சூரரைப் போற்று – குடும்பத்தோடு பார்க்கவும்

 சூரரைப் போற்று –  குடும்பத்தோடு அனைவரும் பார்க்கவேண்டிய படம்!



கதையெல்லாம் சொல்ல முடியாது!

பின்னணி மட்டும் சொல்கிறேன் -

சூர்யா  நடித்து இன்று வெளிவந்துள்ள சூரரைப் போற்று” தமிழ்த்திரைப் படம், ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.   அவரது “ஈஸி ஃப்ளை” எனும் சுய வரலாற்றுக் கதையே இப்படத்தின் கதை என்பதைப் படத்தின் இறுதியில் சொல்லிவிடுவது அருமை!

 


இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணம் வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள்.ஆனால், “ஏர் டெக்கான்” விமான நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை மகத்தானது. அவர் இந்தக் கதையை சில ஆண்டுகளுக்கு முன்பாக Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் சுயசரிதையாகவே எழுதிவிட்டார். இந்தப் புத்தகத்தை தமிழிலும் வானமே எல்லை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய பின்னணியை பின்வரும் வலைக் காட்சியில் பார்க்க வேண்டுகிறேன் (இருபத்தோரு நிமிடம் ஓடக்கூடியது)

https://www.youtube.com/watch?v=OdqwOIRN0jo&list=UUsGuKEwl9gbHs7yXIe2Ej1Q                          

தகவல்நன்றி -https://www.bbc.com/tamil/india-54905999

இயக்குநர் சுதா கோங்கரா தமிழுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் ஆர்.மாதவனுடன் குத்துச் சண்டை வீராங்கனை ரித்திகாசிங் நடித்து 2016இல் வெளிவந்து  ஒரு சுற்று வந்த “இறுதிச் சுற்று“ திரைப்பட இயக்குநரேதான்! ஜி.ஆர்.கோபிநாத் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து 1971 போரிலும் பங்கேற்றுள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றிய சக அதிகாரியின் துணையோடு ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவினார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தில் தான் சூர்யா நடிக்கிறார்.

படத்தில் ஆங்காங்கே சமூகநீதிக் கருத்துகளைத் தெறிக்கும் வசனங்களுக்கும் பாராட்டலாம்.

கோபிநாத்தின் மனைவி பார்கவியும் இப்படத்தை தயாரித்து நடித்த சூர்யாவும் பாராட்டுக்குரியவர்கள். படத்தை அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.

கர்நாடகத்தைச் சேர்ந்த 
திரு கோபிநாத் அவர்கள்
திரைப்படம் பார்த்த சுட்டுரை
-------------------------------------------

குடும்பத்தோடு பாருங்கள், 

நாங்கள் அப்படித்தான் பார்த்து மகிழ்ந்தோம்.

----------------------------------------------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. நேற்று நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம்...அருமையான படம்...

    பதிலளிநீக்கு
  2. ஒரு சிறந்த திரைப்படத்தை நமக்கு அளித்த படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுகள். இளைய சமுதாயம் மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை தருகிற திரைக்கதை, வசனங்கள், இசை, ஒளிப்பதிவு, சூர்யா உட்பட அனைத்து நடிகர், நடிகைகளின் அர்ப்பணிப்பான நடிப்பு என்று முழுமையான ஒரு திரைப்படம் என்றால் அது மிகையில்லை.

    பதிலளிநீக்கு