டூப் யாரு? நாயகன் யாரு? (காணொலி)ரெண்டடி ஸ்டூலில் இருந்து குதிப்பதற்கே டூப் கேட்பவர்கள் 200அடி உயர மாடியிலிருந்து குதிக்க எலிகாப்டரே கேட்பார்கள்! ஆனால் உண்மையாகக் குதிப்பவரை டூப் என்றும், குதிப்பது போல நடித்துவிட்டு ஸ்டூலில் இருந்து “கஷ்டப்பட்டு” இறங்கி வருவபரைப் பெரீய நாயகன் என்றும் நாம்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!

அதாவது உண்மை நடிப்பாகவும்,
நடிப்பே உண்மையாகவும் புரிந்துகொள்ளப்பட்டு
நாசமாய்ப்போன நாடுதானே நம் நாடு?

எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்வார்கள்-
‘A man, great man, who was ruling over the cine field for 20 years 
and was acting as the CM for 10 years’


இந்த ட்ரக் நாயகனைப் பற்றி அறிந்ததும் இதெல்லாம் ஏனோ நமக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது போங்க…!

உண்மையான வீர நாயகர்கள் பெயரைக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்துவிடுகிறார்கள் இல்ல..?
இது ஒன்றும் தத்துவமில்லிங்க …
இதோ ஒரு நடப்புச் செய்தி –
போயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்ட
தை அடுத்து அதனைத் தரையிறக்க டிரக் சாரதி உதவியுள்ளமை உலகில் பலரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
விமானம் விமான நிலையத்தை அடையும் போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார்.
அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது. ஆனால் தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பும் இருந்தது. ஆனால் எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தால் அது விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால் எரிவதற்குப் பெரிதும் உதவும். இதனால் எரிபொருள் காலியாகும் வரை வானில் சுற்றியது விமானம்.
இதற்கிடையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒரு திட்டத்தைப் போட்டது. அதுதான் இறுதியில் கைகொடுத்துள்ளது.
அதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனைத் தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர். ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்ய வேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமானம் பாதை மாற வாய்ப்புகள் உண்டு.
அத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும்.
நிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். எல்லோரும் இவரை ஒரு ஹீரோ என்று பாராட்டினார்கள்.

பல ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுக்க வரிசை கட்டி நின்றது. ஆனால் அவர் எதற்கும் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம். தன்னை ஒரு ஹீரோ என நான்  நினைக்கவில்லை என்று கூறிய அவர் இது தனது கடமை என்று சொல்லியுள்ளார்.

பிறர் செய்யும் காரியங்களையே தாம் செய்வதாகச் சொல்லித் திரியும் மனிதர்கள் மற்றும் TV வானொலிகளில் பேச அலைந்து திரியும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். உண்மையானவர்.
காணொலி இணைப்பு - https://www.youtube.com/watch?v=MX-fuszw9F0
(நன்றி – காண்செவிக் குழுக் காணொலி- Whatsaap Shared Video)

7 கருத்துகள்:

 1. முன்னரே பார்த்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் பார்த்தேன். தன் உயிரைப் பணயம் வைத்து பலரின் உயிரைக் காப்பாற்றிய மனிதருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. விளம்பரம் தேடும் வியாபார உலகில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வியத்தகு சாதனை புரிந்த அந்த ட்ரக் ஊர்தி ஓட்டுநர் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்.

  பதிலளிநீக்கு
 3. நான் அசாதாரணமானவையாக நினைக்கும்ம் செயல்களை தம் அன்றாட வாழ்வில் மிகவும் சாதாரணமாக செய்து விட்டுப் போகிறார்கள் இவர்கள்.

  பதிலளிநீக்கு
 4. It's an advertisement...
  https://www.adweek.com/brand-marketing/ad-day-nissan-135440/
  http://wafflesatnoon.com/plane-lands-on-truck/

  பதிலளிநீக்கு
 5. நிசான் ட்ரக் ஓட்டுனர் சமயோசிதமாகச் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 6. காணொலி விளம்பரத்திற்காக ஒரு பொய்யானாலும், நடிப்பை போற்றி துதிக்கும் எங்களுக்கு பதிவில் நீங்க சொன்ன கருத்து சரியானதே.

  பதிலளிநீக்கு