தமுஎகச -16ஆவது மாநில மாநாடு - வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம்

                                          எனது பொதுவாழ்வுக்கு வயது -50

என் உயிரோடும் உணர்வோடும் கலந்த

தமுஎகச வுக்கும் வயது 50

சொல்லப் போனால்

தமுஎகச அமைப்பு மதுரையில்

              நமது முன்னோடிகளால் அமைக்கப்பட்ட              

1975ஆம் ஆண்டில்

திருவையாறு அரசர் கல்லூரி மாணவன் நான்!

அப்போதே

திருவையாறு நகரில் தமுஎச கிளை தொடங்கி

அதன் செயலராகச் செயற்பட்டு,

கவிஞர் தணிகைச் செல்வனை அழைத்து

கவியரங்கம் நடத்தினேன்!

அவர் முழங்கினார் -

"முந்தாநாள் மழையில்

முளைத்தெழுந்த காளான்கள்

ஐந்தம்சத் திட்டத்தை

அரற்றுகின்ற காலமிது"

அப்போது அதன் முழுமையான 

பொருள் எனக்குப் புரியவில்லை

பிறகு புரிந்தது -

பள்ளி, கல்லூரி கற்றுத்தராத

உலக அறிவுக் கல்வியை 

தமுஎகச கற்றுத் தந்தது!

பிறகு 1978இல் புதுக்கோட்டை வந்து

முதல் கிளையை அமைத்த பிறகு

மாவட்டம் முழுவதும் 16 கிளைபரப்பி

மாவட்டச் செயலரானேன்.

1982இல் பாரதி நூற்றாண்டு விழாவை

தசுலுச (TELC) பள்ளியில் 

இரண்டு நாள் நடத்தினோம்

தோழர் கே.முத்தையா வந்திருந்தார்.

1984இல் கந்தர்வன் மாவட்டத் தலைவரானார்..

பிறகு 1991இல் மாநிலத் துணைச்செயலர்..

பிறகு மாநிலத் துணைத்தலைவராக...

காலம் விரைவாக ஓடுகிறது!

இதோ... இப்போது...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்

50ஆவது ஆண்டில் தஞ்சையில் நடக்கவுள்ள

16ஆவது மாநில மாநாட்டுக்கான

வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் 

இன்று மாலை தஞ்சையில் நடக்கிறது

மாநில மாநாடு தஞ்சையில் வரும் டிசம்பரில்!

வரவேற்புக்குழு அழைப்பிதழ் இதோ 

வாய்ப்புள்ளோர் தஞ்சை நகருக்கு வருக


 

--------------------

எங்கள் ஒவ்வொருவர் பேச்சிலும்

நந்தலாலா இருப்பான்!

கரிசல் பாடிக்கொண்டிருப்பான்!

நாறும் பூ மணம் வீசுவார்!

உங்கள் பணிகளை

நம் தோழர்களோடு கைகோத்து

தொடர்வோம் தோழர்களே!!!

-------------------------------- 

2 கருத்துகள்:

  1. தமிழுக்காகவும் தமிழருக்காகவும் எந்நாளும் செயலாற்றிக் கொண்டே இருக்கும் எழுத்துப் போராளிகளுக்கும் கலைக் கலகக்காரர்களுக்கும் அன்பு கமழ் நல்வாழ்த்துக்கள்!

    பொன்விழா ஆண்டைத் த.மு.எ.க.ச., மாவட்டந்தோறும் கொண்டாடுவது தமிழர்க்குக் கொண்டாட்டம். நல்ல கருத்துக்களை, காலத்துக்கேற்ற செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு நல்வாய்ப்பு! அந்த வகையில் தஞ்சை மாநாடும் வெற்றி பெறும் என நம்புகிறேன்!

    இப்படித் தான் உயிராய் நேசிக்கும் இயக்கத்தின் பொன்விழாவும் தன்னுடைய பொதுவாழ்வின் பொன்விழாவும் ஒன்றாக அமைவதெல்லாம் எல்லோருக்கும் இயலக்கூடியதில்லை. தன் கருத்துக்கு உகந்த இயக்கத்தைத் தன் தொடக்கக் காலத்திலேயே இனங்கண்டு இணைந்தும் தொடர்ந்தும் இயங்குபவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில், பொன்விழாக் காணும் தங்களுக்கும் பணிவன்பான நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு