநேரமாக ஒரு ஈ காக்கா கூட எட்டிப்பார்க்கல... அதில் நம் நண்பர்கள் இணைந்து பார்க்கத் தொடங்கும்வரையாவது, இப்படித்தான் செய்யவேண்டும்.
நண்பர்கள் சிரமத்திற்கு மன்னித்து அங்கு வரவேண்டுகிறேன்..
தனுஷ் பட விளக்கம் அங்கு வந்தால்தான் புரியும்.
மதுரைத் தமிழன் சற்றே மன்னிக்க...)

தமுஎகச 2014-கலை-இலக்கிய விருதுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு


கடந்த 2014 ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய ஆவணப்பட விருதுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுபற்றி நம் வலைப்பக்கத்தில் வந்த அறிவிப்புக் காண –
http://valarumkavithai.blogspot.com/2015/06/blog-post_9.html  

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

த மு எ க ச சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள்,சிறுகதை,நாவல்கள் உள்ளிட்ட கலை இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளை வழங்கிவருகிறோம்.அதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டில் வெளியான படைப்புகளுக்கு விருதுகள் வழங்க நடுவர்குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் விருதுக்கான படைப்புகளை தேர்வுசெய்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
(1)  நாவல்
அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மீசை என்பது வெறும் மயிர்
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா

(2)  சிறுகதைத் தொகுப்பு
அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல்: கூனல்பிறை   ஆசிரியர்: தேன்மொழி
(3)  சிறந்த கவிதைத் தொகுப்பு
வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-செல்லம்மாள்
ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல்: அழிபசி    ஆசிரியர்: தவசி கருப்பசாமி

(4)  விளிம்புநிலை மக்கள் பற்றிய சிறந்த படைப்பு
அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல்: சப்பே கொகாலு
ஆசிரியர்: லட்சுமணன்

(5)  சிறந்த தொன்மம்சார் படைப்பு
தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல்: இலக்கியத்தில் மானுடவியல்
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி

(6)  சிறந்த கலை இலக்கிய விமர்சன நூல்
தோழர் இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல்: பாரதியியல்- வெளிவராத உண்மைகள்
ஆசிரியர்: முனைவர் ய.மணிகண்டன்
(7)  சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா
டி.டி.ராமகிருஷ்ணன் தமிழில்/ குறிஞ்சிவேலன்

(8)  சிறந்த ஆவணப்படம்
என்.பி.நல்லசிவம்-ரத்தினம் நினைவு விருது
படம்: பாட்டாளி படைப்பாளியான வரலாறு
இயக்கம்: சாரோன் செந்தில்

தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்
(9)  வளர்ச்சிக்கு உதவும் சிறந்த நூல்
நூல் : தொல்காப்பியத்தில் இசை : தொன்மையும் தொடர்ச்சியும்
ஆசிரியர்: முனைவர்.இராச.கலைவாணி

(10)               சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல்
நூல்: ஜிமாவின் கைப்பேசி
ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
இவ்விருதுகளைப் பெறும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும்
ரூ.5,000 ரொக்கத்தொகையுடன் வாழ்த்துக் கேடயங்களும் திரளான மக்கள் கலந்துகொள்ளும் தஞ்சை விழாவில் வழங்கப்படவுள்ளன.
விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் செப்டம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. (அழைப்பிதழ் மேலுள்ளது வருக வருக!)

------------------------------------------------------------ 

விழாவில், வலைப்பதிவரின் புத்தகக் கண்காட்சி & விற்பனை ஸ்டால் வைக்கலாமா?

 “வலைப்பதிவர் திருவிழா-2015நிகழ்வு சிறக்க நல்ல யோசனைகளைத் தெரிவிக்கக் கேட்டிருந்தோம்... பலரும் நல்ல நல்ல யோசனைகளைச் சொல்லி வருகிறார்கள்.. நண்பர் ஒருவர் -அவர் ரொம்ப அடக்கம், தன் பெயரைக் கூடச் சொல்ல வேண்டாம் என்று- சொன்ன யோசனை-


வலைப்பதிவர் பலரும் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். அதனை மற்றவர் அறியச் செய்ய இந்த விழாவில் ஒரு முயற்சி எடுக்கலாமே?

“வலைப்பதிவர் 
புத்தகக் கண்காட்சி &
விற்பனை ஸ்டால் 
ஒன்று போட்டால் என்ன?
அட! இதில் குறும்படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா துளசிதளத்தார், குடந்தை சரவணன் அவர்களே? 

ஏற்கெனவே எத்தனை ஆண்டுக்கு முன்னதாக வெளியிட்டு இருந்தாலும் அவர் நம் வலைப்பதிவர் எனில், அவர்களின் புத்தகங்களை விழாவிற்கு வரும் அனைவரும் அறியச் செய்வது இருதரப்பிலும் எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்?

