முகத்தில் அறையும் எதிர்க்கேள்விகள்!



அவர்கள் கேள்வியும் 
அருணன் எதிர்க்கேள்வியும்

இந்து(த்துவ) நண்பர்கள் 
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,                
மாடு வெட்டுவது யார் பண்பாடு?” என கேள்வி எழுப்பி 
விளம்பரம் செய்து வருகின்றனர். 


து பற்றி,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான 
பேராசிரியர் அருணன் அவர்களின்                              

முகநூல் பதிவு.........



"மாட்டுப் பொங்கல் தமிழர் பண்பாடு
மாடு வெட்டுதல் யார் பண்பாடு?"-
என்று சுவர் விளம்பரம் செய்திருப்போரே..!

ஆடுமாடு வளர்ப்பதும் தமிழர் பண்பாடே
ஆட்டுக்கறி மாட்டுக்கறி சாப்பிடுவதும்
தமிழர் பண்பாடே.
ஆனால்...ஆனால்

அனைவருக்கும் கல்வி என்றது
தமிழர் பண்பாடு
பூணூல் போட்டவருக்கே கல்வி
என்றது யார் பண்பாடு
?

விதவைக்கு மறுமண உரிமை தந்தது
தமிழர் பண்பாடு
மொட்டையடித்து மூலையில் உட்கார
வைத்தது யார் பண்பாடு
?

கோயிலைக் கட்டியது தமிழர் பண்பாடு
அங்கே பிராமணர்தாம் அர்ச்சகர்
என்பது யார் பண்பாடு
?

குலதெய்வத்திற்கு ஆடு கோழி படைப்பது
தமிழர் பண்பாடு
அங்கும் பொங்கல் புளியோதரை என்பது
யார் பண்பாடு
?

இந்து-முஸ்லிம் ஒற்றுமை தமிழர் பண்பாடு
விநாயகர் ஊர்வலம் என்று கலவரம்
செய்வது யார் பண்பாடு
?

கன்றுக்கு பால் தருவது தமிழர் பண்பாடு
யாகத்தில் நெய்யை வீணாக்குவது
யார் பண்பாடு
?

திருக்குறள் எழுதியது தமிழர் பண்பாடு
மனுஸ்மிருதி சொன்னது யார் பண்பாடு
?

பொங்கல் விழா தமிழர் பண்பாடு
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது
யார் பண்பாடு
?

பதில் சொல்லுவீரா கலவரவாதிகளே..?

-- அருணன்
 
நன்றி – அருணன் அவர்களின் முகநூல் பதிவு

4 கருத்துகள்: