“வீதி-50” பொன்விழாவில் சிறு மாற்றம்…






புதுக்கோட்டை வீதி கலைஇலக்கியக் களத்தின் 50ஆவது விழா -பொன்விழா- ஏற்பாடாகியுள்ளது.
வரும் 29-4-2018 ஞாயிறு காலை 9.30 மணி
புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில்

 நடைபெறவுள்ளது.
வீதிக்கு விதையூன்றிய தமிழறிஞர் 
  முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்  
தலைமை தாங்குகிறார்கள். 
வீதி-50ஐ ஒட்டி, வீதி நண்பர்கள் 
மற்றும் நண்பர்களின் நண்பர்கள் 50பேர் 
உடல்தானம், கண்தானம் செய்ய முன்வந்துள்ளனர். அவர்களின் ஒப்புதல் படிவத்தைப் பெற்று, வாழ்த்துரையும் வழங்குகிறார்கள்.
(அந்தப் பட்டியலை அடுத்த பதிவில் வெளியிடுவேன்)
 


விழா நடக்கும் நாள் பாரதிதாசன் பிறந்தநாள் என்பதால், தற்போதைய தமிழகத்தில் பாரதிதாசன் பற்றிப் பேச இவரைவிடப் பொருத்தமான தமிழர் இல்லை எனும் முடிவில்,
சூலூர் பாவேந்தர் பேரவை இயக்குநர்
புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் சிறப்புரையாற்றுவதோடு,
வீதி படைப்பாளிகளின் “வீதி-50” எனும்  மலர்த்தொகுப்பையும் வெளியிடுகிறார்கள்!
(வெளியீடு – மேன்மை, சென்னை
அற்புதமாக வந்துள்ளது.

வந்து வாங்கி, படித்துப் பாருங்கள்!

---- ---- ----- ----- 
வீதி முன்னோடிகளில் ஒருவரும்,ஓவியருமான
கவிஞர் அரிமளம் பவல்ராஜ் அவர்கள் முன்னெடுப்பில் வீதிக்கவிஞர்கள் 50பேரின் 
50கவிதை-ஓவியக் காட்சி நடக்கிறது.

வீதியின் 50கூட்ட நிகழ்ச்சிகளைக் காட்டும் நிழற்படக்கண்காட்சியும் உண்டு!
ஒளி ஓவியர் புதுகை செல்வா

பொறுப்பேற்றுக் கொண்டுவருகிறார்!
 
இவ்விரண்டையும் திறந்து வைத்து,
புதுக்கோட்டையின் கீர்த்தி,
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்
உரையாற்றுகிறார்கள்.

வீதி-50 பொன்விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்வுசெய்யப்படும் கட்டுரை, கவிதை எழுதிய மாணவர், பெண்கள், இளைஞர் மற்றும் பொது எனும் நான்கு பிரிவுகளில் படைப்பாளிகளுக்குப் பரிசுவழங்கி
இளைய படைப்பாளிகளை நான் வாழ்த்துகிறேன்
(“ரோஸ்” எனும் இயற்கை விவசாய மைய இயக்குநர் திரு ஆதப்பன் அவர்கள் வர இயலாத சூழலைத் தெரிவித்ததால், நான்…)




வீதியின் கடந்த 49கூட்டத்தில் நடந்த

பயண அறிக்கையை

ஒருங்கிணைப்பாளர்
கவிஞர் மு.கீதா வாசிக்கிறார் 
வீதி நண்பர்களின் கடந்த இரண்டு வாரக்          கடும் உழைப்பில் உருவாகியுள்ள விழா இது!

வீதி நண்பர்களின் 50ஆவது சங்கமம்!
பழைய நண்பர்களும்  புதிய நண்பர்களும்
நண்பர்களின்  நண்பர்களுமாக

வீதி சிறக்க  வருக! வருக!
------------------------------------------------- 
முன்னதாக வருவோர்க்கு 
வழக்கம்போல ஒரு சிறு நூல் பரிசு 
காத்திருக்கிறது
------------------------------------------------------------------

6 கருத்துகள்:

  1. சிறு மாற்றமாயினும் சிறப்பானதே.தடைகளே புதிய முனைப்பிற்கு படிக்கல். வீதி 50 சிறப்பாகவே அமையும்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் ஐயா. முன்னரே தெரிவித்தபடி நான் வர இயலாத சூழல்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தமிழ் வீதி சிறப்பு: 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' -பாவேந்தர் பாரதிதாசன்."வீரியமிக்க திசையில்-வீதி" மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. விழா பெருவெற்றி
    குறிப்பாக
    முத்தாய்ப்பாக
    அறிமுகமான கவிஞர் தமிழ்வாணன் ..
    வாவ்

    பதிலளிநீக்கு
  5. விழா பெருவெற்றி பெற்றது அறிந்து மகிழ்ந்தேன் ஐயா

    பதிலளிநீக்கு