இது பற்றிய நம் வலை-எழுத்தாளர் கருத்துகளைத் தெரிந்து அதுபற்றிய செயல் திட்டத்தை உருவாக்குவோம்!

புத்தகப் பிரதிகள் இருந்தால் –விழா சிறப்புத் தள்ளுபடி

யுடன்- விழா அரங்கில் 
தனி ஸ்டால்போட்டு,
விற்பனையும் செய்வோம்!

ஒருவேளை நூல் படிகள் இல்லாவிட்டால், அதுபற்றிய தகவல்களை வருவோரறிய கவிதைக் கண்காட்சி அருகில் 
ஒரு விளக்கஅட்டை
எழுதி, காட்சிக்கு வைத்துவிடுவோம்!


ஒரே நிபந்தனை – வலைப்பதிவரே நூலாசிரியராக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை “வலைப்பதிவர் புத்தகக் கண்காட்சி & விற்பனை“ எனலாம்! (வாங்குவோர்க்கு சிறப்புத் தள்ளுபடியுடன்)

ஆமா..! பிறகு பதிவரின் சித்தப்பா பெரியப்பா கொழுந்தியா ஓர்ப்படியா என்று கிளம்பிவிடக் கூடாது. எனில் அப்படி வரும் நூல்களைப் பக்கத்திலேயே அமைக்கத் திட்டமிட்டு பொதுவான அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும்படியான  கடை ஒன்றும் போட்டு அதில் இதையும் போட்டு விடலாம் வெறென்ன செய்யலாம்?)

இதுபற்றிய கருத்துகளை 
எழுத்தாளராக – நூலாசிரியராக இருக்கும் 
நம் பதிவர்கள் மட்டுமல்ல 
புத்தகக் காதலர்களும் தெரிவித்தால் செயல்படுத்தலாமே? 
(எதிர்கால நூலாசிரியரா நீங்கள்? 
அப்ப நீங்களும் வாங்க வாங்க!)

எங்கே ... பார்க்கலாம் ... 
------------------------------------
படங்களுக்கு நன்றி -
நம்ம “வாத்தியார்“ பதிவரும் புத்தகக் காதலருமான பாலகணேஷின் “மின்னல் வரிகள்“ -http://minnalvarigal.blogspot.com/
-------------------------------------

வலைப்பதிவர் திருவிழா - இளைஞர்களின் உற்சாகம்! சில வேண்டுகோள்கள்!


இளமை இருக்குமிடத்தில் புதுமையும் இருக்கும், செயல்வேகமும் இருக்கும் என்பதை இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கண்டோம். அட! இது என்னப்பத்தி இல்லிங்க..நம்ம இளைய தளபதிகள் பத்தி!

கூட்டம் தொடங்கும் முன்னதாகவே நம்ம
ஸ்ரீமலையப்பனைச் சூழ்ந்து கொண்டு அவர் கொண்டு வந்திருந்த மடிக்கணினியைத் திறந்து வரிசையாக விழாவருகைப் படிவத்தை நிரப்பிக்கொண்டு பலரும் நின்றதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது...

கஸ்தூரி சொன்னதுபோல “வலைப்பதிவர் திருவிழா“ பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் எப்போதும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டே போகும். 
ஆனால் இன்று 02-09-2015 மாலை புதுக்கோட்டை ஆக்ஸ்ஃபோர்டு சமையற்கலைக் கல்லூரியில் நடந்த 6ஆவது கலந்துரையாடல் கூட்டம் வித்தியாசமானது!
இம்முறை விவாதங்கள் குறைவு...முடிவுகள் மிகுதி!

வேலைப்பிரிவினைகள் –
கடந்த கூட்டத்தில் வைத்த தொடர்ச்சியாக சகோ.மு.கீதா முன்மொழிய, உடனுக்குடனே அந்த முன்மொழிவுகள் சிறு சிறு மாற்றத்துடன் சட்சட்டென்று ஏற்கப்பட, கிட்டத்தட்ட ஒருமணிநேரத்திற்குள்ளேயே கூட்டம் முடிந்துவிட்டது. 

ஆனாலும்...
குழு குழுவாகப் பேசிக்கொண்டிருந்த புதுமை நடந்தது... 
ஓவியர்கள் சுமார் 6,7பேர் வந்திருந்தது மகிழ்ச்சி தந்தது! (அதில் இருவர் நம் வலைப்பதிவர் என்பது சிறப்பு!)

தொடர்ச்சியைப் படிக்க 
விழா வலைப்பக்கம் வருக...
------------------------------------