“என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னச்சாமி” என்று சாமியின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைப் பிரித்து
வரும் சுயநல வாதிகளுக்குச் சொல்லுங்கள் -
மக்கள் என்றும் ஒற்றுமை விரும்பிகள்தான் என்பதை!
அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் நீண்ட நெடிய வரலாற்றுப்
பாரம்பரியத்தின் அடிநாதமாக –சாதி மதம் பாராத –மக்கள் ஒற்றுமை விரும்பிகள்தான்!
‘அஞ்சு விரல்ல ஏத்த இறக்கம்
இருந்தாலும் உள்ளங்கையி எல்லாருக்கும் ஒண்ணுதானே’ என்னும் உணர்வோடுதான் மக்கள் என்றும் இருக்கிறார்கள் என்பது, தமிழ் இலக்கியக் கண்ணாடியில் கொஞ்சம் கால
ஏடுகளைப் புரட்டிப் பார்த்தாலே தெரியும். பார்ப்போம் வாருங்களேன்...?!?!