வணக்கம்
பதிவுத் துறையின் உயர்அலுவலராக இருந்து
ஒய்வு பெற்றாலும், தமிழார்வம் ஓயாத
எழுத்தாளர்
கவிஞர் வடிவழகி தேவசகாயம் அவர்கள்
தன் சக பெண் படைப்பாளிகளை இணைத்து,
"தமிழ்த் தடாகம்"
என்றொரு மின்னிதழை நடத்தி வருகிறார்.
அந்த இதழுக்காக அவர்கள்
என்னை நேர்காணல் எடுத்தார்கள்.
இந்த (ஜனவரி-2025) தை மாத சிறப்பிதழில்
வெளிவந்திருக்கும்
எனது நேர்காணலை
நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
படித்துக் கருத்திடுங்கள் நண்பர்களே!
(தமிழ்த்தடாகம் மின்னிதழ் - ஜனவரி-2025)
![]() |
(நேர்காணல்- பக்-1/9) |
![]() |
(நேர்காணல்- பக்-2/9) |
![]() |
(நேர்காணல்- பக்-3/9) |
![]() |
(நேர்காணல்- பக்-4/9) |
![]() |
(நேர்காணல்- பக்-5/9) |
(நேர்காணல்- பக்-6/9)
![]() |
(நேர்காணல்- பக்-9/9) ----------------------------------------------------------- நன்றி சகோதரி கவிஞர் வடிவழகி அவர்கள் தமிழ்த்தடாகம் மின்னிதழ்க் குழு (சென்னை / பட்டுக் கோட்டை / அமெரிக்கா) இதழின் முகநூல் இணைய இணைப்பு https://www.facebook.com/ முழுமையான இதழைப் பார்ப்பதோடு இணைந்து படியுங்கள் படையுங்கள் புதிய படைப்பாளிகளைக் காணுங்கள் ------------------------------------------------------------------------------------ |
அருமையான வினாக்கள். நேர்த்தியான விடைகள். உச்சரித்தல் மொழிச் சிறப்பு வடிவ வளர்ச்சி இயற்கையை நெறிப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நன்றியறிதல் என் ஒவ்வொன்றையும் அழகாய் வனிசைப்படுத்திய நேர்த்தி என நேர்காணல் மொத்தமும் சிறப்பு.
பதிலளிநீக்குநேர்காணலைச் சுருக்கி அற்புதமான பின்னூட்டம் சகோதரி! நன்றி கூறி வணங்குகிறேன்
நீக்குதமிழ் இலக்கியத்திற்கு உரமாக இருக்கும் உங்களை உளமாற வாழ்த்துகிறேன். தமிழைக் கொண்டாடுபவர்களை தரையில் வைத்துக் கொண்டாடுவதை விட தலையில் வைத்துக்கொண்டாடுவதை விரும்புகிறவன் நான். நீங்கள் எழுதிக் காட்ட, நல்லவைகளை எடுத்துக்காட்ட மிகச்சிறந்த ஆளுமைதான். இந்து தமிழ் திசையில் மட்டுமல்ல எல்லா திசையிலும் உங்கள் பேச்சும் எழுத்தின் வீச்சம் இருக்கட்டும். உங்கள் உயரத்தை அன்னாந்து பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அன்புடன் ஆண்டனி புதுக்கோட்டை
பதிலளிநீக்குதங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பர் ஆண்டனி. நீங்கள் தெரிவித்தபடி இன்னும் சிறப்பாக என் பணிகளை அமைத்துக் கொள்ள முயல்கிறேன். மீண்டும் நன்றி,வணக்கம்
நீக்குஎன்னை உருவாக்கியோர் என்ற நினைவு கூர்தல், அருமை சிறப்பு. பாராட்டு தோழர்.
பதிலளிநீக்குஇந்தப் பாராட்டு உண்மையில் இந்தக் கேள்வியை என்னிடம் எழுப்பிய சகோதரி வடிவழகி அம்மா அவர்களையே சாரும். தனது நண்பர்களை உயர்த்திட அவர்கள் ஆற்றும் பணிகள் என்போல் பலரையும் நெகிழச் செய்கின்றன. நன்றி அவருக்கும், இதைக் குறித்துப் பாராட்டிய உங்களுக்கும் தோழர்.
நீக்குகேள்விகளும் பதில்களும்
பதிலளிநீக்குமீண்டும் தமிழ் இனிது புத்தகம் எடுத்து படிக்க மனம் விரும்புகிறது. நன்று உங்கள் பதில்கள். புத்துயிர்ப்பு தேவைப்படுவோர் வாசிக்க வேண்டிய நேர்காணல். நன்று தோழர்!
'புத்துயிர்ப்பு தேவைப் படுவோர் வாசிக்க வேண்டிய நேர்காணல்" எனும் இந்தப் பாராட்டில் பாதியை அம்மா வடிவழகி அவர்களின் அன்புக்கு சமர்ப்பிக்கிறேன்.
நீக்குதமிழ்த் தடாகம் மின்னிதழில் ஐயா முத்து நிலவன் அவர்களின் நேர்காணல் வாசகர்களுக்கு
பதிலளிநீக்குசிறப்பான ஒரு கற்பித்தலை நிகழ்த்தியிருக்கிறது
வழக்குச் சொல் மக்களுக்கு எந்தளவுக்கு நெருக்கமானது என்பதை பாரதி கலந்து கொண்ட போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதையை விடவும் இரண்டாம் பரிசு பெற்ற பாரதியின் கவிதை இன்றளவும் பேசப்படுவதை சுட்டியதும்
தமிங்கிலம் பண்ணி மொழி என்பதற்கான உதாரணமும்
அவரவர்களுக்கு அவரவர் மொழி குறித்த பாசம் நியாயமானதே என்ற விதமும்
மனிதனின் மூளையைவிட எந்த ஒரு இயந்திரமும் வலிமையுடையதல்ல என்பதற்கு மின்விளக்குகளை உடைத்து போராட்டம் செய்த சுரங்கத்தழிலாளர்கள் முதல் கணிணியால் வேலை வாய்ப்பு பறி போவதாக போராடிய சுய அனுபவம் வரையிலும் கொடுத்த விளக்கமும் என
அருமையான ஒரு பாடமாக இந்த நேர்காணலில் தனது பதில்களை வழங்கிய இருப்பது மிகச்சிறப்பு
ஆசிரியர் அல்லவா அதனால்தான் அவரின் பதில்கள் கூட பாடம் எடுக்கின்றன
காரல் மார்ஸையும் பெரி யாரையும் தொட்டுச் செல்லும் பதில்கள் நேர்காணலில் எழுத்தாளரின் அறிமுகத்தில் சொல்லியிருப்பதை தமுஎகச மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருகிறது
அம்மா வடிவழகி தேவசகாயம் அவர்களின் தேர்ந்தெடுத்த சிறப்பான கேள்வியும் அதற்கு ஐயா முத்து நிலவன் அவர்களின் அற்புதமான பதிலும் என இந்த நேர்காணல் வாசகர்களுக்கு ஓர் அமுது.
ப. சுபாஷ் சந்திர போஸ்.
சும்மா தலைப்பை மட்டும் படித்துவிட்டு, 'சூப்பர்" என்று 'தம்ஸ்-அப்" போடும் வாசகர் மத்தியில் வரிக்கு வரி படித்து, உரிய வரிகளில் பாராட்டி என்னை மேன்மைப் படுத்திய நண்பர் சுபாஷ் அவர்களே உங்களுக்கு எனது தலைதாழ்ந்த வணக்கமும் நன்றியும்.
நீக்குதமிழ்த் தடாகம் மின்னிதழில் ஐயா முத்து நிலவன் அவர்களின் நேர்காணல் வாசகர்களுக்கு
பதிலளிநீக்குசிறப்பான ஒரு கற்பித்தலை நிகழ்த்தியிருக்கிறது
வழக்குச் சொல் மக்களுக்கு எந்தளவுக்கு நெருக்கமானது என்பதை பாரதி கலந்து கொண்ட போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதையை விடவும் இரண்டாம் பரிசு பெற்ற பாரதியின் கவிதை இன்றளவும் பேசப்படுவதை சுட்டியதும்
தமிங்கிலம் பண்ணி மொழி என்பதற்கான உதாரணமும்
அவரவர்களுக்கு அவரவர் மொழி குறித்த பாசம் நியாயமானதே என்ற விதமும்
மனிதனின் மூளையைவிட எந்த ஒரு இயந்திரமும் வலிமையுடையதல்ல என்பதற்கு மின்விளக்குகளை உடைத்து போராட்டம் செய்த சுரங்கத்தழிலாளர்கள் முதல் கணிணியால் வேலை வாய்ப்பு பறி போவதாக போராடிய சுய அனுபவம் வரையிலும் கொடுத்த விளக்கமும் என
அருமையான ஒரு பாடமாக இந்த நேர்காணலில் தனது பதில்களை வழங்கிய இருப்பது மிகச்சிறப்பு
ஆசிரியர் அல்லவா அதனால்தான் அவரின் பதில்கள் கூட பாடம் எடுக்கின்றன
காரல் மார்ஸையும் பெரி யாரையும் தொட்டுச் செல்லும் பதில்கள் நேர்காணலில் எழுத்தாளரின் அறிமுகத்தில் சொல்லியிருப்பதை தமுஎகச மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருகிறது
அம்மா வடிவழகி தேவசகாயம் அவர்களின் தேர்ந்தெடுத்த சிறப்பான கேள்வியும் அதற்கு ஐயா முத்து நிலவன் அவர்களின் அற்புதமான பதிலும் என இந்த நேர்காணல் வாசகர்களுக்கு ஓர் அமுது.
ப. சுபாஷ் சந்திர போஸ்.
மிக்க நன்றி நண்பரே. நேர்காணலை ஊன்றிப் பயின்று எழுதியிருக்கிறீர்கள்! ஆசிரியரின் பதில்கள் பாடம் எடுக்கின்றன என்னும் வரிகளை ரசித்தேன். வடிவழகி அம்மா அவர்களின் கேள்விகளே என்னை இப்படியான பதிலைத் தர வைத்தன. நன்றி நண்பரே! அவர்களுக்குத்தான் பாராட்டுகளின் முதல் மாலை!
பதிலளிநீக்குசிறப்பு ஐயா,
பதிலளிநீக்குசெறிவான கருத்துகளை பதிலாகத் தந்திருக்கிறீர்கள். தங்கள் தமிழ்ச் சேவை என்றும் போற்றத்தக்கது. எத்தனையோ பேருக்கு முன்னோடியாகத் திகழ்கிறீர்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஊக்கப்படுத்துகிறீர்கள். இணையத்திற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தொலைக்காட்சிமூலம் எங்களுக்கு அறிமுகமானவர் என்றாலும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை இணையம்தான் பெற்றுத் தந்தது.
இன்றைய தமிழ் மொழி ”பண்ணி” மொழி ஆகிவிட்டது கவலைக்குரியது.
.
ஆங்கில மோகம் கொண்டேதான்
அழகுத் தமிழை அவமதித்தோம்
பாங்குடன் திகழ்ந்த நம் மொழியை
'பண்ணி' மொழியாய் ஆக்கிவிட்டோம்
தாங்கிய தாயின் மொழியினையே
தூங்கிக் கிடந்து நாம்மறந்தால்
வாங்கிய கடனை அடைக்காத
வஞ்சக ராவோம் அறிவீரா?
எனது வலைப்பக்கத்தில் இதனை இப்படி எழுதி இருந்தேன்
வலைப்பூக்களில் தாங்கள் அளித்த ஊக்கமும் ஆதரவும் மறக்க இயலாதது. தங்கள் தமிழ்ச்சேவைக்கு வணங்குகிறோம் ஐயா
ஆகா... நான் ஊக்கப்படுத்துவதாகச் சொல்லி நீங்கள் என்னை ஊக்கப்படுத்திவிட்டீர்கள் நண்பரே. கல்வித் துறை அலுவலராக இருந்தும் நீங்கள் இதற்காக நேரம் ஒதுக்கிப் படிப்பதும், பதிலிடுவதும்தான் ஊக்கம்! அதோடு, அழகானதோர் அறுசீர் ஆசிரிய விருத்தம் (மாச்சீர் மாச்சீர் காய்ச்சீர் எனும் வகை) படைத்து பின்னூட்டத்தை மெருகூட்டியது சிறப்பு. நன்றிநன்றி
பதிலளிநீக்குமகிழ்வு - பயணம் தொடரட்டும்
பதிலளிநீக்கு