“கக்கூஸ்” ஆவணப்பட “முன்னோட்டம்” (Trailor) காணொலி

“கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர்
வழக்குரைஞர் திவ்ய பாரதி(25)
அண்மையில் என்னை மிகவும் பாதித்த
கக்கூஸ்ஆவணப்படத்தின்முன்னோட்டம்” (Trailor) காணொலி  கிடைத்தது. அவசியம் பார்க்க வேண்டுகிறேன்-
(அடுத்த வரியில் உள்ள இணைப்பின் 
The Hindu - Sowmya Rajendran
ஆங்கிலக் கட்டுரையின்  இறுதியில் வரும்)


இந்த ஆவணப் பட முன்னோட்டத்தின் இறுதியில் வருவதுபோல படம் டிசம்பரில் வரவில்லை. எத்தனை தடைகள்! படப்பிடிப்பு நடந்த ஒன்றரை ஆண்டுகளின் இடையில் எத்தனை சாவுகள்! அதற்கு நிவாரணம் கிடைக்க எத்தனை எத்தனை போராட்டங்கள்!.. எல்லாம் படத்தில் வந்து நம்மைப் பதறவைக்கின்றன.. மதுரை மாட்டுத்தாவணியில் 
(ஆனால் எந்த ஊடகமும் இதைக் காட்டலியே????!!!???)
இயக்குநர் திவ்ய பாரதியுடன்
“இடப்பக்கம்”
கக்கூஸ் ஆவணப்படக் குழுவினர்
சற்றே பொறுத்திருங்கள்
இன்னும் ஒரு வாரத்தில் டி.வி.டி.கிடைக்கும்.
தொடர்பு கொள்ள -
திவ்யா முகநூலுக்கு வாருங்கள் -



ஒரு டிவிடி பிரதி விலை -  ரூ.100

திவ்யா தன் வேலையை  முடித்துவிட்டார்.
இனி, நாம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க
நம் வேலையைத் தொடங்க வேண்டும்.

8 கருத்துகள்:

  1. மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம் ஐயா

    பதிலளிநீக்கு
  2. திவ்யா அவர்களின் இந்த ஆவணப்பட முயற்சி பற்றி முன்பே விகடனில் நேர்காணல் வந்திருந்தது. அப்பொழுதே தெரியும், இது கண்டிப்பாகப் பல அதிர்வலைகளை எழுப்பும் என்று. திவ்யபாரதி வேறு யாருமில்லை, ஈழப் பிரச்சினைக்காக நடந்த மாணவர் போராட்டத்தின் இரண்டு தலைவர்களில் ஒருவர். இவருக்கு இருக்கும் அரசியல், தமிழ், சமூக அறிவுக்கும் அக்கறைக்கும் கண்டிப்பாக இவர் எதிர்காலத்தில் மிகப் பெரிய மாற்றங்களை நிகழ்த்துவார் எனும் நம்பிக்கை இருக்கிறது. இவர் அரசியலுக்கு வர வேண்டும். முன்பு போல் அன்றி, இப்பொழுது பிரபலங்கள் பலரையும் இணையத்திலேயே சந்திக்க முடிகிறது. எனவே, இந்த ஆவணப்படத்தை இணையம் மூலம் அவர்கள் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், குறுவட்டு விலை குறிப்பிடப்பட்டிருக்கிறதே! எனில், இது யூடியூபில் வெளியிடப்படவில்லையா? இருந்தாலும் பாதகமில்லை, முடிந்தளவு அவருடைய இந்தப் பேருழைப்புக்கும் பெருமுயற்சிக்கும் பலன் கிடைக்கச் செய்வோம்! இது பற்றி எழுதியமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. இதுவரை இந்த மனித கொடுமையை தடுப்பதிற்காக எந்த தமிழ் அரசியல்வாதியும் அவசர சட்டம் கொண்டுவந்து இதை நிறுத்த முயற்சித்தது கிடையாது. காரணம் மக்களது சம்மதத்துடன் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்க்கெதிராக அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் போற்றதக்கவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. நெடுவாசல் குறித்த தங்களின்
    பதி(லு)வுக் காக காத்திருக்கிறோம்.தளராத நம்பிக்கையோடு...!

    பதிலளிநீக்கு
  5. நெடுவாசல் நிலை யறிய பேராவலுடன் உள்ளோம்.., தங்களின் பதிவை எதிர் நோக்கி..

    பதிலளிநீக்கு
  6. இது போன்ற ஆவணப்படங்கள் மக்களைச் சென்றடையச் செய்ய வேண்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. படம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று ஒரு செய்தி படித்தேன்

    டிவிடி ஒருவரிடம் இருந்தாலும் தடைகள் செயலற்றுவிடும்

    பதிலளிநீக்கு