நமது வலைப்பக்கத்தில்
வந்த எனது கவிதையை, பெயரறிய முடியாத நண்பர் பலரும் (காண்செவி – Whatsaap) புலனங்களில்
என்பெயருடன் பகிர, அது எனக்கே வந்தது!
அறிமுகமான நண்பர் பலர் “இது உன்னுதுதானே? வாட்சாப்ல பிரபலமாயிட்டு வருது!” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்கள்!
பிறகு --
“பத்திரிகை” இணைய இதழிலிருந்து, “இந்த உங்கள் கவிதையை
எமது இதழில் வெளியிடலாமா?” என்று அனுமதி கேட்டார் திரு தனசேகர பாண்டியன் அவர்கள்.
மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன், அவர்களும் அன்புடன் வெளியிட்டார்கள் –
இதோ அந்த “பத்திரிகை” இணைய இதழ் இணைப்பு -
பிறகு --
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின்
அவர்கள் 14-04-2019 அன்று, பல்லாயிரக் கணக்கானோர்
கலந்துகொண்டிருந்த திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்தக்
கவிதையை எடுத்துச் சொல்லி, என் பெயரையும் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதால், அந்தக் கூட்டத்தில் அமர்ந்து கேட்டவர்களும், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பார்த்தவர்களும், இணையத்தில் பார்த்தவருமாகப் பல லட்சம் பேரிடம் கவிதை
போய்ச்சேர்ந்ததில் நண்பர்களின் உற்சாக வாழ்த்து மழையில் 14-04-2019 முழுவதும் நனைந்து மகிழ்ந்தேன்!
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின்
இணையப் பக்க இணைப்பு -
(சரியாக 31ஆவது நிமிடத்திலிருந்து நம் கவிதை!)
பிறகு --
இதோ , இப்போது, நமது கவிதையை –நம்மிடம்
ஏதும் சொல்லாமலே- உரிமையோடு, காணொலியாக்கி
அந்த விவரத்தை நமக்கு அனுப்பிய நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும்
வணக்கமும்.
அந்த நமது கவிதை-காணொலி இணைப்பு இதோ-
நம்மால் இயன்றதை
விதைத்துக் கொண்டே இருக்கிறோம்!
பற்பல இடங்களில் அது
முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது
என்பதற்கு,
இந்த நமது கவிதையே சான்றாக இருக்கிறது!
நன்றி நன்றி நண்பர்களே!
வேறென்ன சொல்ல?
முளைப்பு சிறிது நாளாகலாம்... ஆனால் அதில் உள்ள கலாம் நிரந்தர விருட்சம் பெறும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குநீங்கள் விதைத்த எத்தனையோ விதைகள் அன்றும், இன்றும்,என்றும் உங்கள் பெயர் சொல்லும் அண்ணா!!
பதிலளிநீக்குபாராட்டுகள் அண்ணா!
பதிலளிநீக்குவாழ்த்துகள் அண்ணா ...
பதிலளிநீக்குஉங்கள் கவிதைக்காக இன்று ஸ்டாலின் பேசியதைக் கேட்டேன்! தோழருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு