கேரள வெள்ளம் நடத்தும் பாடம்!


இப்பதிவு எனதன்று. “பூவுலகின் நண்பர்கள்” இணையத்தில் வந்ததாகக் காண்செவி(whatsaap)குழுவில் வந்தது. மிகவும் சிறப்பாக, நாமனைவரும் யோசிக்க வேண்டிய செய்தியாக இருப்பதால் இங்குப் பகிர்கிறேன்.

முகத்தில் அறையும் எதிர்க்கேள்விகள்!



அவர்கள் கேள்வியும் 
அருணன் எதிர்க்கேள்வியும்

இந்து(த்துவ) நண்பர்கள் 
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,                
மாடு வெட்டுவது யார் பண்பாடு?” என கேள்வி எழுப்பி 
விளம்பரம் செய்து வருகின்றனர். 


து பற்றி,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான 
பேராசிரியர் அருணன் அவர்களின்                              

முகநூல் பதிவு.........

இறந்தபிறகும் கலைஞர்...






இடஒதுக்கீட்டுப் போராட்டம்
தொடரவேண்டிய அவசியத்தை,
இறந்தபிறகும் உணர்த்திச் சென்ற
கலைஞர் அவர்களுக்கு
எனது இதயாஞ்சலி!
-நா.முத்துநிலவன்

விமானம்தாங்கி ட்ரக்!!! நம்மை முட்டாளாக்கிய ஒரு விளம்பர ஏமாற்று!!!!



அவசரமாகத் தரையிறங்கும் ஒரு விமானத்தை ட்ரக்கில் போய்க் காப்பாற்றும் (நமது முந்திய பதிவின்) வீரசாகச வீடியோ உண்மையில் நடந்ததல்ல! ட்ரிக் விளம்பரமாம்! 
அப்படின்னா இது - ட்ரிக் ட்ரக்!

டூப் யாரு? நாயகன் யாரு? (காணொலி)



ரெண்டடி ஸ்டூலில் இருந்து குதிப்பதற்கே டூப் கேட்பவர்கள் 200அடி உயர மாடியிலிருந்து குதிக்க எலிகாப்டரே கேட்பார்கள்! ஆனால் உண்மையாகக் குதிப்பவரை டூப் என்றும், குதிப்பது போல நடித்துவிட்டு ஸ்டூலில் இருந்து “கஷ்டப்பட்டு” இறங்கி வருவபரைப் பெரீய நாயகன் என்றும் நாம்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!

அதாவது உண்மை நடிப்பாகவும்,
நடிப்பே உண்மையாகவும் புரிந்துகொள்ளப்பட்டு
நாசமாய்ப்போன நாடுதானே நம் நாடு?

எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்வார்கள்-
‘A man, great man, who was ruling over the cine field for 20 years 
and was acting as the CM for 10 years’