எட்டாவது ஆண்டாக நடக்கும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நான் இந்த ஆண்டு முழுஈடுபாட்டோடு இல்லை. (உடல்/மன நிலை ஒரு காரணம், தமுஎகச மாவட்ட மாநாடுகள், மாநில மாநாட்டு - மலர் பணிகள் மறு காரணம்) இதை அறிவியல் இயக்க நண்பர்களிடமும் தெரிவித்து விட்டேன்.
நான் பொறுப்பெடுத்து நடத்திய முந்திய ஆண்டுகளில்
மற்ற பேச்சாளர்களை, தமிழறிஞர்களை, அறிவியல் அறிஞர்களை அழைத்துப் பேச
வைத்தேன். விருதுநகர், முகவை, சிவகங்கை
புத்தக விழாக்களில் என் தலைமையில் நடத்திய இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றத்தைப்
புதுக்கோட்டை புத்தகவிழாவில் இதுவரை நான் நடத்த முன்வைத்ததில்லை.
இந்த ஆண்டு அந்தப் பொறுப்பில் இல்லாததால், எனது தலைமையில் பட்டிமன்றம் நடத்தித்தரக் கேட்டபோது தட்ட முடியவில்லை!
விழாவின் இறுதி நாளில் - 12-10-2025 - அன்று நமது
இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் நடக்கிறது :
பேச்சாளர்களை இறுதிப் படுத்தி அழைப்பிதழ் அச்சிடுவது எனும் எனது பொறுப்பை இந்த ஆண்டு ஏற்று, என்னைவிடவும் பல சிரமங்களைச் சந்தித்து, என்னை விடவும் சிறப்பாகச் செய்து வருகின்ற, எழுத்தாளரும் தமுஎகச மாவட்டத் தலைவரும் புத்தகவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தோழர் ராசி.பன்னீர் செல்வம் கேட்டபோது தயக்கத்தோடுதான் ஒப்புக் கொண்டேன்
இதோ அந்த நிகழ்வு -
![]() |
(இந்தப் பதாகை உள்ளிட்ட உதவிகளை உடனுக்குடன் செய்துதரும் ஆலங்குடி தோழர் அறிவொளி கருப்பையா போலும் ஈடுபாட்டை எப்படிப் பாராட்டுவது? நன்றி தோழா) |
அடுத்து நம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் நடக்க உள்ள சுழலும் கவியரங்கம் எனும் புதுமையான நிகழ்வையும்
நீங்கள் அவசியம் கண்டு கேட்டு மகிழ வேண்டும்!
வருக! வருக!!
எல்லாருமே நம்ம ஊர்ப் பேச்சாளர்கள்தாம்!
நம்ம ஊர்க் கவிஞர்கள்தாம்! என்பதே
புதுக்கோட்டையின் பெருமை!
பத்துநாளும் பல்வேறு அறிஞர்கள், கலைஞர்கள், சிறப்புப் பேச்சாளர்கள் கலந்து கொண்டாலும் இது எனக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது – வாய்ப்போர் வாருங்கள்!
-------------------------------------
விழாக்களின் இடையில் நேற்று நடந்த
தங்கை மைதிலிகஸ்தூரிரங்கன் எழுதிய
"அன்பே அலெக்ஸா"
கவிதைநூல் அறிமுகமும் சிறப்பு!
இடையில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு:
அய்யா ஆர்.பாலகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன்
------------------------------------------------------------
அழைப்பிதழ்
முதல்நாள் முதல்பக்கம் இது:
நிறைவு நாள்
நிறைவு நிகழ்ச்சியின் பக்கம் இங்கே -
(இடையில் நடந்த தம்பி சோலச்சியின் நூல்வெளியீட்டுக்கு
நான் இருக்க முடியாமல் சிவகங்கை மாவட்ட
தமுஎகச மாநாட்டுக்குச்
செல்ல வேண்டிய நிலை மாதிரி நிறைய..)
----------------------------
நேற்று, (3ஆவது நாள்)
அறிவியல் இயக்கத் தலைவர்
தோழர் சுப்பிரமணியன் அவர்கள்
காலை நிகழ்விலும்,
அய்யா ரெ.பாலகிருஷ்ணன் இஆப.,
சிறார் இலக்கியச் சிற்பி விஷ்ணுபுரம் சரவணன்,
தோழர் ஸ்டாலின் சரவணன்
ஆகிய மூவரும் பேசிய
மாலை நிகழ்வுகளின் ஒளிப்பதிவு –
நன்றி – புதுகை வரலாறு நாளிதழ் – திரு
சிவா
https://www.youtube.com/live/
கண்டு கேட்டு கருத்துகளைப் பகிருங்கள்
-----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக